சனி, ஜூன் 11, 2011

கறையான் மரம் by அப்துல்லாஹ்


விரகம் நீறைந்த விடியாத இரவுகளில் 
விழி மூடி விழித்திருந்தேன் எனக்குள்ளே 
கழிந்த எச்சில் நாட்களின் ஈர நினைவுகள் 
கசகசவென்று ஒரு கற்றாழையின் மனம் 

இழந்துவிட்ட சக்தியின் நெறியில்லா பயணம் 
கிளர்ச்சியின் கோரப்பிடியில் கோழையாய் பெண் 
முகங்களை நினவில் கொள்ள ஒன்றா இரண்டா
சுகித்கிருக்க மட்டுமே விரித்த முந்தியில் பணம்

ஓயாத அலைகளாய் உடைந்தழும் உள்ளே 
நியாயம் கேட்டு நீதிபதியாய் மனசாட்சி 
விதைத்த வளர்ந்த விருட்சங்கள் வந்தால் 
வீடுகள் தோட்டம் என வில்லங்கம் செய்தால்

எந்தெந்த தோட்டத்தில் என்பயிர் வளர்கிறது 
என்ன நிறம் எத்தனை உயரம் யாரின் உபயம் 
சுற்றிலும் என் உயிர்க்கு எத்தனை கிளைகள்
களைகளாய் கறைகளாய் நான் பாவமூட்டை

நெறி மறந்த வாழ்வில் நீதியில்லா பயணம்
புழுதி படர்ந்த கருவரைகளில் பச்சை துரோகங்கள் 
பிச்சைப் பாத்திரத்தின் எச்சில் பருக்கையாய் குருதி 
கழுவிக் களைந்திட இயலா மாசு கலந்த நீசன் நான்

விரகம் நீறைந்த விடியாத இரவுகளில் 
விழி மூடி விழித்திருந்தேன் எனக்குள்ளே 
கழிந்த எச்சில் நாட்களின் ஈர நினைவுகள் 
கசகசவென்று ஒரு கற்றாழையின் மனம் 

இழந்துவிட்ட சக்தியின் நெறியில்லா பயணம் 
கிளர்ச்சியின் கோரப்பிடியில் கோழையாய் பெண் 
முகங்களை நினவில் கொள்ள ஒன்றா இரண்டா
சுகித்கிருக்க மட்டுமே விரித்த முந்தியில் பணம்

ஓயாத அலைகளாய் உடைந்தழும் உள்ளே 
நியாயம் கேட்டு நீதிபதியாய் மனசாட்சி 
விதைத்த வளர்ந்த விருட்சங்கள் வந்தால் 
வீடுகள் தோட்டம் என வில்லங்கம் செய்தால்

எந்தெந்த தோட்டத்தில் என்பயிர் வளர்கிறது 
என்ன நிறம் எத்தனை உயரம் யாரின் உபயம் 
சுற்றிலும் என் உயிர்க்கு எத்தனை கிளைகள்
களைகளாய் கறைகளாய் நான் பாவமூட்டை

நெறி மறந்த வாழ்வில் நீதியில்லா பயணம்
புழுதி படர்ந்த கருவரைகளில் பச்சை துரோகங்கள் 
பிச்சைப் பாத்திரத்தின் எச்சில் பருக்கையாய் குருதி 
கழுவிக் களைந்திட இயலா மாசு கலந்த நீசன் நான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...