செவ்வாய், ஜூலை 26, 2011

பல்லிடுக்கில் ஒரு பாக்குத்துண்டு

குமரிப் பருவம் அடைந்த மாணவிகளுக்கு பாடம் நடத்துவது கொஞ்சம் சிரமமான காரியம் தான். பனிரெண்டாம் நிலையில் பயிலும் மாணவிகள் 17 வயதைல் இருப்பார்கள். இவர்களின் பழக்க வழக்கங்கள் பெரும்பாலும் ஆண் ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில் இவர்களை அன்பொழுகத்தான் நடத்த முடியும் காரணம் இவர்கள் ஏதாவது ஏடாகூடமாக வீட்டிலோ வெளியிலோ ஆசிரியரைப்பற்றி சொல்லிவிட்டால் அது மிகப் பெரிய இழப்பு ஏற்படுத்தும்.
இம்மாணவிகள் என்னைப் பொறுத்த வரையில் மூன்று பிரிவாகக்கொள்ளலாம்,
முதலாவதாக இவர்களில் நன்றாக படிக்கக் கூடிய ஆசிரியரை மதிக்கும் பண்புள்ள கற்றுக்கொள்ள ஆர்வமுடைய மாணவி,இவள் படிப்பு தவிற சினிமா தொலைக்காட்சி போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை தனது உடை ஆபரணம் மற்றும் அலங்கரிப்பதில் அதிக அக்கறை செலுத்துவதில்லை.இவர்கள் தான் அந்த வகுப்பில் ஆசிரியர் திறமையாக பாடம் நடத்த ஒரு உயிரோட்டமாக இருக்கிறார்கள்.இவர்களால் எந்தப்பிரச்சினையும் இல்லை..
இரண்டாவதாக வரும் மாணவிகள் இவர்கள் முதலாவதான மாணவிகளின் கூட்டத்தில் காணப் படுவார்கள்...நன்றாகப் படிப்பார்கள் 70 80 மதிப்பெண்கள் வாங்கும் திறமையுடையவர்கள்.ஆசிரியரையும்  அவ்ரது பர்சனல் விஷயங்களையும் அவரிடம் கேட்பதும் அவரிடம் பிரியம் காட்டுவதும் அவர் திறமையான பாடம் சொல்லி என்று அவரிடம் முகத்துக்கு எதிரில் முகமன் சொல்லுவதும் பள்ளிக்கு வரும்போது அல்ங்கரித்துக் கொண்டு வருவதும் அவசியம் இல்லாமல் நகைகள் அணிந்திருப்பதும் பொழுதுபோக்கு விஷயங்களில் டி‌வி சினிமா நடிகர் நடிகையர் பற்றிய அப்டேட்டில் இருப்பார்கள். 
என்ன போரடிக்கிறேனா?
கொஞ்சம் பின்னால படியுங்களேன் ஒரு முக்கியமான் மேட்டர் சொல்ல வேண்டியிருக்கு...
இந்த இரண்டாமத்தவர்கள் ஆசிரியருக்கு மிகவும் ஆபத்தானவர்கள்...
இப்படித்தான் எனது ஒன்பது ஆண்டு கால ஆசிரிய அனுபவத்தில் நடந்த சம்பவம் ஒன்று...
வழக்கம் போல ஒரு நாள் மதிய பாட வேளை இறுதி வகுப்புகள் செய்முறைக்கானது (பிராக்டிகல்) மதியம் மூன்று மணிக்குப் பிறகு நான்கு இருபது வரை.மாணவிகள் தங்களின் பிராக்டிக்கல் வகுப்புக்கு கூடத்திற்கு வந்தனர். அன்று வழக்கம் போல அவர்களுக்கு ஒரு வேதி உப்புக் கலவை தரப்பட்டு அதன் பண்புகளை பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறிந்து உப்பின் பெயரை சொல்வது தான் சோதனை. எனவே பயிற்சியில் இருப்பவர்களுடன் அவர்களின் சோதனைக்கு உதவிக்கொண்டு பம்பரமாய் சுற்றி வந்து கொண்டிருந்தேன்...
ஆய்வுக்கூடம் பள்ளியின் வகுப்பறைகளை விட்டு துண்டானது. 
சிறிது நேரம் கழித்து என் இடத்தில் வந்து அமர்ந்து புத்தகத்தை விரித்தபோது ஒரு கடிதம் போன்ற அழகான கையெழுத்துடனான ஒரு தாள்.
படித்தேன்
சார் 
உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். அருமையாகப் படம் நடத்துகிறீர்கள். எனக்கு ரெம்ப பிடிக்கும்.நீங்கள் என்னை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் நான் மிகவும் தடுமாற்றம் அடைகிறேன். என்னை உங்களுக்குப் பிடிச்சிருந்தாலும் என்னிடம் இப்போது சரியாகப் பேசமாட்டேன்கிறீர்கள்.நீங்கள் இல்லையென்றால் நான் செத்துவிடுவேன். நான் என் பெயரை குறிப்பிட மாட்டேன்.என்னை நீங்கள் இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்றால் நான் உங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் கவனியுங்கள் சுவிட்ச் போர்டுக்கு அருகில்...
அதிர்ந்து போனேன் வியர்த்து விட்டது. மூன்று பிள்ளைகள் இரண்டு பெண் மக்கள் உள்ளடக்கம் கொண்ட குடும்பத்தின் தகப்பன் நான்.ஊரில் சொந்த ஊரில் உள்ள ஒரு மகள் அந்தஸ்தில் என்னிடம் பயிலும் மாணவியின் கடிதம் படித்து முடித்தவுடன் கால்கள் நடுங்கியது...
இப்போது தயக்கத்துடன் அந்த குறிப்பிட்ட திசையை இடத்தைப் பார்த்தேன்.அவள் நல்ல ரேங்க் எடுக்கும் ஒரு மாணவி.வெளிநாட்டில் நல்ல பதவியில் இருந்து குடும்பத்தை வளப்படுத்தும் என் நண்பரின் மகள் தான்.அவளது தந்தைய்ன் திருமணத்தில் நானும் ஒரு மாபிள்ளைத் தோழன் !
கேவலமான ஒரு நிகழ்வு..எப்படி இந்த பிரச்னையில் இருந்து விடுபடப் போகிறேன்... 
மனம் சரியில்லை வேறு மாணவிகள் யாருக்காவது தெரியுமா? பயத்துடன் கண்கள் அலைபாய்ந்தது.... அப்படி ஒன்றும் என்னால் கணிக்க முடியவில்லை.
வீட்டுக்குச் சென்றவுடன் முதல் வேலையாக என் அறையில் சென்று கட்டிலில் படுத்துவிட்டேன் முடங்கிவிட்டேன்...மாணவர்களின் வகுப்பில் லீடர் வந்தான் 6.30 மணியானதால் சார் உடம்புக்கு சரியில்லையா? ஸ்பெஷல் வகுப்பில் அனைவரும் காத்திருந்துவிட்டு நீங்கள் வரவில்லையென்பதால் கேட்க வந்தேன் என்றான். இல்லைப்பா உடம்பு முடியவில்லை எல்லோரையும் போகச்சொல்லி வகுப்பை பூட்டி விடு நாளை பார்ப்போம்.
தனது பள்ளி விட்டு வந்த மனைவி (வேறு பள்ளி) அருகில் வந்து நெற்றியில் கை வைத்துப் பார்த்து விட்டு என்ன உடம்பு? ஏதாகிலும் பிரச்னையா?
நடுங்கும் கைகளில் மடித்திருந்த தாளை எடுத்து மனைவியிடம் தந்தேன். 
படித்துவிட்டு என்னையும் ஒரு பார்வை பார்த்தவள் எழுந்திரிங்க உங்க வேலையைப் பாருங்க கிழிச்சுப் போட்டு வேறு வேலையைப்பாக்காம இப்படி இதுக்குப் போயி பயந்து படுத்துட்டீங்களே?
(ஆளு யாரு என்று இன்று வரை கேட்கவில்லை)
நாளைக்கு வழக்கம் போல வகுப்புக்குப் போயி பாடம் நடத்துங்கள், இது மேலும் தொடர்ந்தால் பேசலாம். சரியெனப்பட்டது. தூக்கம் வரவில்லை. பள்ளிக்குப் போனேன் நிர்வாகிக்கு சலாம் சொன்னேன். 
முதல் பாடவேளை மாணவர்களுக்கானது, இரண்டாவது பாட வேளை 11 ஆம் வகுப்பு மாணவிகள் பாடம் முடிந்த பிறகு இடைவேளை கழிந்து அந்த வகுப்புக்குப் போனேன். இப்போது கொஞ்சம் கோபமாக இருப்பதாக காட்டிக் கொண்டு ஒரு நான்கு 10 மதிப்பெண் வினாக்கள் (ஏற்கெனவே நடத்தியது) 15 நிமிடங்கள் திருப்புதல் செய்ய அனுமதித்து அவற்றை எழுதிக்காட்ட வேண்டும் என அறிவித்தேன்.
