சனி, ஜூன் 11, 2011

என் வீட்டிலிருந்து என் பயணம் - abdhullah

சின்னதாய் வீடு கட்டி
சிறப்பாக வாழவேண்டும்

என்னையும் மதித்து வந்த 
ஏந்திழை கையைப்பற்றி 
உன்னத உறவு கூடி 
உவப்புடன் வாழ வேண்டும்

அன்னையுடன் தந்தை கூடி 
அன்பொழுகப் பலதும் பேசி 
அண்டை வீட்டாரும் வாழ்த்த
அற்புதமாய் வாழ்தல் வேண்டும்

எந்திரம் போன்ற வாழ்வில்
இழந்திட்ட மகிழ்ச்சி எல்லாம்
மந்திரம் போட்டது போல் 
மாறித் தான் போக வேண்டும்

சின்னதாய் தோட்டமிட்டு
சிறுமலர் பதியனிட்டு
சிரித்திடும் மலர்கள் கண்டு
சிலிர்த்திடும் கணங்கள் வேண்டும்

கொக்குடன் கிளிகள் காகம் 
கூவிடும் குயில்கள் எல்லாம் 
திக்குகள் எட்டும் விட்டு 
தேடி என் வீட்டை சேர

வசந்தமும் வாடைக்காற்றும்
வந்து எனைத் தழுவும் நேரம் 
அசதியுடன் துன்பம் சோகம் 
ஆற்றிடச் செய்தல் வேண்டும்

வான் மழைத் தூறல் பட்டு 
வாசனை கொண்ட மண்ணை
ஆசையோடு நான் நுகர்ந்து 
அதில் கிடந்து புரள வேண்டும்

குன்று போல் நெல்மணிகள்
குவித்திடக் குதிரும் வேண்டும் 
கன்றுடன் பசுவும் நிற்க்க 
கட்டாயம் தொழுவம் வேண்டும்

செக்கரு வானம் காட்டும் 
செம்பிழம்பு கதிரொளியும்
கருநீல வான்விரிப்பில் 
குளிர்தரு நிலவும் வேண்டும்

நித்திரை சுகமாய் வேண்டும் 
நீண்டதாய் இரவும் வேண்டும்
பத்திரமாய் வாழ்ந்து விட்டு 
பாசம் சுவைத்துச் சாகவேண்டும்.

முற்றத்தில் எனைக்கிடத்தி 
முடிச்சில்லா கபனுடுத்தி
மூடுங்கள் என்முகத்தை
முக்கியமாய் எனது வீட்டில்


கபன்: சடலத்தை போர்த்தப் பயன்படும் ஆடை 
சின்னதாய் வீடு கட்டி
சிறப்பாக வாழவேண்டும்

என்னையும் மதித்து வந்த 
ஏந்திழை கையைப்பற்றி 
உன்னத உறவு கூடி 
உவப்புடன் வாழ வேண்டும்

அன்னையுடன் தந்தை கூடி 
அன்பொழுகப் பலதும் பேசி 
அண்டை வீட்டாரும் வாழ்த்த
அற்புதமாய் வாழ்தல் வேண்டும்

எந்திரம் போன்ற வாழ்வில்
இழந்திட்ட மகிழ்ச்சி எல்லாம்
மந்திரம் போட்டது போல் 
மாறித் தான் போக வேண்டும்

சின்னதாய் தோட்டமிட்டு
சிறுமலர் பதியனிட்டு
சிரித்திடும் மலர்கள் கண்டு
சிலிர்த்திடும் கணங்கள் வேண்டும்

கொக்குடன் கிளிகள் காகம் 
கூவிடும் குயில்கள் எல்லாம் 
திக்குகள் எட்டும் விட்டு 
தேடி என் வீட்டை சேர

வசந்தமும் வாடைக்காற்றும்
வந்து எனைத் தழுவும் நேரம் 
அசதியுடன் துன்பம் சோகம் 
ஆற்றிடச் செய்தல் வேண்டும்

வான் மழைத் தூறல் பட்டு 
வாசனை கொண்ட மண்ணை
ஆசையோடு நான் நுகர்ந்து 
அதில் கிடந்து புரள வேண்டும்

குன்று போல் நெல்மணிகள்
குவித்திடக் குதிரும் வேண்டும் 
கன்றுடன் பசுவும் நிற்க்க 
கட்டாயம் தொழுவம் வேண்டும்

செக்கரு வானம் காட்டும் 
செம்பிழம்பு கதிரொளியும்
கருநீல வான்விரிப்பில் 
குளிர்தரு நிலவும் வேண்டும்

நித்திரை சுகமாய் வேண்டும் 
நீண்டதாய் இரவும் வேண்டும்
பத்திரமாய் வாழ்ந்து விட்டு 
பாசம் சுவைத்துச் சாகவேண்டும்.

முற்றத்தில் எனைக்கிடத்தி 
முடிச்சில்லா கபனுடுத்தி
மூடுங்கள் என்முகத்தை
முக்கியமாய் எனது வீட்டில்


கபன்: சடலத்தை போர்த்தப் பயன்படும் ஆடை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...