தேர்வு முடிவுகளில் வென்றோர் களித்திருக்க
தேர்வதற்கான காரணம் தேடி பலர் விழித்திருக்க
தற்க்கொலையே தீர்வு என்று தன்னையே கொல்வோரே
தன்னம்பிக்கை இழந்து நும் வாழ்வையும் இழந்தீரே
பதினேழு ஆண்டு காலம் கற்ற கல்வி
பண்படுத்தி உனக்குரமேற்றவில்லையா
பாசத்தோடு வளர்த்த உந்தையும் தாயும்
உனதுள்ளத்தில் வாழவில்லையா
உன் உயரிய உயிரையும் உறவையும்
உதறச்செய்தது வெறும் எண்கள் தானா
அடிப்படிகள் இல்லாது மாடி தொடும்
உச்சிப் படிகள் கொண்ட ஏணி ஏது
ஆபிரகாம் லிங்கணும் அண்ணல் காந்தியும்
ஓரிரவில், ஒருநாளிலா லட்சியம் தொட்டார்கள்
சூரியனும் சந்திரனும் இனி உன்னை தவிர்த்து -உன்
சொந்த பூமியில் நீ இல்லாமலும் உலா வரும்
நேசி உலகத்தை துன்பம் மறப்பாய்
யோசி ஒரு கணம் உயிர் துறக்க மறப்பாய்
பேசி யாரும் உனை கலங்கடிக்க மாட்டார்
யாசிக்கிறேன் அன்புறவே இரு எங்களுடன்
காலம் கனிந்து விடும் கண்ணீர் தீர்க்கும்./......
ஏக்கத்துடன் அப்துல்லாஹ் சார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக