இறுதியாய் உதிர்த்த வார்த்தைகள்
அவளுக்குச் சாதாரணம்
ஆனால் எனக்கு சாகா ரணம் ...
காதல் இன்பம் துன்பம்
இரண்டும் தரலாம் - ஆனால்
உயிருடன் வைத்துக்கொண்டே
மரணிக்கச் செய்யுமா?
என் நினைவுகளை நான் நேசிக்கிறேன்
எங்கே சுற்றினாலும் இறுதியில்
அவளில் நிலை கொள்ளுவதால்
உறக்கம் மறந்து அவளையே நினைப்பது
உவகை தருவதனால் - வேண்டுமென்றே
உறக்கம் தொலைக்கிறேன்
மகிழ்வதற்காக...
நானென்பது
செத்துப்போன நானும்
என்னை வீழ்த்திய
அவளையும் சேர்த்துத் தான்
நெருப்பின்சூடு
பனியின் குளிர்
மலரின் மென்மை
பொருந்திய அவளில்
நான் என்னவாக?
அவள் இமைப் பறவையின் சிறகடிப்பில்
எழுத நினைத்தவை காயப்படுகின்றன..
அந்தக்கன்னக்குழியில் என்னை நான்
வீழ்த்தி அழுந்தப் புதைந்ததால்
மைஎழுதிய வேல் விழிமுனையால்
மையிழந்த என் தூரிகை வரைவது
வெறும் வண்ணமிலாக்கோடுகளே...
அவை அவளில்லாத
என் வாழ் கையைப் போல...
காதல் இன்பம் துன்பம்
பதிலளிநீக்குஇரண்டும் தரலாம் - ஆனால்
உயிருடன் வைத்துக்கொண்டே
மரணிக்கச் செய்யுமா?
காந்தத்தின் ஈர்ப்புகள் உங்கள் வரிகள் .
தொடரட்டும் ஈர்க்க
நாங்கள் ஈக்களாய் மாற ..