மாணவிகள் தயாராயினர். குறிப்பிட்ட நேரத்தில் எழுதத் தொடங்கிவிட்டனர்.
மனசு படபடத்தது. இன்று கொஞ்சம் தெளிவாக இருந்தேன். ஒவ்வொருவராகப் பார்ப்பது போல் அவள் அருகிலும் சென்றேன். பேப்பரை எடுத்துப் பார்த்தவன் அதிர்ந்து போனேன். ஒன்றுமே எழுதவில்லை. அவளால் எழுத முடியும் ,ஏற்கெனவே எழுதியிருக்கிறாள். கொஞ்சம் சத்தமாக கத்த ஆரம்பித்து விட்டேன். 
நீ படிக்க வார மாதிரியா வாறே..சும்மா தேவையில்லாமல் எதையாவது வகுப்பில் பேசிக்கிட்டு இருக்கதும், பாடத்தில் அக்கறையில்லாமல் குழம்பிக்கிட்டு ஏதாவது பண்ணிக்கிட்டு இருக்க. இது உனக்கு மரியாதை இல்ல..ஒழுங்கா இல்லன்னா தூக்கிப் போட்டு மிதிச்சிருவேன்...என்ன எழுதியிருக்க நீ? வெறும் வெள்ளப் பேப்பர கையில் வச்சிருக்கே? உங்க வாப்பாட்ட பேசவா? ஒடிந்து போனாள். கண்ணில் தழும்பி நின்ற நீர் கரை உடைத்து அவளது உதட்டில் பட்டது. இனம் புரியாத ஒரு கவலையில் பதட்டத்தில் அவளை தள்ளினேன்.
இப்போது மற்றவர்கள் பேப்பர்களை வாங்கி வைத்துக்கொண்டு என் பணியைத்தொடர்ந்தேன். நேரம் வந்ததும் விடை பெற்றேன்.
தொடர்ந்து நான்கு நாட்களாக பள்ளிக்கு அந்த மாணவி வரவில்லை..வகுப்பில் இதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. சாதாரணமாக இரண்டு நாட்கள் தொடர்ந்து வராவிட்டால் நிர்வாகத்திற்க்கு தெரிவிப்பது வகுப்பாசிரியர் கடமையாதலால் தெரிவிக்கப்பட்டது.நிர்வாகி என்னை தனியாக சந்திக்கும்படி சொன்னார். உதறியது. ஏதாவது தெரிந்திருக்குமோ? நிர்வாகி எனக்கு உறவு முறையில் மாமா முறை ஆதலால் கண்ணியமாகப் பழகுவார். 
கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது முகம் கொடுப்போம் என்ன நடக்கிறது பார்ப்போம்.
மாலையில் சந்தித்தோம். அப்பாடா ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அவள் பள்ளியை விட்டு நின்று விட்டாளாம். நான் கடுகையாக நடந்து கொண்டேனா என்று கேட்டார். நான் எல்லோரையும் போலத்தான் அவளிடம் நடந்து கொண்டேன் என்று சொன்ன பிறகு, என்னை அவளது வீட்டில் சென்று பெற்றோரை வைத்துக்கொண்டு பேசி சமாதானப்படுத்தி பள்ளிக்கு வரக் கேட்கும்படி சொன்னார். சரி என்று சொல்லிவிட்டு. மறுநாள் என் மனைவியிடமும் சொல்லிவிட்டு அவள் வீட்டில் அவளது தாயார் மற்றும் பாட்டி இருக்கையில் பேசினேன். பள்ளிக்கு வரச்சொன்னேன் வருவதாக சொன்ன மாணவி அதன் பிறகு வரவே இல்லை. எனக்கும் என் மனைவிக்கும் அந்த மாணவிக்கும் மட்டுமே தெரிந்த இந்த ஒரு உள் நிகழ்வு முழுக்க முழுக்க மனதை விட்டு அகன்றுவிட்டது.
என்றாலும் ஒரு நல்ல மாணவியின் படிப்பு இடை நின்று போன வருத்தம் என் மனதில் அப்பப்போ வந்து அறுக்கத்தான் செய்கிறது. 
இங்க இறக்கி வச்சிட்டேன் பாரம் கொஞ்சம் குறைஞ்ச மாதிரி இருக்கு...

Related Posts Plugin for WordPress, Blogger...