வலியில் துடித்த மனைவியைக்கண்டு
மனம் பதறினேன் மகிழ்ச்சியோடு
மகள் பிறந்தாள்
கண்ணில் நீர் வர அழுதனர்
மனைவியும் பிள்ளையும்
தொலைக்காட்சியில் சாவு
காலை இழுத்து இழுத்து நடந்தேன்
ஊரே வேடிக்கை பார்த்தது - அறுந்துபோன
செருப்பு வார்
மாமியாரும் மருமகளும் ஒற்றுமையாய்
சேர்த்துக்கட்டி அழுதனர்
பிணமாக நான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக