ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

தாயே வாழி


அன்பே எங்களின் அன்னை பாரதம்
அஹிம்ஸைக்குப் பலனாய் வாய்த்த பாரதம்
சண்டையைக் காட்டிலும் சாந்தி வலியதென
சண்டாளர்க்கு காட்டிய சத்திய பாரதம் 

போரொன்று இங்கே நிகழ்ந்தது அன்று
பாரினில் பாரத தேவியைக் காக்க
ஊரிலும் வீட்டிலும் உள்ளவ ரெல்லாம் 
கேடுடை வெள்ளையர் நாட்டை விட்டகல 



கத்தியும் தொட்டிடாது ரத்தமும் சொட்டிடாது
கத்தினார் வந்தே மாதரம் என்று 
கபடமும் இல்லாது பகட்டும் கொள்ளாது
கதரினில் போரிட்டு வென்றனர் அன்று 

பீரங்கி தோட்டா தொட்டது பலஉயிரை  
யாரங்கே குருவியின் கூட்டத்தைச் சுட்டது 
பாரெங்கும் பலநாட்டார் பதறிய வண்ணம் 
பாரதத்தி லன்று நடந்ததொரு யுத்தம் 


நீந்திக் கரைசேரா நீசர்க்கு மத்தியில் 
காந்திமகான் கண்ட கண்ணொளி சுதந்திரம் 
ஏந்தித் தோள்மீதினில் சுமந்தே நாமெல்லாம்
இத்தரை மீதினில் கொண்டு ஆடுவோம்

பச்சை புல்வெளி ஆடையாய்க் கொண்டு
பவளச் செங்காவியைச் சிந்தூர மிட்டு
பளிச்சிடும் வெள்ளை உள்ளம் நீகொண்டாய் 
பாரதத்தாயே பல்லாண்டு வாழி 

நூறுகோடி பிள்ளைகள் உண்டு உன்மடியில்
வீறுகொண்டு காப்போம் உன்புகழ் புவியில் 
வேறு நூறு மொழிமதம் கலாச்சாரம் இங்கே 
ஆறு போல பிரிந்துசேரும் அன்னைக்கடல் நீ வாழி...


தாயே வாழி என் தாய் நாடே வாழி 
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்

அன்பே எங்களின் அன்னை பாரதம்
அஹிம்ஸைக்குப் பலனாய் வாய்த்த பாரதம்
சண்டையைக் காட்டிலும் சாந்தி வலியதென
சண்டாளர்க்கு காட்டிய சத்திய பாரதம் 

போரொன்று இங்கே நிகழ்ந்தது அன்று
பாரினில் பாரத தேவியைக் காக்க
ஊரிலும் வீட்டிலும் உள்ளவ ரெல்லாம் 
கேடுடை வெள்ளையர் நாட்டை விட்டகல 



கத்தியும் தொட்டிடாது ரத்தமும் சொட்டிடாது
கத்தினார் வந்தே மாதரம் என்று 
கபடமும் இல்லாது பகட்டும் கொள்ளாது
கதரினில் போரிட்டு வென்றனர் அன்று 

பீரங்கி தோட்டா தொட்டது பலஉயிரை  
யாரங்கே குருவியின் கூட்டத்தைச் சுட்டது 
பாரெங்கும் பலநாட்டார் பதறிய வண்ணம் 
பாரதத்தி லன்று நடந்ததொரு யுத்தம் 


நீந்திக் கரைசேரா நீசர்க்கு மத்தியில் 
காந்திமகான் கண்ட கண்ணொளி சுதந்திரம் 
ஏந்தித் தோள்மீதினில் சுமந்தே நாமெல்லாம்
இத்தரை மீதினில் கொண்டு ஆடுவோம்

பச்சை புல்வெளி ஆடையாய்க் கொண்டு
பவளச் செங்காவியைச் சிந்தூர மிட்டு
பளிச்சிடும் வெள்ளை உள்ளம் நீகொண்டாய் 
பாரதத்தாயே பல்லாண்டு வாழி 

நூறுகோடி பிள்ளைகள் உண்டு உன்மடியில்
வீறுகொண்டு காப்போம் உன்புகழ் புவியில் 
வேறு நூறு மொழிமதம் கலாச்சாரம் இங்கே 
ஆறு போல பிரிந்துசேரும் அன்னைக்கடல் நீ வாழி...


தாயே வாழி என் தாய் நாடே வாழி 
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்

சனி, ஆகஸ்ட் 06, 2011

பழகிய ரணம் தான்




பூமியின் சுற்றில் ஒரு சிறிய தடுமாற்றம் 
உறவுகளாய் ஆன உடலில் ஒரு அங்கம் 
வெட்டப்பட்டநிலையில் குருதியுடன் நான்...


விறகாய் காய்ந்துபோன மனசு 
வெட்டையாய் காய்ந்த நிலம் போல 
வாடி வதங்கிய என்முன்னில் 
எல்லாம் சூனியமாய் தெரிய ...


மணம் முடித்து மாலையும் கழுத்துமாய் 
மனை விட்டுப் பிரியும் மகள் 
மருட்சியுடன் கண்களில் ஏக்கத்தை 
சூடிக்கொண்டு 


ஒரு கையில் கணவனையும் 
மறு கையில் தனது உடைமைகளை
பற்றிக்கொண்டு ....


இருபது ஆண்டுகளாய் வலம் வந்த வீதி 
வளைய வந்த வீடு 
வாசம் செய்த தோட்டம் 
வளர்த்து வந்த மரம் செடிகள் 
வளைந்து நின்ற உறவுகளை 
உதறிக்கொண்டு...


மகளின் நினைவுகள் சுழற்காற்றாய்...


பிஞ்சு வயதில் அவள் நடை பழகிய வண்டி
பள்ளியில் பெற்ற மிதிவண்டி
சேர்த்த புளியங்கொட்டைகள் கோலி  
ஸ்பரிசம் காயாத பாத்திரங்கள்
அவள் மடியில் தவழ்ந்த பூனைக்குட்டி 
அவள் உறங்கிய பாய் தலையணை 


இன்று புதிதாய் வெள்ளையடித்த போது 
அவளின் இருப்பும் சேர்த்துத் தான் 
காயக் காய வெள்ளையானதோ
பின்னர் வெறுமையானதோ...  


உறவுகளும் பிணைப்புகளும் 
காகிதத்தால் ஆன சங்கிலி என்றால் 
விட்டுப் பிரியும் அவர்களின் நினைவுகள்
இரும்புச்சங்கிலியாய் இறுக்கமாய்...


தன்னைக் கருணையுடன் தாய் போல வளர்த்து 
தோழியாய் தாதியாய் தன் நிழலாய் நின்ற
தமக்கை இழந்த தம்பி தேம்பிக்கொண்டு 


தேற்ற நினைத்து அவனிடத்தில் சொன்னேன்...


புல்லாங்குழலைக் கொடுத்த 
மூங்கிலின் முனகலைக் கேட்டிருக்கிறாயா 
மலர்களை வழங்கிய வனத்தில் 
மருகுதல் கண்டிருக்கின்றாயா 
பொன்னைப் புறம் தந்த 
மண்ணின் துன்பம் தான் கண்டாயா


மரத்தினைப் பிரிந்து தானே முங்கில் 
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும் 
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும் 
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும் 
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு 

அப்துல்லாஹ்




பூமியின் சுற்றில் ஒரு சிறிய தடுமாற்றம் 
உறவுகளாய் ஆன உடலில் ஒரு அங்கம் 
வெட்டப்பட்டநிலையில் குருதியுடன் நான்...


விறகாய் காய்ந்துபோன மனசு 
வெட்டையாய் காய்ந்த நிலம் போல 
வாடி வதங்கிய என்முன்னில் 
எல்லாம் சூனியமாய் தெரிய ...


மணம் முடித்து மாலையும் கழுத்துமாய் 
மனை விட்டுப் பிரியும் மகள் 
மருட்சியுடன் கண்களில் ஏக்கத்தை 
சூடிக்கொண்டு 


ஒரு கையில் கணவனையும் 
மறு கையில் தனது உடைமைகளை
பற்றிக்கொண்டு ....


இருபது ஆண்டுகளாய் வலம் வந்த வீதி 
வளைய வந்த வீடு 
வாசம் செய்த தோட்டம் 
வளர்த்து வந்த மரம் செடிகள் 
வளைந்து நின்ற உறவுகளை 
உதறிக்கொண்டு...


மகளின் நினைவுகள் சுழற்காற்றாய்...


பிஞ்சு வயதில் அவள் நடை பழகிய வண்டி
பள்ளியில் பெற்ற மிதிவண்டி
சேர்த்த புளியங்கொட்டைகள் கோலி  
ஸ்பரிசம் காயாத பாத்திரங்கள்
அவள் மடியில் தவழ்ந்த பூனைக்குட்டி 
அவள் உறங்கிய பாய் தலையணை 


இன்று புதிதாய் வெள்ளையடித்த போது 
அவளின் இருப்பும் சேர்த்துத் தான் 
காயக் காய வெள்ளையானதோ
பின்னர் வெறுமையானதோ...  


உறவுகளும் பிணைப்புகளும் 
காகிதத்தால் ஆன சங்கிலி என்றால் 
விட்டுப் பிரியும் அவர்களின் நினைவுகள்
இரும்புச்சங்கிலியாய் இறுக்கமாய்...


தன்னைக் கருணையுடன் தாய் போல வளர்த்து 
தோழியாய் தாதியாய் தன் நிழலாய் நின்ற
தமக்கை இழந்த தம்பி தேம்பிக்கொண்டு 


தேற்ற நினைத்து அவனிடத்தில் சொன்னேன்...


புல்லாங்குழலைக் கொடுத்த 
மூங்கிலின் முனகலைக் கேட்டிருக்கிறாயா 
மலர்களை வழங்கிய வனத்தில் 
மருகுதல் கண்டிருக்கின்றாயா 
பொன்னைப் புறம் தந்த 
மண்ணின் துன்பம் தான் கண்டாயா


மரத்தினைப் பிரிந்து தானே முங்கில் 
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும் 
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும் 
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும் 
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு 

அப்துல்லாஹ்

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

ஆடு வெள்ளாடு




பொழுதுகள் எப்போதும் பொல்லாப்புடன் கழிய 
புண்பட்ட மனசு மட்டும் புரவிஏறிப் பறக்கிறது
ஆற்று நிரோட்டத்தில் அலைக்கழிந்த சருகினைப்போல் 
அமைதிஇழந்த நானும் அடைவதெங்கே தெரியவில்லை ...

கண்முன்னே புன்னகைத்து கைகுலுக்கி கண்மகிழ்ந்து 
களிக்கும் உறவுகளின் கண்பார்வை காசுநோக்கி 
ஐம்பதின் வாலிபமும் அதன்வழி அனுபவமும் 
கடல்தாண்டி மனசுக்குள் கண்டதெல்லாம் ஏமாற்றமே 

மாதம் பிறந்துவிட்டால் பெற்றோரும் உற்றோரும் 
பெண்ணவளும் பிள்ளை களுக்குமாய் சேர்த்து 
கண்ணைப் போல கருதுவது காசு ஒன்றைத்தான் 
கருவியாய் பறக்கும் அது அன்பின் அடையாளமாய் 

சோலையில் என்சொந்தம் சுகப்பட்டு வாழவேண்டி 
பாலையில் நானும் பகலிரவாய் காய்கின்றேன் 
ஈச்சை மரமேறி என்னுடம்பின் காய்ப்புகளை 
இனிக்கும் அதன் கனிகள் ஒருபோதும் காட்டாது 

நோய்நொடி அண்டாது என்னுறவை நான் காக்க 
சாய்ந்திடும் பொழுது வரை சம்மதித்து பணிசெய்வேன் 
சேர்த்திடும் மணித்துளிகள் சேர்ந்திடும் வரும்படியாய்
சோர்ந்திடும் வேளைகளில் சுகமளிப்பது அதுதானே 

கூடி உறவுற்று களிப்புடனே நான் வாழ 
கோடி ஆசையுண்டு குன்றுபோல் என்மனதில் 
ஆடுமென் ஆட்டம் நின்றால் அச்சாணி கழன்றுவிட்டால்
வாடி நிற்கும் உயிர்களுக்கு வழி யார் காட்டுவது? 

ஆடை புதுநகைகள் அத்தனைக்கும் ஆசைப்பட்டு 
அன்பு உறவுகளை அயல்தேசம் அனுப்புகிறார்

ஒன்று தெரியுமா...

பாகிஸ்தானியும் பெங்காலியுமஎன் பாசமான உறவுகள்
மலையாளியும் மதராசியும் நேசமுள்ள தோழர்கள்

சிக்கன் டிக்காவும் குப்புஸ் ரொட்டியும்
சிக்பிசும் டப்பாவில் செத்த மீன்கறியும் இங்கே 

கொளஞ்ச சோத்துக்கும் கொளத்து மீன்கறிக்கும்
கொஞ்சம் ஏங்குது மனசு ...கொஞ்ச நேரம் தான் ....

