குழந்தைகளுக்காக உழைத்தேன்!' பார்க்கிங் வேலை பார்த்து தன் பிள்ளைகளை பட்டதாரிகளாக்கி உள்ள ராணி: விழுப்புரம் மாவட்டம் தான் என் சொந்த ஊர். ஆசைபட்டு காதலித்து, ராஜேந்திரன் என்பவரை திருமணம் செய்தேன். எங்களை இழிவுபடுத்தியவர்கள் முன் கவுரவமாக காப்பாற்றுவார் என நம்பினேன். ஆனால், என் கனவு பொய்யானது.என் மாமனார், மிலிட்டரியில் வேலை பார்த்தவர் என்பதால், வாரிசு அடிப்படையில், அண்ணா சாலையில், காதிபவன் வளாகத்தில், பார்க்கிங் வேலை கொடுக்கப்பட்டது. அவர் சம்பாதித்து எங்களை காப்பாற்றுவார் என நினைத்தேன். மாறாக, குடிபழக்கத்திற்கு ஆளாகி, ஊதாரித்தனமாக பணத்தை செலவு செய்தார்.எனக்கு மூன்றாவது குழந்தையும் பிறந்தது. அப்போது தான், வாழ்க்கையின் மீது பயம் ஏற்பட்டது. தோட்ட வேலைக்கு போனேன். குடும்பம் நடத்தவே கஷ்டமாக இருக்கும். அதன்பின், ஒரு யோசனை வந்தது... கார்ப்பரேஷனில், என் கணவர் வேலையை கேட்டேன். முதலில் மறுத்த அதிகாரி, என் மீது நம்பிக்கை வைத்து வேலை கொடுத்தார்.வெயில், மழை பாராமல் வேலை செய்தேன். 350 ரூபாயில் ஆரம்பித்த என் சம்பளம் தற்போது, 3,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதிலேயே, என் குழந்தைகளையும் படிக்க வைத்து விட்டேன். இந்த வேலையில் பல கஷ்டங்கள் இருந்தாலும், என் குழந்தைகளுக்காக அதை செய்தேன்.இப்போது என் மகன், மகள் வேலை செய்தாலும், என்னால் இந்த வேலையை விட முடியாது. காரணம், ஆரம்ப காலத்தில், இந்த வேலை என் குடும்பத்தை காப்பாற்றியது. இந்த வேலை எனக்கு, வாழ்க்கை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் கொடுத்துள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக