இக்கதை பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கலாம். ஆனாலும் அன்னையர் தினத்தில் இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்...
ஒரு தாய் தன் மகனை அன்புடன் வளர்த்து வந்தார். தந்தை இல்லாக் குறை தெரியாவண்ணம் அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து அவனது மகிழ்ச்சியே தன் உலகம் என்று அவனது சந்தோஷம் கண்டு தானும் மகிழ்ச்சியாய் காலத்தைக் கடத்தினார்.
வளர்ந்து வாலிபன் ஆகிய மகன் ஒரு நாள் தன் தாயிடம் தான் ஒரு அழகான பெண்ணைக் காதலிப்பதாக சொன்னான். தாயும் மகனுடைய மகிழ்ச்சி கருதி அந்தப் பெண்ணையே அவனுக்கு மணம் முடித்து வைத்தாள்.
நன்றாகப் போய்க்கொண்டிருந்த வாழ்வில் மருமகள் ஏற்படுத்தும் பிரச்னைகளால் நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைய ஆரம்பித்தது.
கணவன் தனக்கு மட்டுமே சொந்தம் அவ்னுடன் அன்பை யார் பகிர்ந்து கொள்பவராக இருந்தாலும் அதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் மருமகள் தன் கணவனை தனிக் குடித்தனம் செய்ய அழைத்தாள்.
தள்ளாத வயதில் தன்னை பராமரிக்க வேண்டிய மகன் தனிக்குடித்தனம் போக தாயும் அனுமதிதாள் எங்கிருந்தாலும் மகன் சந்தோஷமாக இருக்க தாய் எண்ணினாள்.
ஒரு நாள் அதிகாலையில் பிரிந்து போன மகன் வாட்டத்துடன் தன் முன்னே நிற்க்கக் கண்ட,
தாய் பதறிப்போய் கேட்டாள் என்னப்பா ஆச்சு? ஏதும் பிரச்னையா? நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?
கேள்வி கேட்ட தாயிடம் கதறிக்கொண்டே மகன் சொன்னான் அம்மா என் மனைவிக்கு உடல் நலம் இல்லை
அவளது ஈரல் கேட்டுப் போய் விட்டதால் வேறு யாருடைய ஈரலாவது கிடைத்தால் அவ்ளுக்கு பொருத்தி அவளை உயிர் பிழைக்க வைக்கலாம் என மருத்துவர் சொல்கிறார். நான் என்ன செய்யட்டும். என் மகிழ்ச்சி என் வாழ்க்கை எல்லாமே முடிந்து விட்டது எனக் கூறிய மகனிடம் கொஞ்சம் பொரு இதோ வருகிறேன் என்று கூறிவிட்டு
அந்தத்தாய் கையில் கத்தியுடன் மகனிடம் சொன்னாள் என் நெஞ்சை பிளந்து என் ஈரல் குலையக் கொண்டு போய் உன் மனைவியை காப்பாற்று என்று
கேட்ட மகன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.
செய் நான் சொன்னதை உடனே செய் உன் மனைவியை காப்பாற்று உன் மகிழ்ச்சியே முக்கியம் எனக்கு என்றாள்.
கையில் தாயின் ஈரலை ரத்தம் சொட்ட சொட்ட தூக்கிக் கொண்டு ஓடிய மகன் தடுமாறி கீழே விழுந்து விடும் நிலையில் தாயின் ஈரல் சொன்னது மகனே பார்த்துப் போப்பா விழுந்து விடாதே என்று.
பசும் தங்கம் மாணிக்கம் மணி வைரம் எல்லாமே
ஒரு தாயின் அன்புக்கு ஈடாகுமா?
விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக