ஆண்டு பல நாம் கண்ட அத்தனை தேர்தல்களும்
அதன் பலனாய் நாம் பெற்ற ஆட்சியாளர் கூட்டமும்
வேண்டிய பலன் பெற்றார் அவ்ருக்கும் உறவுக்கும்
வெறும் கையை காட்டி விட்டார் நமக்கு மட்டும்
சொல்லால் போர்முரசம் கொட்டும் இவர்
நல்லார் இல்லையென்றே நாமறிவோம் நன்றாக
பொல்லா மனிதரிவர் பிறக்கும் போதே
குல்லா போடும் கொடுங்குணமும் பெற்றதனால்
தேனாறும் பாலாறும் ஓடும் என்றே
தெவிட்டாத வாக்குறுதி என்றும் தந்தார்
தகிக்கின்ற தாகத்திற்க்கு தண்ணீரின்றி
தவிக்கின்றோம் நாமென்று அவரறியார்
எல்லோரின் வாழ்வினிலும் ஒளியை ஏற்றி - இருள்
இல்லாத தமிழ்நாட்டைக் காண்போம் என்றார்
இருளில் தான் வாழ்கின்றோம் எல்லா நாளும்- அறியாமை
இருளோடு பணத்திற்க்காய் வாக்களித்ததால்
ரத்தத்தின் ரத்தமென்றும் உடன்பிறந்த பிறப்பு என்றும்
உறவாடிக் கருவறுத்த கூட்டமிவர் ...வீழ்ந்து பின்
எப்போது பிறக்கும் உண்மை ஆட்சி?
எவர் வருவார் நமைக் காப்பார்?
அடப் போங்கப்பா எனக்கு இந்த பொய்யாட்டத்தில்
பங்கெடுக்க கொஞ்சம் கூட ஆசை இல்லை
காசு வாங்கி ஓட்டுப்போட்டு கடசியில வெலவாசி
தாங்க முடியல தாலி கூட மிச்சமில்ல
அப்துல்லாஹ் சார்
அல்கோபரிலிருந்து
11/05/2011

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக