கலங்கிடும் மனசுக்குள்ளே கடவுளை தேடிப்பார்த்தேன்
கசிந்திடும் கண்ணீரோடு கையறு நிலையிலானேன்
காலங்கள் கடந்த பின்னும் கஷ்டங்கள் தீரவில்லை
கைவிட்டுப்போனார் என்னை கவலைகள் தானே மிச்சம்
விலகிடும் நேசம் எல்லாம் விலங்கிட்டுப் போன மாயம்
விளங்கிட முடியவில்லை வீணானதோ என் காலம்
வெற்றிடமான சுற்றம் வேற்றிடம் தேடி நிற்க
பெற்றதும் பேணியதும் புறந்தள்ளிப் போனதேனோ
உற்ற துணையும் கூட உதாசீனம் செய்யும் நாளில்
மற்றவரைக் குறைசொல்ல மடையனா நான்
மூப்பெனும் பிணிக்கானேன் முதியவனாய் கிழமானேன்
மூலைக்கு இடம் பெயர்ந்தேன் முழுசாக ஒதுக்கப்பட்டேன்
ஓடிப் பொருளீட்டி உறவுகளுக்கு உயிருட்டி
தேடிப் பல திசைகள் திரிந்து பின் தஞ்சமானேன்
ஆடி அடங்கும் நேரம் ஆசையாய்வந்த என்னை
ஆலம் வேர் என்று அறியாமல் போனாரே
முத்திய மனநோயாம் மூளைக்குப் புரியாதாம்
கத்தியே என் மனைவி என்னிடமே ஒப்புவிப்பாள்
சுற்றியே நடக்கும் கூத்தை சொல்லியழ நேரமில்லை
சட்டெனச் சாக வேண்டுமென் சாம்பலின்றி மறைய வேண்டும்
இன்னொரு பிறவி வேண்டாம் எனக்கிந்த ஈனம் வேண்டாம்
பிறப்பொன்று நான் எடுத்து பின்னாளில் சீரழிந்த
இப்பிறப்பொன்றே போதும் இவ்வுலகம் விட்டால் போதும்
இங்கே
பெற்றவராயினும் பிள்ளைகளாயினும் பொருளிருந்தால் தான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக