
அந்தகார இருளுக்குள்ளே அழுதிடும் அவள் மனசு
ஆடிய ஆட்டங்கள் அலையடித்து ஓய்ந்திடாது
கடற்கரை சொரிமணல் போல் எண்ணமுடியா பாவங்கள்
காலத்தை ஏமாற்றி கைகொண்ட கருக்கலைப்புகள்
இவள் யார்?
உணவுக்கும் உடுப்புக்கும் கைமாற்றாய் கற்பு
மானமும் நாணமும் மரண அடி வாங்கிய பின்பு
மணக்கும் பூவோடு மாலைநேரத்துக்கு தயாராகும்
நறுமணம் வீசி நடைபயிலும் நாறிப்போன சடலம்
இறந்து போன மனசை சுமந்த இரவுப்பறவை
இச்சையோடு இசைக்கப்படும் இசையிழந்த ராகம்
காசு கொண்டு காம விருந்தளிக்கும் கவர்ச்சிப் பதுமை
கறகால மனிதனை கண் முன்னெ காட்டும் கண்ணாடி
இக்கறை மட்டுமின்றி எக்கறையிலும் இல்லாத பச்சை
ஏமாற்றமே நிரந்தரமான சுத்தமான சுகக்கூலி
பண்டமாற்றில் பெண்மையை புழக்கத்தில் விடும் பேதை
சண்டாளர் ஆட்டத்தில் வெட்டப்படும் சதுரங்க ராணி
ஆலைகளும் வேலைகளும் காடுகளும் களைப்பணியும்
கூலிகளை கை நிறையக் கொண்டு வந்து கொடுத்தாலும்
காலிகளும் அவர் தரும் கைப்பணமும் காலமெலாம் உள்ளவரை
தினமும் ஒரெ முகமா? எனும் சிகப்பு விளக்கு சிறப்பாய் எரியும்….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக