கலைத்துப் போடடப்பட்ட
நெகிழி(பிளாஸ்டிக்) குச்சிகளை
அவற்றின் வண்ணங்களையும்
வடிவங்களையும் மனதில் கொண்டு
வேகமாக ஒன்றோடொன்று
பொருத்தினான் என்மகன்
அவை நான் அவனுக்காக
வாங்கித்தந்த
பொம்மை வீடு கட்டும்
விளையாட்டுப் பொருள்.
கொஞ்சமான நேரத்தில்
குதித்துச் சத்தமிட்டான்
வாப்பா இது என்வீடு ! என்று
அருகில் சென்றேன்
வலதுகை முஷ்டி மடக்கி
வலது நெஞ்சில் அழுத்திய
அவனது முகத்தில்
அப்படி ஒரு பெருமிதம் ...
சுட்டிக்காட்டிச் சொன்னான்
வாசற்படி தொடர
தலைவாசலும் தரைத்தளமும்
சன்னலும் மேல்முகடும்
ஒவ்வொரு வண்ணங்களில்
மிளிர்ந்தது.
செல்லமாய் அவன் தலை கலைத்து
மெல்லக் கன்னம் தடவிய போது
என் கண்களில் நீர் அரும்பியது
இது என் புது வீடு
நான் எப்போது சொல்வேன்
கரையேற நிற்கும்
இரு சகோதரிகளும்
பிணி வயப் பட்ட
பெற்றவர்களும்
பொறியியல் படிக்கும்
இளைய தம்பியும்
விட்டுச்செலவுகளும்
விசேச நாட்களும்...
சிதிலமடைந்து
காரை பெயர்ந்த
கரையான் தினப்பட்ட
பழைய வீட்டில்
பழகிப் போன
இதே கவலையுடன்
நான்......
எப்போது சொல்வேன்
இது என் புது வீடு!!!
அருமை பாராட்டுக்கள்
பதிலளிநீக்குதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
உங்களின் கருத்துரைக்கு என் அன்பும் மகிழ்ச்சியும் உங்களைப்போன்றோரின் மதிப்பிடு என்ன மேலும் செம்மையாக்கும் நண்பரே...
பதிலளிநீக்குஇது என் புது வீடு
பதிலளிநீக்குநான் எப்போது சொல்வேன்
கரையேற நிற்கும்
இரு சகோதரிகளும்
பிணி வயப் பட்ட
பெற்றவர்களும்
பொறியியல் படிக்கும்
இளைய தம்பியும்
விட்டுச்செலவுகளும்
விசேச நாட்களும்...
சிதிலமடைந்து
காரை பெயர்ந்த
கரையான் தினப்பட்ட
பழைய வீட்டில்
பழகிப் போன
இதே கவலையுடன்
நான்......
எப்போது சொல்வேன்
இது என் புது வீடு!!!
கலங்கிவிட்டேன் ,இந்த வரிகளால் .
சவுதி வாழும் மக்களின் ,ஒட்டு மொத்த
குரலாய் உங்கள் எண்ணம் !
எல்லாம் விலகி, விளக்கி,
வாழ்கையை விழுங்கிய
நிலையை சொன்ன வரிகள்
ஈரமாகியது கண்களை.
வாழ்கையின் தடத்தை
அழகாய் பிரதிபலிக்கும் ,
உங்கள் கவிதை !
எல்லோர் மனதிலும்,
ஈரத்தை தரும் இந்த
கவிதை !
தோழரே !வரைந்த உமது கரத்துக்கு
கலைநிலா !
கலைநிலா உங்களின் வார்த்தைகள் இந்தக் கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கும். எண்ணங்களை எழுத்தோவியமாக்கும்போது அவை சரியாக சேரும் இடம் போய் சேருமோ என்ற கவலை படைப்பாளிக்கு இருக்கும்.... உங்களைப் போன்ற வாசகர்களின் மறுமொழி முலமாக அது இப்போது என்னில் இல்லை சரியாகச் சேர்ந்திருக்கிறது என்னும் திருப்தி என்னில்...
பதிலளிநீக்கு