செவ்வாய், ஜூலை 12, 2011

இறந்த காலம்- அவன் தோற்றத்தில்

ஆயிரம் முட்களாய் அழுந்தக்குத்தும் நினைவுகள்
அல்லல்களை மட்டுமே சுமையாய் தூக்கும் இதயம்
அறுவடைநேரத்தில் பெய்த மழையாய் உறவுகள் 
அசையும் காலச்சக்கரத்தின் அடியில் நசுங்கிய நான் 

நடுங்கும் உடலத்தின் நலமில்லாத இறந்த காலம்
பிடுங்கிப் பிறாண்டியவகையிலான சதைகள் 
சாட்சியில்லாமல் அரங்கேற்றிய சதிகள் - பேய் 
ஆட்சி செய்யப் பல்லக்குத் தூக்கிய மனசு

உசுப்பேத்தி உடம்பு பிடித்துவிடும் நிழல்கள் 
உப்பைத்தின்ற உடன்பிறவா உளவாளிகள்.
உதடு நாசிக்கிடையே வளர்த்திய முடிதான் வீரமெனில்
மஞ்சு விரட்டுக்களில் இருளில் கதியிழந்த கன்னியர்கள் 

வயல் வெளிகள் தோப்புகள் பம்புசெட்டுகள் பறவைகள் 
பச்சைபயிர்கள் புழு பூரான் இவை நேரில் கண்ட சாட்சிகள்
அடுத்தவன் தோப்பில் காய் பறிக்கும் அசிங்க அதிகாரம் 
அவமான பயம் கொண்ட பெண்மைகளிடம் ஆம்பிளை(ழை)

கபம் கட்டிய நெஞ்சில் இருமித் துப்பியதில் குருதி 
சுயம் மறந்து தடவியபோது  உதடுகளில் பழுத்த முடிகள்
பயத்துடன் திரும்பிய என்னையே உற்றுநோக்கிய அவன்
அச்சு அசலாக என்னைப்போல் என் சாயலில்- அவள் யார்?

வானம் காற்று மேகம் சூரியன் மேய்ந்த கால்நடை
வாய்பேசமுடியாத வனத்திடை சாட்சிகளே - அவன் 
யார் தோப்பில் எந்த இரவில் என்ன மரத்தில் 
எப்போது பறித்து தின்ற காய் வழி என் விருட்சம்?

ஓடும் ஆற்றுத் தண்ணீரில் என்னைக் கழுவிய நீர் எது
வீசும் காற்றில் நான் உள்வாங்கிய வாயு எது 
வீசிய காசு எவ்வளவு இந்த விதை இங்கு முளைக்க
இறந்துபோன என் நிகழ்காலம் காட்டும் அவன்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...