பொழுதுகள் எப்போதும் பொல்லாப்புடன் கழிய 
புண்பட்ட மனசு மட்டும் புரவிஏறிப் பறக்கிறது
ஆற்று நிரோட்டத்தில் அலைக்கழிந்த சருகினைப்போல் 
அமைதிஇழந்த நானும் அடைவதெங்கே தெரியவில்லை



பொழுதுகள் எப்போதும் பொல்லாப்புடன் கழிய 
புண்பட்ட மனசு மட்டும் புரவிஏறிப் பறக்கிறது
ஆற்று நிரோட்டத்தில் அலைக்கழிந்த சருகினைப்போல் 
அமைதிஇழந்த நானும் அடைவதெங்கே தெரியவில்லை ...

கண்முன்னே புன்னகைத்து கைகுலுக்கி கண்மகிழ்ந்து 
களிக்கும் உறவுகளின் கண்பார்வை காசுநோக்கி 
ஐம்பதின் வாலிபமும் அதன்வழி அனுபவமும் 
கடல்தாண்டி மனசுக்குள் கண்டதெல்லாம் ஏமாற்றமே 

மாதம் பிறந்துவிட்டால் பெற்றோரும் உற்றோரும் 
பெண்ணவளும் பிள்ளை களுக்குமாய் சேர்த்து 
கண்ணைப் போல கருதுவது காசு ஒன்றைத்தான் 
கருவியாய் பறக்கும் அது அன்பின் அடையாளமாய் 

சோலையில் என்சொந்தம் சுகப்பட்டு வாழவேண்டி 
பாலையில் நானும் பகலிரவாய் காய்கின்றேன் 
ஈச்சை மரமேறி என்னுடம்பின் காய்ப்புகளை 
இனிக்கும் அதன் கனிகள் ஒருபோதும் காட்டாது 

நோய்நொடி அண்டாது என்னுறவை நான் காக்க 
சாய்ந்திடும் பொழுது வரை சம்மதித்து பணிசெய்வேன் 
சேர்த்திடும் மணித்துளிகள் சேர்ந்திடும் வரும்படியாய்
சோர்ந்திடும் வேளைகளில் சுகமளிப்பது அதுதானே 

கூடி உறவுற்று களிப்புடனே நான் வாழ 
கோடி ஆசையுண்டு குன்றுபோல் என்மனதில் 
ஆடுமென் ஆட்டம் நின்றால் அச்சாணி கழன்றுவிட்டால்
வாடி நிற்கும் உயிர்களுக்கு வழி யார் காட்டுவது? 

ஆடை புதுநகைகள் அத்தனைக்கும் ஆசைப்பட்டு 
அன்பு உறவுகளை அயல்தேசம் அனுப்புகிறார்

ஒன்று தெரியுமா...

பாகிஸ்தானியும் பெங்காலியுமஎன் பாசமான உறவுகள்
மலையாளியும் மதராசியும் நேசமுள்ள தோழர்கள்

சிக்கன் டிக்காவும் குப்புஸ் ரொட்டியும்
சிக்பிசும் டப்பாவில் செத்த மீன்கறியும் இங்கே 

கொளஞ்ச சோத்துக்கும் கொளத்து மீன்கறிக்கும்
கொஞ்சம் ஏங்குது மனசு ...கொஞ்ச நேரம் தான் ....

பொழுதுகள் எப்போதும் பொல்லாப்புடன் கழிய 
புண்பட்ட மனசு மட்டும் புரவிஏறிப் பறக்கிறது
ஆற்று நிரோட்டத்தில் அலைக்கழிந்த சருகினைப்போல் 
அமைதிஇழந்த நானும் அடைவதெங்கே தெரியவில்லை

புதன், ஆகஸ்ட் 03, 2011

ஆஜர்பைஜான் சமி யூசுஃப் - கொஞ்சம் கேளுங்களேன்...




செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

ரோங் நம்பர்


இப்படி எல்லாம் நடக்குமா ''கடவுளே ஒரு நம்பர் மாறினதுக்கு ''சாறி சாரி நான் இல்ல ரோங் நம்பர் ''''
அண்ணே கவனம் எல்லோரும் பாருங்க இப்படி நடந்தாலும் நடக்கும் ''யார் குடுத்தாங்க என்று தெரியல ''ஒருவேள இது பத்துக்குள்ள ஒரு நம்பராக இருக்கலாம் '''

ஸ்க்ரு டிரைவரும் கையுமாக....எதிர்கால இந்தியா



புத்தகத்தைச் விரித்துக்கொண்டு 
வாழ்க்கைப் பள்ளியில் இந்த மாணவி 
எழுதுகோலுக்குப் பதிலாக 
பணிமனைக்கருவி அவள்கையில்

சமச்சீர் கல்வி என்று 
சாக்கு ஒன்னு சொல்லிவிட்டு
கல்வி மறுப்பு கொள்கையினை 
கடைபிடிக்கிது அரசு

நமக்கெதுக்கு இந்த வம்பு 
நாடு கெட்டால் நமக்கு என்ன
பள்ளிக்குப் போனா 
படிக்கதுக்குப் பாடமில்ல 
பணிமனைக்குப் போனா
கஞ்சிக்குக் காசு பஞ்சமில்ல

போன வருசத்துப் பாடம்
போனா வருசத்து வாத்தி
போனா வருசத்து உடுப்பு 
போனா வருசத்து செருப்பு 
எல்லாமே இலவசம் தான்...

எங்க? இந்த வருஷம்....
புத்தகத்துக்கே துப்பில்லே..


அப்துல்லாஹ்





புத்தகத்தைச் விரித்துக்கொண்டு 
வாழ்க்கைப் பள்ளியில் இந்த மாணவி 
எழுதுகோலுக்குப் பதிலாக 
பணிமனைக்கருவி அவள்கையில்

சமச்சீர் கல்வி என்று 
சாக்கு ஒன்னு சொல்லிவிட்டு
கல்வி மறுப்பு கொள்கையினை 
கடைபிடிக்கிது அரசு

நமக்கெதுக்கு இந்த வம்பு 
நாடு கெட்டால் நமக்கு என்ன
பள்ளிக்குப் போனா 
படிக்கதுக்குப் பாடமில்ல 
பணிமனைக்குப் போனா
கஞ்சிக்குக் காசு பஞ்சமில்ல

போன வருசத்துப் பாடம்
போனா வருசத்து வாத்தி
போனா வருசத்து உடுப்பு 
போனா வருசத்து செருப்பு 
எல்லாமே இலவசம் தான்...

எங்க? இந்த வருஷம்....
புத்தகத்துக்கே துப்பில்லே..


அப்துல்லாஹ்



பேசன் சோ


யக்கா இங்க எங்க போறிய ????


பேசன் சோவோ ரேசன் கடையோ
வேஷம் போட்ட வெட்டிக் கூட்டம்  
வேடிக்க பாக்க வீணர்  படையும்
காசப்போட்டு கரியாக்கி 
காலநேரம் பழுதாக்கி 
போதை மீறிப் போனதனால்
பாதை தெரியா பயணத்தில் 
மாதை மங்கையை மாட்டைப்போல் 
மேடையேற்றி காட்டுகிறார் எதை?
மண்ணின் மானம் மங்கையன்றோ
மாசறு தாய்மையும் மங்கையன்றோ
கண்ணியம் காருண்யம் கருணை இவை
காட்டும் வடிவமும் பெண்களன்றோ 
சூட்டுக் கோலை எடுத்துவந்து
நங்கையர் மானம் காக்கவேண்டி 
நடு முதுகில் இவர்க்கெல்லாம் 
நாலு சுடு போடப் போறேன்...  
வர்ட்டா...  . 

யக்கா இங்க எங்க போறிய ????


பேசன் சோவோ ரேசன் கடையோ
வேஷம் போட்ட வெட்டிக் கூட்டம்  
வேடிக்க பாக்க வீணர்  படையும்
காசப்போட்டு கரியாக்கி 
காலநேரம் பழுதாக்கி 
போதை மீறிப் போனதனால்
பாதை தெரியா பயணத்தில் 
மாதை மங்கையை மாட்டைப்போல் 
மேடையேற்றி காட்டுகிறார் எதை?
மண்ணின் மானம் மங்கையன்றோ
மாசறு தாய்மையும் மங்கையன்றோ
கண்ணியம் காருண்யம் கருணை இவை
காட்டும் வடிவமும் பெண்களன்றோ 
சூட்டுக் கோலை எடுத்துவந்து
நங்கையர் மானம் காக்கவேண்டி 
நடு முதுகில் இவர்க்கெல்லாம் 
நாலு சுடு போடப் போறேன்...  
வர்ட்டா...  . 

