சனி, ஜூன் 11, 2011

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க by அப்துல்லாஹ்

அது ஒரு வெளங்காத ஊரு அந்த ஊருல ஒரு வீணப்போன பள்ளிக்கூடம். அங்கே தான் நம்ம வெட்டி வாத்தியாரு தினம் பாடம் சொல்லிக்குடுக்கென்னு போறதும் வாரதும். 
இவரு படிச்சதென்னவோ புள்ளைகளுக்கு சொல்லிக்குடுக்கத்தான். ஆனா பாக்குறது எல்லாம் கருமம் புடிச்ச சோலி. படிக்க வர்ற பசங்க புள்ளிய வூட்டுல இருக்க அம்மக்காரிய பத்தி விசாரிக்கது,அவங்கள தெருவில வெளியில கண்டா புள்ளிய படிப்ப பத்தி பேசுற சாக்கில ஜொள்ளு விடுறது.இத்தனைக்கும் இந்த ஆளு காரியக்காரன் இல்ல வெறும் தம்மா தன்னையப்பத்தி பெருசா நெனச்சிக்கிட்டு கனவுலயே ஐஸ்வர்யா ராய்க்கு நூலு விடுற கேசு. 

இப்படித்தான் ஒருநா மாரீ புள்ளைட்ட ஏ புள்ள என்ன இன்னைக்கு ரொம்ப சீக்கிரமே பள்ளிக்கூடம் வந்திட்ட ன்னு கேக்குற மாதிரி கேட்டு வழக்கம் போல அவங்க அம்மா சௌரியமா இருக்காளா ன்னு கடெசியில கேட்டாரு. இவளும் பதில சொல்லிப்புட்டு வீட்டுலயும் போயி, யாத்தி! அந்த வாத்தி இண்ணைக்கும் உன்னைய வெசாரிச்சாருன்னு லைன குடுத்து பத்தவச்சிட்டா. 
இவ அம்மாவப்பத்தி நீங்க கட்டாயம் தெறிஞ்சிக்கிடனும். அவள்ட்ட எப்பவும் ஒரு 1000 வாட்டு கரண்டு ஓடிக்கிட்டே இருக்கும் பாக்க கொஞ்சம் லெச்சனமா இருந்தாலும் எப்பவும் யாரிட்டயும் ஒரே சண்ட எதுலயும் அவ தோத்ததே இல்ல.

புள்ளக்கிட்ட சொன்னா ஏடி நாளக்கி வாத்திய இருட்டும்போ வுட்டுக்கு வரச்சொல்லுடின்னா.
அவளும் போயி வாத்தி கிட்ட சார் எங்கம்மா உங்க கிட்ட என்னவோ பேசணும்னு சொல்லிச்சு நாளைக்கு இருட்டும்போது எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு போணுமாம் சார்.
வாத்தி குதூகலாமாயிட்டார.
நாளையும் விடிஞ்சு பொழுதும் போனப்புறம் வாத்தி மெள்ள மாரி வீட்டுக்கு போனாரு அவங்கம்மா பரட்டைய பாக்க.
வாத்தியக் கண்டதும் பரட்ட வாங்க வாத்தி இருங்க, இதோ வந்திருதேன்னு சொல்லிட்டு ஒரு அரமணி நேரம் கழிச்சு வந்து, மறந்தே போய்ட்டன் வாத்தி ன்னு டயத்த கடத்தி ஊரு ஒடுங்கட்டும்னா.
அவரும் சரிதான்னு ஒரு காப்பித்தண்ணி கூட இல்லாம நடுப்பாலைவனத்துல ஒட்டக மாதிரி அங்கிட்டும் இங்கிட்டுமா அல பாய்ஞ்சிக்கிட்டுருந்தார்.
அப்ப திடீருன்னு பாத்து கதவ டாம் டாமின்னு போட்டு தட்டுற சத்தம் கேட்டதும் 
வாத்தி அலறியடிச்சு எப்பே என்ன சோதனை இது ஊருக்காரப்பயலுவளுக்கு தெரிஞ்சா உப்புக்கண்டமில்ல போட்டுருவான்னு அபயம் கேட்டு பரட்டைய தேடினாரு. 
பரட்டையும் ஒரு பழய சேலைய எடுத்துக் குடுத்து இத சுத்திக்கிட்டு அந்த திரி உரல்ல கொஞ்சம் குறுவய திரிக்க மாதிரி திரிங்க ( ஆட்டு உரல் போன்ற கையால் சுழற்றி உளுந்து குருவ அரிசி போன்றவற்றை உடைக்க பயன்படும் ஒரு பழங்கால கருவி ) ன்னு சொல்லி அவருக்கு முட்டாக்கு போட்டு மூலையில ஒரு மூடை குறுவையும் குடுத்து நான் சொல்லுற வரைக்கும் திரிக்கத நிறுத்த வேணாம்னு சொல்லி ஆரம்பிச்சு வச்சா. யாராவது கேட்டா வேலக்காரி ன்னு சொல்லி சமாளிச்சுக்கிறுதேன்.
வாத்தியும் திரிக்க ஆரம்பிச்சாரு குருவையும் கொரையீர மாதிரி தெரியல. ஒரு வழியா கால் மூட்ட குருவ திரிச்சிட்டாரு. 
அதிகாலையில முழிச்சு எந்திரிச்ச பரட்ட வாத்தி ஞாபகம் வந்து அப்புறமா அவர அவசரமா வெளிய கெளப்பி வுட்டா.
வாத்திக்கு வலியின்னா வலி கையில அப்பிடி ஒரு வலி. 
ஊட்டுக்கு வந்து லீவு போட்டுட்டு அடிச்சுக்கிடந்து தூங்கிட்டு மருநா பள்ளிக்கூடம் போனாரு.
சாரே சாரே யாரோ கூப்பிடுற சத்தம் கேட்டு நம்மாளு திரும்பி பாத்தா நம்ம குருவக்காரி மவ மாரி.
என்னடி ? வாத்தி இன்னைக்கு கொஞ்சம் எரிச்சலோடு கேட்டார். 
அம்மா நீங்க நல்லருக்கியலான்னு கேக்க சொன்னா ? 
ஏன் மிச்ச குருவையும் திரிக்கதுக்கா கேட்டுவூட்டுருக்கா . போடி போயி வாத்தி செத்தான்னு சொல்லு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...