சேர்ந்த தோகையை செழுமையாய் விரித்து
செம்மையாய் தன்னுடல் நளினம் காட்டும்
சீர்மிகு மயிலின் சிங்காரத் தோற்றம்
சிந்தையை வென்றிடும் அழகு.

கன்னங் கரிய வண்ணப் பறவை
கற்கண்டாய் மனம் இனித்திடக் கூவும்
கல்லையும் கரைத்திடும் குயிலின் இன்குரல்
கவலையை போக்கிடும் அழகு
வசியம் செய்தே வாட்டம் போக்கிடும்
வண்ணம் பலவும் வகையாய்ப் பெற்று
வனப்புடன் மிளிரும் வண்ணத்துப் பூச்சி
வசப்படுத்திடுமதன் வர்ணம் அழகு
இருளில் ஒளிரும் மின்மினிக்கூட்டம்
இறங்கிய நட்சத்திரம் எனக்காட்டும்
இலங்கிடும் புள்ளிகள் மின்னி மினுக்கிடும்
மின்மினிப் புச்ச்கிகள் அழகு
மலர்களும் அழகு மகிழ்ச்ச்சியும் அழகு
மலர்களை யொத்த மனதினைப் பெற்ற
மன்னித்திடும் நல்ல மாண்பினைக்கொண்ட
மானிடரும் இங்கு அழகு
கருணையுள்ளம் கனிந்த நல் தேகம்
கண்ணின் மணிபோல் காத்திடும் நேசம்
கருமுதல் தொடங்கி கடைசிவரை சுமந்த
அம்மா நீதான் பேரழகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக