சனி, ஜூன் 11, 2011

மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை

 மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை

Post by அப்துல்லாஹ் on Thu Jun 02, 2011 10:31 am
சாத்தான்குளம் அருகே மகன் இறந்த துக்கம் தாளாமல் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் சேர்மத்துரை மனைவி தங்கமணி. இவரது மகன் பிரபாகர், கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு நோய் காரணமாக இறந்து போனார். அவர் இறந்ததிலிருந்து தங்கமணி மனநிலை பாதிக்கப்பட்டு நான் அவனோடு சென்று விடுவேன் என அடிக்கடி கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மகனுடைய கல்லறைக்குச் சென்ற தங்கமணி அங்கு தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல்துறை ஆய்வாளர் மீனாட்சி நாதன் விசாரித்து வருகிறார்.

நன்றி இந்நேரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...