பிள்ளைக் கனியாச்சு
பேசும் பொம்மையொன்று
பிறந்தது நும் வயிற்றில்
நந்தவனம் ஒன்று
நடை பயின்றதுவோ
நந்தனா என்றொரு
நாமம் தனைக்கொண்டு
ஈன்றெடுத்த இளம்குயில்
இன்பம் பெருக்கிவிட்டு
இத்தரை மீதிருந்து
இடம்பெயர்ந்து சென்றதுவோ
சர்க்கரை வெல்லம்
சந்தனப் பேழை
சுந்தர சோதி
சுவைசசுனை நீர்
மாசற்ற பொன்
மருவிலா மதி
உருவெடுத்த உயிர்
ஊட்டம்தரும் பயிர்
நிலையில்லை இவ்வுலகில்
நிரந்தரம் ஏதுமில்லை
படைத்தவன் ஒன்றன்றி
படைப்பினம் நின்றழியும்
நடைபிணமாய் வாழ்தல் போதும்
விடைகொடுப்பீர் துன்பத்திற்க்கு
கடைத்தெழும் ஓர் நாளில் நும்
கண்மணியை காண்பிர்[
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலபோக்கில் காயமெல்லாம்
மறந்து போகும் மாயங்கள்
உழி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் .அதை தினம்முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
நம்பாவிட்டால் உங்களின் குரலில் நீங்களே கேளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக