துள்ளித் திரிந்த சிறகுகள் அன்று
துவண்டு சரிந்தண விறகுகள் போல்
பள்ளியில் கருகிய முல்லைகள்
பயில வந்த பாசமிகு பிள்ளைகள்
கத்திக் கதறிய அவர்தம் சோகம்
கனன்ற தீயிலோ வெந்ததவர் தேகம்
வெந்தீ நாக்கில் வேக வைக்க
வேண்டுமெனில் என்னுடல் நான் தருவேன்
வெள்ளை மனமுடை பிஞ்சுகளை
வெள்ளரிப் பழமாய் சுட்டதென்ன
கெட்டவர் கேடுடையார் இருக்க - நீ
தொட்டது தளிர்பிஞ்சு மலர்களன்றோ.....
காலம் கடந்து நினைத்திடினும்
கண்களில் கண்ணீர் துளிர்க்குதம்மா
அன்புக்குழந்தைகளை நினைத்து நெஞ்சம்
ஆற்றிடாத் துயர் அடையுதம்மா
எழுதிடும் எனை இங்கு தேற்றிவிட
எனக்கருகில் யாரும் இல்லை அந்தோ
அழுதிடும் உங்கள் அனைவருடன்
கழியட்டும் என் துன்ப நினைவுகளும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக