வியாழன், ஆகஸ்ட் 04, 2011

ஆடு வெள்ளாடு

பொழுதுகள் எப்போதும் பொல்லாப்புடன் கழிய 
புண்பட்ட மனசு மட்டும் புரவிஏறிப் பறக்கிறது
ஆற்று நிரோட்டத்தில் அலைக்கழிந்த சருகினைப்போல் 
அமைதிஇழந்த நானும் அடைவதெங்கே தெரியவில்லை ...

கண்முன்னே புன்னகைத்து கைகுலுக்கி கண்மகிழ்ந்து 
களிக்கும் உறவுகளின் கண்பார்வை காசுநோக்கி 
ஐம்பதின் வாலிபமும் அதன்வழி அனுபவமும் 
கடல்தாண்டி மனசுக்குள் கண்டதெல்லாம் ஏமாற்றமே 

மாதம் பிறந்துவிட்டால் பெற்றோரும் உற்றோரும் 
பெண்ணவளும் பிள்ளை களுக்குமாய் சேர்த்து 
கண்ணைப் போல கருதுவது காசு ஒன்றைத்தான் 
கருவியாய் பறக்கும் அது அன்பின் அடையாளமாய் 

சோலையில் என்சொந்தம் சுகப்பட்டு வாழவேண்டி 
பாலையில் நானும் பகலிரவாய் காய்கின்றேன் 
ஈச்சை மரமேறி என்னுடம்பின் காய்ப்புகளை 
இனிக்கும் அதன் கனிகள் ஒருபோதும் காட்டாது 

நோய்நொடி அண்டாது என்னுறவை நான் காக்க 
சாய்ந்திடும் பொழுது வரை சம்மதித்து பணிசெய்வேன் 
சேர்த்திடும் மணித்துளிகள் சேர்ந்திடும் வரும்படியாய்
சோர்ந்திடும் வேளைகளில் சுகமளிப்பது அதுதானே 

கூடி உறவுற்று களிப்புடனே நான் வாழ 
கோடி ஆசையுண்டு குன்றுபோல் என்மனதில் 
ஆடுமென் ஆட்டம் நின்றால் அச்சாணி கழன்றுவிட்டால்
வாடி நிற்கும் உயிர்களுக்கு வழி யார் காட்டுவது? 

ஆடை புதுநகைகள் அத்தனைக்கும் ஆசைப்பட்டு 
அன்பு உறவுகளை அயல்தேசம் அனுப்புகிறார்

ஒன்று தெரியுமா...

பாகிஸ்தானியும் பெங்காலியுமஎன் பாசமான உறவுகள்
மலையாளியும் மதராசியும் நேசமுள்ள தோழர்கள்

சிக்கன் டிக்காவும் குப்புஸ் ரொட்டியும்
சிக்பிசும் டப்பாவில் செத்த மீன்கறியும் இங்கே 

கொளஞ்ச சோத்துக்கும் கொளத்து மீன்கறிக்கும்
கொஞ்சம் ஏங்குது மனசு ...கொஞ்ச நேரம் தான் ....

அமைதிஇழந்த நானும் அடைவதெங்கே தெரியவில்லை

1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...