திங்கள், ஆகஸ்ட் 01, 2011

பன்னிரண்டில் மகுடம் - ரமலான்



மாதங்கள் பன்னிரண்டில் மகுடம் தரித்த 
மானுடம் செழிக்க வந்த சுவனத்து பாதை 
தன்னுடன் அடியானை தக்கவைத்துக்கொள்ள
தயாபரன் தந்த தரமிக்க பரிசு 

எழுபது தாயினும் கருணையில் மிகைத்த
ஏக இறைவனை நினைத்துப் பசித்து 
நித்திரை கலைத்துநின் றழுது தொழுது
நிரந்தர சுவனம் குறிக்கோள் கொண்டு


இம்மை வாழ்வில் பட்ட துயரெலாம் 
இதயம் உருகி இரு விழி நீராய் 
செய்த பாவம் பழிகளையெல்லாம்   
சேர்த்துக் களைந்திடும் சிர்மிக்க மாதம் 

மன்னுயிர் செழித்து மாண்புடன் வாழ
மக்கமா நகரில் முகமது நபிக்கு
வானவர் ஜிப்ரயில் சிரகோடணைத்து
வான்மறை குர்ஆன் வழங்கிய மாதம்
   
வருந்திடும் ஏழை வாட்டம் போக்கிட
வகுத்தொரு கணக்கினை வரும்படியிலிருந்து
வாரி வழங்கிஅவர் வறுமை போக்கிட 
வசந்தம் விசிடும் சக்காத் மாதம்  


ரமலான் மாதம் ரஹ்மத் மாதம்
ரய்யான் வாசலில் ரட்சிக்கும் மாதம் 
மெய்யான இன்பத்தை மென்மேலும் ஈந்து
கையோடு நம்மைக் கரை சேர்க்கும் மாதம்.

நோன்பின் பயனை நோன்புற்று அடைவோம் 
நன்மை ஈந்திடும் நற்செயல் புரிவோம் 
தீமை உணர்ந்து தீயதைத் தவிர்ப்போம் 
தூய நாயனை தினமும் துதிப்போம்...


மாதங்கள் பன்னிரண்டில் மகுடம் தரித்த 
மானுடம் செழிக்க வந்த சுவனத்து பாதை 
தன்னுடன் அடியானை தக்கவைத்துக்கொள்ள
தயாபரன் தந்த தரமிக்க பரிசு 

எழுபது தாயினும் கருணையில் மிகைத்த
ஏக இறைவனை நினைத்துப் பசித்து 
நித்திரை கலைத்துநின் றழுது தொழுது
நிரந்தர சுவனம் குறிக்கோள் கொண்டு


இம்மை வாழ்வில் பட்ட துயரெலாம் 
இதயம் உருகி இரு விழி நீராய் 
செய்த பாவம் பழிகளையெல்லாம்   
சேர்த்துக் களைந்திடும் சிர்மிக்க மாதம் 

மன்னுயிர் செழித்து மாண்புடன் வாழ
மக்கமா நகரில் முகமது நபிக்கு
வானவர் ஜிப்ரயில் சிரகோடணைத்து
வான்மறை குர்ஆன் வழங்கிய மாதம்
   
வருந்திடும் ஏழை வாட்டம் போக்கிட
வகுத்தொரு கணக்கினை வரும்படியிலிருந்து
வாரி வழங்கிஅவர் வறுமை போக்கிட 
வசந்தம் விசிடும் சக்காத் மாதம்  


ரமலான் மாதம் ரஹ்மத் மாதம்
ரய்யான் வாசலில் ரட்சிக்கும் மாதம் 
மெய்யான இன்பத்தை மென்மேலும் ஈந்து
கையோடு நம்மைக் கரை சேர்க்கும் மாதம்.

நோன்பின் பயனை நோன்புற்று அடைவோம் 
நன்மை ஈந்திடும் நற்செயல் புரிவோம் 
தீமை உணர்ந்து தீயதைத் தவிர்ப்போம் 
தூய நாயனை தினமும் துதிப்போம்...
Related Posts Plugin for WordPress, Blogger...