பிறப்பின் ரகசியம் அது
பெற்றவள் பேணுவது
உண்மை தானே
நதி மூலம் ரிஷிமூலம் போல்
அவன் வழிமூலம் காண
ஆணிவேர்ப் பாதையும்
அதன் வழிப் பிறவியும்..
உதிக்கும் பரிதியின் செக்கரு வானைப் போல
உதைத்துப் புரண்ட செந்நிற உதரமும்
உரிய நேரத்தில் உடைந்த பெருக்கில்
உள்ளிருந்து வெளியே உருவுடன் வந்த
அவன்
ஆசையாய் கேட்டான்
அன்னையிடத்தில்
.
அட போடா
அது ஒரு இருளில் ஆகாரம் வாங்க
அவசரமாக அவிழ்த்தில் முகிழ்த்ததோ
அன்றி
நான் தான் வேண்டுமென சுட்டிய விரலின்
விரித்த படுக்கையில் விளைந்த வித்தோ
வேறு
கால்டாக்சியின் உள்ளோ
காதலர் பூங்காவிலோ
காய்கறிக் காரன்
கைவண்டிக்காரன் என
காசு வீசிக் கருவிதைக்கும்
காமாந்தகன்
யாரோ....
நிச்சயம் அவன் ஒருவன் காரணன்...
அவனை எனக்கும் தெரியவில்லை
ஆனால் ஒன்று மட்டும் உறுதி
சாந்தி முகூர்த்தக் கட்டிலில்
சந்தர்பம் பார்த்து புகுந்ததல்ல
கர்ப்பபாத்திரத்துள்...
உன் உள்ளமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக