ஒரே சத்தமாக சிறுவர்கள் இரைந்து பாடும் ஓசை..
தாய்க் கிழவி மூளி
தண்ணி இறைக்கும் வாளி
தட்டான் குடிக்குப் போவாத
தாலி கெட்டி நிக்காத...
தண்ணி இறைக்கும் வாளி
தட்டான் குடிக்குப் போவாத
தாலி கெட்டி நிக்காத...
என்ன இது குழப்பத்தில் கொஞ்சம் எழுந்து வாசல் பக்கம் வந்து பார்வையிட்டேன்.தெருவில் முக்கடி விடு என்னுடையது. ஜன்னலைத் திறந்தால் ஜனங்களின் நடமாட்டம் எளிதில் கண்ணுக்குக் கிட்டும்.அந்த சந்தில்
முக்கில் சிறுவர்கள் ஏழெட்டுப் பையன்கள் ஒரு வயதான பெண்ணை அதுவும் தடுமாறி நடக்கச் சிரமப்படும் ஒரு மூதாட்டியை சூழ்ந்து கொண்டு இன்னல கொடுப்பதை காண முடிந்தது...
கிராமங்களில் இது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வு. சிறுவர்கள் கையில் பொம்மைகள் இருந்தால் நலம் ஆனால் சில நேரம் மன நலம் பிறழ்ந்த மனிதர்கள் மாட்டிக் கொண்டால் உண்டு இல்லை என்று பண்ணுவார்கள்...நானும் அந்தப் பருவம் கடந்தவன் தானே.
இப்பொழுத தான் இந்த ஊருக்கு சிறிது இடைவெளி கொடுத்திருக்கிறேன். ஆமாம் நான் பிறந்து படித்தது எல்லாமே இங்கு தான்.எனது பத்தாம் வகுப்பில் தாயார் மரணமடைய அனாதையாய் விடப்பட்டேன். வாப்பா எனது இரண்டாம் ஆண்டு பாலி டெக்னிக் படிக்கையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். என் இரண்டு சகோதரிகள் பின்னர் திருமணம் செய்து கொடுக்க என் வருமானமே அவருக்கு தேவை என்பதால் கடன வுடன வாங்கி என்ன படிக்க வச்சார்...நானும் படிச்சு நல்ல மதிப்பெண் ஈட்டினேன்.
என் தாயாரைத் தவிர அவரது தம்பிமார்கள் கடல் கடந்து வறுமைக்கு பிழைக்க பெற்றோருடன் மலேசியா சென்று அங்கே தங்கி வாழ்ந்து வந்தனர். ஊருக்கு வரும்போது எங்களின் வீட்டில் தான் தங்குவர்.அப்படி ஒரு என் தாயுடன் பிறந்த எனது தாய் மாமன் தன மகளை எனக்குக் கட்டித் தருவதறக்குஎண்ணி என்னை தன்னுடனே வைத்துக்கொள்ள ஆசைப் பட்டார். எனக்கும் பாஸ்போர்ட் எடுத்து தன்னுடன் அழைத்துக் கொண்டார்...
தாய் இல்லாமல் கடந்த ஒரு சில நாட்களில் எனது சாப்பாட்டு பொழப்பு அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. அபோது என்னுடன் படித்த நண்பன் சேகனா வீட்டில் அவனது தாய் அய்சாம்மா வாய் நிறையக் கூப்பிடும்
அன்சாரி இங்க நம்ம விட்டில சாப்பிடுன்னு சொல்லி வாஞ்சையா என்னை மடியில் அணைச்சிக்கிடும். தங்கமான மனுஷி... பெரும்பாலான தடவை ரசமும் சோறும் சுடச்சுட சாப்பிடுவேன்..அந்த ம்மா எனக்கு இன்னும் மனசுக்குள் சோறு மணக்க இருக்கிறாள்.
சரி வாங்க இப்ப நான் வந்தது பத்து வருசத்த கழிச்சிட்டுத்தான்.இங்க நெலம எல்லாமே இப்ப தல கீழ். விடுகட்டியாச்சு தங்கச்சிமார கரை சேர்த்தாச்சு...கையில் ஒரு குட்டி மகளுடன் மலேசிய மனைவியுடன் என்னுடைய மண்ணில் நான் நிக்கிறேன் அதே பழைய அன்சாரி...
வெளிய எஞ்சு போய் பார்த்தேன்.சிறுவர்களை விலக்கிவிட்டு வயதான அந்தத்தாயின் வடிவை பார்த்த உடன ஆயிரம் வாட்ஸ் கரண்ட கையக் கொண்டு தொட்ட மாதிரி ஒரு அதிர்ச்சி...கால்கள் வலுவை இழந்து என்னுடைய ஆதாரம் சேதாரமா உணர்ந்து என்னை நான் இழந்து பிடறிஎல்லாம் வேர்க்க விருவிருக்க நின்னுட்டேன்.
அய்சாம்மா..
அந்தத் தாய் அவள் தான் என உணர மனம் மறுத்தது...என்னவாச்சு... சேகனா எங்கே?
அருகிலிருந்தவர் சொன்னார் ஒரே மகன் கலியாணம் கட்டிய மருமகள், இவரள் தான் பார்த்துக் கட்டிவச்சா.மாமிக்கும் மருமகளுக்கும் சண்டை அவனுக்கு ஒத்து போகலை.வெளிய திரியுது. அவன் பொன்டாட்டி சொல்லக் கேட்டுக் கிட்டு அய்சாம்மாவை இப்படி அனாதையாய் விட்டுட்டான்.
மனுஷன் தானே நானும் மடை உடைத்து வெள்ளமாய் கண்ணிர் பீரிடஅப்படியே வெளிக்காட்ட முடியாமல் துடைத்து அந்தத் தாயை கையை பற்றினேன்.மன நலம் தவறிய அவள் தன குச்சியால் ஒரு அடி என மண்டையில்...
வலித்தது மனசு...
போறியா இல்லியா ...நாய் பெத்த மக்களே... கரவா போவானுவோ...கையில் உள்ள குச்சியால் தரையில் அடித்தாள். தெளிவற்ற கண் பார்வையால் விளங்கியும் விளங்காமலும் ஒரு பார்வை கண்ணில் தளும்பிய நிரை துடைத்துவிட்டு அழுக்கான அய்சாம்மா போப்பா போன்னு..தள்ளிவிட்டாள்.
அன்ஸ் வாட் ஹாப்பன் டியர் ...அருகில் முழுவதும் அலங்கரித்து அந்த மண்ணுக்கே தொடர்பில்லாத ஆடையுடன் என மனைவியும் மகளும் ...
நத்திங் மா...பேசிக்கொண்டே நகர்ந்தேன்.என்னுடன் வர மறுத்த மனசை விட்டுவிட்டு கால்கள் மனைவியுடன்...
நண்பர் சொல்லக் கேட்டு எழுதும் போது ஒரு நாப்பது வயசு பிள்ளை அழுதுக்கிட்டு எழுதுது...என்ன எழுத்த தட்டச்சு செய்றேன்னு என ஈரக் கண்ணைத் தாண்டி காணுவது கஷ்டமாயிருக்கு.
ம்மா மார்கள அல்லாஹ் நமக்கு எதுக்கு குடுத்தான் இப்படி...
ஆனா ஒன்னு மட்டும் சொல்லுவேன் இவனுக இடது நெஞ்சுக்குள் இடிச்சிக்கிட்டிருக்கிறது இதயமில்ல எதோ எந்திரம் தான்...

தாயின் காலடியில் இறைவன் சொர்க்கத்தை வச்சிருக்கான்...எந்தப் பெற்றோராலும் சீ என்று சொல்லப்பட்ட மகன் சொர்க்கம் புக முடியாது... இவை வேத வார்த்தையும் நபி மொழிகளும்..
அட அப்துல்லாஹ் சார் நான் டைப் செய்து போட்ட கருத்துரை காணோமே... காக்கா ஊச்? :)
பதிலளிநீக்குஅன்பு வணக்கங்கள் அப்துல்லாஹ் சார்...
பதிலளிநீக்குஉங்க தளத்தை இன்று தான் பார்த்தேன்... ஆய்ஸா அம்மாவை பற்றிய இந்த பகிர்வு படித்து முடிக்கும்போதே நான் அழுவதை உணர்ந்தேன்...
பயமா? நானும் ரெண்டு பிள்ளை பெற்றிருக்கேனே என் நிலை எப்படி இருக்குமோ என்ற நடுக்கமா?
தன் வயிறு தன் பசி தன் நலம் இப்படி எதுவுமே பார்க்காது பிள்ளைகளின் நலம் மட்டுமே பார்த்து பார்த்து வளர்த்த தாயை தனக்கென்று ஒரு குடும்பம் வந்தவுடன் பாசத்தை இடம் மாற்றும் பிள்ளையின் பச்சோந்தி குணம் அறிந்த அதிர்ச்சியா?
தனக்கென ஒரு குடும்பம் வந்துவிட்டால் தான் என்ன? அதுவும் நம் குடும்பத்தில் ஒரு அங்கம் தான் என்ற நினைவு ஏன் இருப்பதில்லை பிள்ளைகளுக்கு?
பாசம் இடம் மாற வேண்டிய அவசியம் ஏன் வருகிறது? அன்பை பகிர்ந்தால் போதாதா? இடம் மாற்றித்தான் ஆகவேண்டுமா?
பிள்ளை தன் தாயை எப்படி மதிக்கிறான் என்பதை பொறுத்து தானே வீட்டுக்கு வரும் மருமகளும் மதிப்பாள் தாயை?
கல்யாணம் ஆனதுமே தன்னை மனைவியிடம் விற்றுவிடுகிற மனிதன் தான் தன் தாயை வெளியே விரட்ட தயாராய் இருப்பது....
ஆனால் ஏன் எல்லோருமே இதை மறந்துவிடுகிறார்கள்? இன்று தன் தாய்.... நாளை தன் மனைவி.... இதை மனைவி மறந்தால் தாயைப்பற்றி உயர்வாக சொல்லி என் தாயை நீ இப்படி இன்று நடத்தினால் நாளை உன் நிலை எப்படி இருக்குமோ என்று யோசித்து பார் என்று ஏன் சொல்லி புரியவைக்க முயல்வதில்லை இக்காலத்து பிள்ளைகள்?
திருமணம் ஆகி புக்ககம் போகும் ஒவ்வொரு பெண்ணும் மாமியார் என்ற பார்வையில் பார்க்காமல் தாய் என்று நினைத்தால் இப்படி ஒரு கொடுமை நிகழமுடியாமல் தடுக்கலாமோ?
இதயம் கனத்துவிட்டது அப்துல்லாஹ் சார் படிக்கும்போதே....
இத்தனை செய்த பிள்ளையை தாய் மட்டும் சபிப்பதோ கண்ணீர் விடுவதோ இல்லை... ஏனென்றால் அது கூட தன் பிள்ளையை தாக்கிவிடுமோ என்ற பயம் தான்...
தான் நடுத்தெருவில் பைத்தியமாய் பிச்சை எடுக்கும் நிலையில் தள்ளப்பட்டாலும் தன் பிள்ளையின் உயர்வை மட்டும் பெருமிதமாக எண்ணி எண்ணி மகிழ்வாள்....
கடவுளை விட மேலாக தாய் தந்தையரை வணங்குவோர் தான் வாழ்க்கையில் வெற்றி காண்பர்...
அன்பு வாழ்த்துகள் அப்துல்லாஹ் சார்....
நான் நம்புவேன் சகோதரி கலக்கம் வேண்டாம்...என்னுடைய கருத்துரைகள் பதிக்கப் பட்டுக் கொண்டு தான் இருக்கும் தடுக்காதிர்கள். மாய்ந்து மாய்ந்து அன்பு செலுத்த எனக்கு மட்டுமே தெரியும் சகோதரி...
பதிலளிநீக்குஅன்புடன் அப்துல்லாஹ்
அருமையான பகிர்வு
பதிலளிநீக்குதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in