சனி, ஆகஸ்ட் 06, 2011

பழகிய ரணம் தான்




பூமியின் சுற்றில் ஒரு சிறிய தடுமாற்றம் 
உறவுகளாய் ஆன உடலில் ஒரு அங்கம் 
வெட்டப்பட்டநிலையில் குருதியுடன் நான்...


விறகாய் காய்ந்துபோன மனசு 
வெட்டையாய் காய்ந்த நிலம் போல 
வாடி வதங்கிய என்முன்னில் 
எல்லாம் சூனியமாய் தெரிய ...


மணம் முடித்து மாலையும் கழுத்துமாய் 
மனை விட்டுப் பிரியும் மகள் 
மருட்சியுடன் கண்களில் ஏக்கத்தை 
சூடிக்கொண்டு 


ஒரு கையில் கணவனையும் 
மறு கையில் தனது உடைமைகளை
பற்றிக்கொண்டு ....


இருபது ஆண்டுகளாய் வலம் வந்த வீதி 
வளைய வந்த வீடு 
வாசம் செய்த தோட்டம் 
வளர்த்து வந்த மரம் செடிகள் 
வளைந்து நின்ற உறவுகளை 
உதறிக்கொண்டு...


மகளின் நினைவுகள் சுழற்காற்றாய்...


பிஞ்சு வயதில் அவள் நடை பழகிய வண்டி
பள்ளியில் பெற்ற மிதிவண்டி
சேர்த்த புளியங்கொட்டைகள் கோலி  
ஸ்பரிசம் காயாத பாத்திரங்கள்
அவள் மடியில் தவழ்ந்த பூனைக்குட்டி 
அவள் உறங்கிய பாய் தலையணை 


இன்று புதிதாய் வெள்ளையடித்த போது 
அவளின் இருப்பும் சேர்த்துத் தான் 
காயக் காய வெள்ளையானதோ
பின்னர் வெறுமையானதோ...  


உறவுகளும் பிணைப்புகளும் 
காகிதத்தால் ஆன சங்கிலி என்றால் 
விட்டுப் பிரியும் அவர்களின் நினைவுகள்
இரும்புச்சங்கிலியாய் இறுக்கமாய்...


தன்னைக் கருணையுடன் தாய் போல வளர்த்து 
தோழியாய் தாதியாய் தன் நிழலாய் நின்ற
தமக்கை இழந்த தம்பி தேம்பிக்கொண்டு 


தேற்ற நினைத்து அவனிடத்தில் சொன்னேன்...


புல்லாங்குழலைக் கொடுத்த 
மூங்கிலின் முனகலைக் கேட்டிருக்கிறாயா 
மலர்களை வழங்கிய வனத்தில் 
மருகுதல் கண்டிருக்கின்றாயா 
பொன்னைப் புறம் தந்த 
மண்ணின் துன்பம் தான் கண்டாயா


மரத்தினைப் பிரிந்து தானே முங்கில் 
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும் 
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும் 
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும் 
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு 

அப்துல்லாஹ்




பூமியின் சுற்றில் ஒரு சிறிய தடுமாற்றம் 
உறவுகளாய் ஆன உடலில் ஒரு அங்கம் 
வெட்டப்பட்டநிலையில் குருதியுடன் நான்...


விறகாய் காய்ந்துபோன மனசு 
வெட்டையாய் காய்ந்த நிலம் போல 
வாடி வதங்கிய என்முன்னில் 
எல்லாம் சூனியமாய் தெரிய ...


மணம் முடித்து மாலையும் கழுத்துமாய் 
மனை விட்டுப் பிரியும் மகள் 
மருட்சியுடன் கண்களில் ஏக்கத்தை 
சூடிக்கொண்டு 


ஒரு கையில் கணவனையும் 
மறு கையில் தனது உடைமைகளை
பற்றிக்கொண்டு ....


இருபது ஆண்டுகளாய் வலம் வந்த வீதி 
வளைய வந்த வீடு 
வாசம் செய்த தோட்டம் 
வளர்த்து வந்த மரம் செடிகள் 
வளைந்து நின்ற உறவுகளை 
உதறிக்கொண்டு...


மகளின் நினைவுகள் சுழற்காற்றாய்...


பிஞ்சு வயதில் அவள் நடை பழகிய வண்டி
பள்ளியில் பெற்ற மிதிவண்டி
சேர்த்த புளியங்கொட்டைகள் கோலி  
ஸ்பரிசம் காயாத பாத்திரங்கள்
அவள் மடியில் தவழ்ந்த பூனைக்குட்டி 
அவள் உறங்கிய பாய் தலையணை 


இன்று புதிதாய் வெள்ளையடித்த போது 
அவளின் இருப்பும் சேர்த்துத் தான் 
காயக் காய வெள்ளையானதோ
பின்னர் வெறுமையானதோ...  


உறவுகளும் பிணைப்புகளும் 
காகிதத்தால் ஆன சங்கிலி என்றால் 
விட்டுப் பிரியும் அவர்களின் நினைவுகள்
இரும்புச்சங்கிலியாய் இறுக்கமாய்...


தன்னைக் கருணையுடன் தாய் போல வளர்த்து 
தோழியாய் தாதியாய் தன் நிழலாய் நின்ற
தமக்கை இழந்த தம்பி தேம்பிக்கொண்டு 


தேற்ற நினைத்து அவனிடத்தில் சொன்னேன்...


புல்லாங்குழலைக் கொடுத்த 
மூங்கிலின் முனகலைக் கேட்டிருக்கிறாயா 
மலர்களை வழங்கிய வனத்தில் 
மருகுதல் கண்டிருக்கின்றாயா 
பொன்னைப் புறம் தந்த 
மண்ணின் துன்பம் தான் கண்டாயா


மரத்தினைப் பிரிந்து தானே முங்கில் 
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும் 
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும் 
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும் 
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு 

அப்துல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...