

கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வோம் என்று படம் பார்க்க அமர்பவர்களுக்கு, அவர் தம் இதயத் துடிப்பை அதிகப்படுத்தி திரையில் நடப்பவற்றுடன் நம்மை உள்ளடக்கி நம்மை பரபரப்பாக்கும் சாதனை நிகழ்த்தும் ஒரு நல்ல திரைப் படம்.
விபத்தில் உறுப்புகள் செயலிழந்த நிலைக்குத் தள்ளப்படும் ஒரு இளைஞனின் இதயம் உரிருக்குப் போராடும் 13 வயது சிறுமிக்கு பொருத்தப் படுகிறது.
இது தான் கதை.
இக்கதையை சொல்வதற்க்காக இயக்குனரும் படத்தை கோர்வை செய்திருப்பரும் செய்ய வேண்டிய வேலையை செவ்வனே செய்திருப்பதால் படம் நம்மைக் கட்டிப் போட்டுவிடுகிறது.
படத்தின் அழகு ஒரு விபத்து நிகழும் கணத்தில் அதை சுற்றி நடக்கும் பல கிளை நிகழ்வுகள்.
கணவனை ஏமாற்றும் ஒழுக்கம் கேட்ட மனைவி, லஞ்சம் வாங்கி பணியிடைநீக்கம் செய்யப்பட்டு சொந்த மகள்ளலேயே வெறுக்கப்பட்டு அப்பழியை களைய நினைக்கும் ஒரு தந்தை, ஒரு சினிமா சூப்பர் ஸ்டார் ,
எதிர்கால கனவுகளை தனது தோள்பையில் சுமந்தபடி ஆசைப்பட்ட பணி கிடைத்த பின்னர் அதில் சேரச் செல்லும் நேரத்தில் விபத்தில் மாட்டிக் கொள்ளும் துடிப்பான இளைஞன், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு நீண்ட தொலைவை மிக நெருக்கடியான சாலையில் கடந்து இறந்த இளைஞனின் இதையத்தை சுமந்துகொண்டு உயிர் கொடுக்க திறந்து வைக்கப்பட்ட நெஞ்சுடன் தயார் நிலையுடன் காத்திருக்கும் இறக்கப் போகும் சிறுமி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக