
ஊரில் இருந்து போன் மகள் கூப்பிட்டாள் அவள் இப்போது தான் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி எஸ்சி இயற்பியல் சேர்ந்திருக்கிறாள்.தமிழ் வழியிலேயே இதுவரை படித்தவள். அவள் குரலில் கொஞம் பதட்டம் இருந்தது. என்ன என்று கேட்டபோது அவளது வகுப்பில் அவளுடன் படிக்கும் மாணவிகள் அவள் அங்கிலத்தில் பதில் சொல்லும்போது கேலி செய்வதாக கூறினாள்.
ஏதாவது கேள்வி விரிவுரையாளர் கேட்டால் தமிழ் கலந்து பதில் சொல்லும் போது, தன் சக மாணவிகள் சிரிப்பதால் தனக்கு மிகவும் கஷ்டமாக இருப்பதாக கூறினாள். என்ன செய்வது? பொறுத்துக்கொள் உனக்கு இது புதுசு, யாரையும் மனம் நோகும்படி பேசி விடாதே கேலி செய்வதால் அமைதியாகி விடாதே. நாளை அவர்கள் தான் உன்னை கொண்டாடுவார்கள்.
பிறரது பழிச்சொல்லுக்கும் கேலிக்கும் பயந்தால் நாம் வாழ்க்கையில் முன்னேறமுடியாது .
இப்பொழுது தான் அவள் வாழ்க்கையில் பிரச்னைகளை எதிர்நோக்கத் தொடங்கியிருக்கிறாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக