சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கான சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்களை இம்மாதம் 22ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். தமிழக அரசு அமைத்த சமச்சீர் கல்வி ஆய்வுக்குழு பரிந்துரைப்படி ஏதேனும் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்ய வேண்டியதிருந்தால் அதை தெளிவுபடுத்தும் வகையில் குழு அமைத்து மாற்றம் செய்து துணைபட்டியல் இணைப்பாக தயார் செய்து 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சமச்சீர் கல்வி மேல்முறையீடு - தமிழக அரசுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
சமச்சீர் கல்வி திட்டம் இந்த கல்வியாண்டிலிருந்தே தொடர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளது. அரசின் மேல்முறையீடு செய்யும் நிலைப்பாட்டைத் தவிர்க்க வேண்டுமென்று அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கே.வி. தங்கபாலு (காங்கிரஸ்): "இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல் செய்ய வேண்டும், புத்தகங்களை இந்த மாதம் 22ஆம் தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்" என்ற தீர்ப்பு மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சி தருகிறது. உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அரசுக்கு வெற்றியோ தோல்வியோ அல்ல. எனவே, கெளரவம் பார்க்காமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி): இந்திய கம்யூனிஸ்டு கட்சி சமச்சீர் கல்வி தேவை என்பதனையும் காலதாமதமின்றி நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பு, சமச்சீர் கல்வியை நடைமுறைபடுத்த வேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்டதோடு, கடந்த ஜுன் மாதம் துவங்கிய பள்ளிகளில் 60 நாட்கள் ஆனபிறகும் புத்தகங்கள் வழங்கப்படாது இருப்பதால், 22ஆம் தேதிக்குள் வழங்கிவிடுமாறு ஆணையிட்டுள்ளது.
பாடதிட்டங்கள் செழுமைப்படுத்தப்பட வேண்டும் என்ற மனுவை ஏற்று, வரும் ஆண்டில் பயன்படுத்திகொள்ளலாம் என தீர்ப்பளித்திருப்பது மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களால் வரவேற்கப்படுகிறது. இந்தத் தீர்ப்பில் தமிழக அரசின் நடவடிக்கைகளைத் தடுப்பதாகவோ குறை காண்பதாகவோ எந்த வாசகமும் இல்லாத நிலையில் மேல் முறையீடு தவிர்க்கப்படவேண்டும் என்ற மக்களின் உணர்வை நாங்கள் வற்புறுத்துகிறோம்.
மருத்துவர் ராமதாஸ்(பா.ம.க): தமிழகத்தில் நடப்பாண்டிலிருந்தே சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பைப் பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. செப்டம்பர் மாதத்தில் காலாண்டு தேர்வு நடத்த வேண்டுமானால் பாடங்களை உடனடியாகத் தொடங்கவேண்டும். இதை உணர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் திட்டத்தைக் கைவிட்டு, தமிழ்நாட்டில் உடனடியாக சமச்சீர் கல்வி திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
தொல்.திருமாவளவன் (விடுதலைச்சிறுத்தைகள்): சமச்சீர்க்கல்வி திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியையும், நீதித்துறையின் மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நீதிமன்ற தீர்ப்பை மதித்து, தமிழக அரசு பெருந்தன்மையோடு இந்தப் பிரச்சனையை அணுக வேண்டும். மேல்முறையீடு செய்யும் நிலைப்பாட்டைத் தவிர்க்க வேண்டுமெனவும், விடுதலைச்சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
சமச்சீர் கல்வி - யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லை : கருணாநிதி!
சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டு முதலே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு யாருக்கும் கிடைத்த வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பு ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில் இத்தீர்ப்பு பற்றி கருத்து கூறியுள்ளா திமுக தலைவர் கருணாநிதி, சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ தோல்வியோ அல்ல.. இத்தீர்ப்பு நடுத்தர - ஏழை மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக அரசு கருத வேண்டும் என்று கூறியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டே சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிர்கால சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டல் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
சமச்சீர் கல்வி - கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி: பொன்முடி
சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் கருணாநிதி வெற்றி பெற்றுள்ளதாக உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:சமச்சீர் கல்வியைப் பொறுத்தவரை கலைஞர் ஆட்சியில் ஒரு சமூக நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இதனை ஜெயலலிதா அரசு எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்தார்கள்.அதற்கு நீதிமன்றம் உடந்தையாக இல்லாமல், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு முதலே ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நிறைவேற்றப்பட வேண்டும் என்று அறிவித்திருப்பதும், 22ஆம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதும் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி.ஆக, சமூக சீர்த்திருத்த திட்டத்தில் கலைஞர் நீதிமன்றத்தின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார். இதுபோன்றவைகளை இந்த அரசு செய்யாமல் நல்ல திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சமச்சீர் கல்வி - தமிழக அரசின் முயற்சிகளை நீதிமன்றம் முறியடித்துள்ளது: ராமதாஸ்
சமச்சீர் கல்வித் திட்டத்தை கிடப்பில் போட தமிழக அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் உயர் நீதிமன்றம் முறியடித்துள்ளது என்ற பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:தர்மத்தின் வாழ்வு தன்னை சூதுகவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லக் காண்போம் என்ற பாரதியாரின் கூற்றுக்கிணங்க, தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை கிடப்பில் போட தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்றம் முறியடித்திருக்கிறது.தமிழ்நாட்டில் நடப்பாண்டிலிருந்தே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.சமத்துவ சமுதாயம் ஏற்பட சமச்சீர்க் கல்விதான் முதல்படி என்பதால், சமச்சீர்க் கல்வியை ஏற்படுத்த பாமக கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி வருகிறது. பாமகவின் முயற்சியால் தான் தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்புக்கும் 6ஆம் வகுப்புக்கும் சமச்சீர்க் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது.ஆனால், புதிதாக பதவியேற்ற அதிமுக அரசு சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக பல வழிகளிலும் முயன்றது. ஆனால் அரசு மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்து, சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.எனினும், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத தமிழக அரசு, சமச்சீர்க் கல்வித் திட்டத்தை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சாபத்திற்கு ஆளாகியுள்ளது.சமச்சீர்க் கல்வித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு கடைப்பிடித்த பிடிவாதப் போக்கினால், கடந்த 2 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்குச் சென்றும், பாடம் படிக்க முடியாமல் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர். பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படாததால் முதல் பருவத் தேர்வு நடைபெறவில்லை. செம்படம்பர் மாதத்தில் காலாண்டுத் தேர்வு நடத்த வேண்டுமானால் அதற்கு இப்போதிலிருந்தாவது பாடங்களைத் தொடங்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்தால்கூட பரவாயில்லை. நாங்கள் எடுத்த முடிவை செயல்படுத்தியே தீருவோம் என்பதுபோல பொறுப்பற்ற வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.சமச்சீர்க் கல்வியை எதிர்த்து ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெளிவாக கூறிவிட்டனர். எனவே மீண்டும் மேல்முறையீடு செய்வதால் எந்தப் பயனும் இல்லை. ஒரு நல்ல அரசுக்கு அதன் முடிவில் பிடிவாதமாக இருப்பதைவிட, மக்கள் நலனைக் காப்பதுதான் முக்கியம். இதை உணர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் திட்டத்தை கைவிட்டு, உயர் நீதிமன்ற அறிவுரைப்படி தமிழ்நாட்டில் உடனடியாக சமச்சீர்க் கல்வித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
சமச்சீர் கல்வி - காலதாமதம் வேண்டாம்: தா. பாண்டியன்
சமச்சீர் கல்வி திட்டத்தை காலதாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிட்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:இந்தியக் கம்யூனிட்ஸ்ட் கட்சி சமச்சீர் கல்வி திட்டம் தேவை என்பதனையும் காலதாமதமின்றி நடைமுறை படுத்த வேண்டும் என்பதனையும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது.நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர்கள் மூலம் சமச்சீர் கல்விக் கொள்கைதான் தங்களது நிலை என்று தமிழக அரசும் உறுதிப்படுத்தி உள்ளது.தற்போது வெளியாகி உள்ள உயர் நீதிமன்ற தீர்ப்பு சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்த வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டதோடு, இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய பள்ளிகளில் 60-நாட்கள் ஆனபிறகும் படிக்க வேண்டிய புத்தகங்கள் வழங்கப்படாது இருப்பதால், குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட பாடபுத்தகங்களை 22ஆம் தேதிக்குள் வழங்கிவிடுமாறு ஆணையிட்டுள்ளது.அதே தீர்ப்பில் பாடத்திட்டங்கள் செழுமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய மனுவை ஏற்று செம்மைபடுத்தலாம் அதை வருகிற ஆண்டில் பயன்படுத்திகொள்ளலாம் என தீர்ப்பளித்திருப்பது, மாணவர்-பெற்றோர்கள், கல்வியாளர்களால் வரவேற்கபடுகிறது. இந்த தீர்ப்பில் தமிழக அரசின் நடவடிக்கைகளை தடுப்பதாகவோ குறைகாண்பதாகவோ எந்த வாசகமும் இல்லாத நிலையில் மேல் முறையீடு தவிர்க்கப்படவேண்டும் என்ற மக்களின் உணர்வை நாங்கள் வற்புறுத்துகிறோம்.இவ்வாறு தா.பாண்டியன் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சமச்சீர் கல்வி தீர்ப்பு : தமிழக அரசு மேல்முறையீடு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக