இது ஒரு காணொளி...
ஒலிம்பிக் தடகளத்தில் 1992 ஆம் ஆண்டு கலந்து கொண்டார் டெரிக் ரெட்மொண்ட். தனது தடத்திலிருந்து சீரிக் கிளம்பிய இந்த வீரன் இடையிலேயே தனது தொடையில் ஏற்பட்ட தசைவலியால் தட்டுத் தடுமாறி நிலைகுலைகிறார். ஆயினும் விடாது கண்ணீரோடு நொண்டிக் கொண்டு தடத்தின் முடிவு வரை தனது தந்தையின் உதவியுடன் இறுதிக் கோட்டைத் தொட... அந்தக் கணத்தில் அங்கே குழுமியிருந்த அறுபத்தைந்தாயிரம் பேரின் கரங்களும் அவர்களை அறியாமலே தட்டி அங்கே ஒலி எழுப்ப...ஈரமான விழிகளின் எண்ணிக்கை அதிகம் அது அவனது பதக்கத்தைக் காட்டிலும் பலமடங்கு உயர்ந்தது தான்...
அங்கங்கள் சிதைந்தாலும் அகம சிதையாத ஆற்றலுள்ள வீரன்...
வாழ்க டெரிக்...
மனதில் நம்பிக்கை இடைவிடாத முயற்சி...
பதிலளிநீக்குஉடலில் உயிர் உள்ளவரை நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் கண்டிப்பாக பயனுள்ளதாகவே செய்துக்கொள்ளவேண்டும் என்று உணர்த்திய மிக அருமையான பகிர்வு அப்துல்லாஹ் சார்....
இறுதி வரி மனம் நெகிழவைத்தது....அங்கங்கள் சிதைந்தாலும் அகம் சிதையாத ஆற்றலுள்ள வீரன்...
ஆமாம் வீரன்...
தடை ஏற்பட்டதே உடலில் வலு குறைந்ததே என்று வலியுடன் நின்றுவிடாமல் சோர்ந்துவிடாமல் தன் தந்தையின் துணையுடன் தாண்டியது இறுதிக்கோட்டை அல்ல... தன் வாழ்க்கையில் வெற்றியின் உச்சத்தை....
அருமையான மனம் நெகிழவைத்த பகிர்வுக்கு அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார்.