சனி, செப்டம்பர் 17, 2011

உனக்கே உயிரானேன்





கிணுங்கிய ஒலி அழைப்பில் 
கவனம் சிதறியவள்
கைபேசியை எடுத்த போது 
குறுஞ் செய்தியில் 

முடிவு என்ன கண்மணி 
உன் பதிலுக்கு காத்திருக்கிறேன்
இப்படிக்கு
உன் உயிரானவன்...

முன்று ஆண்டுகளில் 
கல்லூரிப் படிப்புக்காக 
காலெடுத்து வெளியில் வைத்தவள் 
காதலுற்று கையறு நிலையில்

இதோ அழைக்கிறான் 
இப்போதே கிளம்பவேண்டும் 
அவனுடன்..
இந்த உலகத்தின் இன்ப 
எல்லையைக் காட்டுவதாக 
வாக்களித்துள்ளான்..

சில துணிகளும் சட்டிபிகேட்டுகளும்
எப்போதும் அணியும் நகைகளுமாய் 
கிளம்ப எத்தனித்த போது..

விட்டுத் தொலைபேசி ஒலித்தது
வாப்பா இணைப்பில் 
வழக்கமான விசாரிப்புகள் 
அவருக்கு இப்போது அடிக்கடி 
உடம்புக்கு முடியவில்லையாம் 
என் மீது அன்பைச் சொரிபவர் 
மனசை வலித்தது 

என் ஒருத்தியை 
கரை சேர்க்கத்தான் 
கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு...

தம்பி ஓடி வந்தான் 
வாப்பவிடம்
அவனது குரலைக் கேட்டவுடன் 
முதலில் அவனை 
இரண்டு நிமிடம் கொஞ்சுவார் 
பின்னர் தான் பேசுவார்
அவனுக்கு அதில் ஆசை

தொழுது கொண்டிருந்த உம்மா
ஓடிவந்து பேசினாள்
பெரும்பாலும் அழுதாள் 
மனம் பொறுக்கச் சொன்னாள் 
மிண்டும் விடுப்பில் 
வரும்போது மருத்துவம் 
செய்து கொள்ளலாம் 
நம் மக்களுக்காக 
பல்லைக் கடியுங்கள்.

நாம் பெற்ற மக்கள் 
நம் கல்பின் கனிகள் 
அவர்களுக்காகத் தானே 
உயிர் வாழ்கிறோம்...
அவர்களை சந்தோசமாக 
வைத்துக் கொள்ள 
நாம் என்ன துன்பம் 
வேண்டுமானாலும் படலாம்.

கைபேசியில் மிண்டும் 
குறுஞ் செய்தி 
உனக்கு என்ன ஆச்சு 
பதிலைச்சொல்
மதங்களும் இனங்களும் 
பெற்றோரும் மற்ற யாவும் 
காதலுக்குத் தடை இல்லை

புரிந்து கொள்!!!
புறப்படு கண்மணி 

ஆவேசமாக தரையில் எறிந்தேன்
கைப் பேசியை..
நொறுங்கியதில் எழுப்பிய ஒலி

என்னம்மா ஆச்சு 
கிழே விழுந்து விட்டது

சரி விடு வாப்பா ஆசையாய் 
வாங்கித் தந்தது உனக்கென்று
வேறு புதிதாக ஒன்று 
அனுப்பச் சொல்லுவோம்...

வேண்டாம் ம்மா 
அந்தச் சனியனே 
நமக்கு வேண்டாம்.

எந்தச் சனியன்...











கிணுங்கிய ஒலி அழைப்பில் 
கவனம் சிதறியவள்
கைபேசியை எடுத்த போது 
குறுஞ் செய்தியில் 

முடிவு என்ன கண்மணி 
உன் பதிலுக்கு காத்திருக்கிறேன்
இப்படிக்கு
உன் உயிரானவன்...

முன்று ஆண்டுகளில் 
கல்லூரிப் படிப்புக்காக 
காலெடுத்து வெளியில் வைத்தவள் 
காதலுற்று கையறு நிலையில்

இதோ அழைக்கிறான் 
இப்போதே கிளம்பவேண்டும் 
அவனுடன்..
இந்த உலகத்தின் இன்ப 
எல்லையைக் காட்டுவதாக 
வாக்களித்துள்ளான்..

சில துணிகளும் சட்டிபிகேட்டுகளும்
எப்போதும் அணியும் நகைகளுமாய் 
கிளம்ப எத்தனித்த போது..

விட்டுத் தொலைபேசி ஒலித்தது
வாப்பா இணைப்பில் 
வழக்கமான விசாரிப்புகள் 
அவருக்கு இப்போது அடிக்கடி 
உடம்புக்கு முடியவில்லையாம் 
என் மீது அன்பைச் சொரிபவர் 
மனசை வலித்தது 

என் ஒருத்தியை 
கரை சேர்க்கத்தான் 
கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு...

தம்பி ஓடி வந்தான் 
வாப்பவிடம்
அவனது குரலைக் கேட்டவுடன் 
முதலில் அவனை 
இரண்டு நிமிடம் கொஞ்சுவார் 
பின்னர் தான் பேசுவார்
அவனுக்கு அதில் ஆசை

தொழுது கொண்டிருந்த உம்மா
ஓடிவந்து பேசினாள்
பெரும்பாலும் அழுதாள் 
மனம் பொறுக்கச் சொன்னாள் 
மிண்டும் விடுப்பில் 
வரும்போது மருத்துவம் 
செய்து கொள்ளலாம் 
நம் மக்களுக்காக 
பல்லைக் கடியுங்கள்.

நாம் பெற்ற மக்கள் 
நம் கல்பின் கனிகள் 
அவர்களுக்காகத் தானே 
உயிர் வாழ்கிறோம்...
அவர்களை சந்தோசமாக 
வைத்துக் கொள்ள 
நாம் என்ன துன்பம் 
வேண்டுமானாலும் படலாம்.

கைபேசியில் மிண்டும் 
குறுஞ் செய்தி 
உனக்கு என்ன ஆச்சு 
பதிலைச்சொல்
மதங்களும் இனங்களும் 
பெற்றோரும் மற்ற யாவும் 
காதலுக்குத் தடை இல்லை

புரிந்து கொள்!!!
புறப்படு கண்மணி 

ஆவேசமாக தரையில் எறிந்தேன்
கைப் பேசியை..
நொறுங்கியதில் எழுப்பிய ஒலி

என்னம்மா ஆச்சு 
கிழே விழுந்து விட்டது

சரி விடு வாப்பா ஆசையாய் 
வாங்கித் தந்தது உனக்கென்று
வேறு புதிதாக ஒன்று 
அனுப்பச் சொல்லுவோம்...

வேண்டாம் ம்மா 
அந்தச் சனியனே 
நமக்கு வேண்டாம்.

எந்தச் சனியன்...







12 கருத்துகள்:

  1. நன்றி மோகன் ஒற்றை வரியில் உரையிட்ட உங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அருமையான வரிகள் //
    முன்று ஆண்டுகளில்
    கல்லூரிப் படிப்புக்காக
    காலெடுத்து வெளியில் வைத்தவள்
    காதலுற்று கையறு நிலையில்
    //
    அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  3. உங்களின் வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி ஐயா...
    உங்களின் அன்பை என்றும் நாடும் அப்துல்லாஹ்
    அப்படியே செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு பாலா உங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் என் அன்பும் மகிழ்ச்சியும்...
    உங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி அய்யா...

    பதிலளிநீக்கு
  5. தாய் தந்தையரின் கண்ணீரில் தான் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பது....

    பெற்றோர்களின் உழைப்பில் படித்து பட்டம்பெற்று பெற்றோரை காக்கவேண்டும்...

    ஆனால் இப்போதிருக்கும் இளம்பிள்ளைகளோ கல்வியை விட காதலில் அதிகம் நாட்டம் காண்பிக்கின்றனர்...

    ஆனாலும் பெற்றோரின் பிரார்த்தனைகளே பிள்ளைகளை தவறான வழியில் போக விடாமல் காத்துவிடுகிறது எப்படியோ...

    மனதை நெகிழவைத்த இயல்பு நடை கவிதை வரிகள் அப்துல்லாஹ் சார்...

    சிறப்பான படைப்புகள் தொடர என் அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி...
    தங்களின் மேலான அன்பை என்றும் போற்றும் அப்துல்லாஹ்
    தமிழ் வாழ்க

    பதிலளிநீக்கு
  7. நல்ல கருத்தாக்கமுள்ள கவிதை வரிகள்!

    பதிலளிநீக்கு
  8. அன்புச் சகோதரி உங்களின் ப்ளாக் பார்த்தேன். எனக்குப் பிடிச்சிருந்தது..எங்க ஊரில் கருப்பாநதி ஆற்றின் கரையில் கொஞ்சம் நேரம் கண்மூடிக் கிடந்து, உறவுகளுடன் அளவளாவி, கூட்டாஞ்சோறு ஆக்கி உண்டு, வில்லு வண்டியில் ஏறி விடு வந்த மாதிரி அப்பிடி ஒரு மண் மணக்கும் எழுத்துக்கள்...
    இந்த வகையை விட்டு விடாதிர்கள் உங்களின் இந்தக் கோணத்தில் இன்னும் போட்டியாளர்கள் கிளம்பவில்லை
    சேரமான் பெருமாளின் செல்வமிக்க குமரிக் கரையிலிருந்து உங்களின் குரல்.... எண்ணங்கள் உள்ளடக்கிய எழுத்தாக இனி மலரட்டும்.
    வாழ்க தமிழ்
    வளர்க நற்றமிழர்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...