புதன், செப்டம்பர் 21, 2011

நல்லா நின்னு எரியும்... அப்துல்லாஹ்


கும்பலாய் வந்தனர் 
கூடி நின்று என் அங்கம தொட்டு 
அதில் ஒருவன் சொன்னான்
கிழ மரம்... 
இது சொன்னவன் கையில் 
கோடரி 
உயர்த்திறக்கியபோது  
பொத்...
ஒரே போடு 

வைரம் பாய்ஞ்ச மரம 
நல்லா நின்னு எரியும்...

அங்கங்கள் ஒவ்வொண்ணாய்
அவ்வப்போது தருகிறேனே
எரித்தால் 
எரிந்தால் போதாதா...

தலைமையைக் காக்க 
உயிரோடு பேருந்துகளும் 

தமிழனைக் காக்க
உடனே ஓர் இளம் தளிரும் 

மதவெறியைக் காக்க 
மலை மலையாய் மனிதஇனமும

வேண்டாத மருமகளை  
வீட்டில் கதவடைத்தும்

பச்சை மரங்களன்றோ
பற்றி எரிகின்றன..

தேசத்தின் தலைநகரிலும்
நாசத்தின் வேரூட்டம் 

நய வஞ்சக மனித உள்ளம 
நரித்தனமாய் ஆடும ஆட்டம் 

மானுடங்களுடன் 
பதறி சிதறி நிலைகுலைவது
மரங்கள் நாங்களும் தான்..
வேண்டுமெனில்.... 
வேரோடு வருகிறேன்
விடை தருவாயா
இந்த ஐந்தறிவுக் களியாட்டத்திற்கு 

இப்போது அவன் 

வெட்டுப்பட்ட துண்டான
என் அங்கத்திலே 
கோடரியின் கூர் தீட்டுகிறான்
அவன் சொன்னான் 

வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...


கும்பலாய் வந்தனர் 
கூடி நின்று என் அங்கம தொட்டு 
அதில் ஒருவன் சொன்னான்
கிழ மரம்... 
இது சொன்னவன் கையில் 
கோடரி 
உயர்த்திறக்கியபோது  
பொத்...
ஒரே போடு 

வைரம் பாய்ஞ்ச மரம 
நல்லா நின்னு எரியும்...

அங்கங்கள் ஒவ்வொண்ணாய்
அவ்வப்போது தருகிறேனே
எரித்தால் 
எரிந்தால் போதாதா...

தலைமையைக் காக்க 
உயிரோடு பேருந்துகளும் 

தமிழனைக் காக்க
உடனே ஓர் இளம் தளிரும் 

மதவெறியைக் காக்க 
மலை மலையாய் மனிதஇனமும

வேண்டாத மருமகளை  
வீட்டில் கதவடைத்தும்

பச்சை மரங்களன்றோ
பற்றி எரிகின்றன..

தேசத்தின் தலைநகரிலும்
நாசத்தின் வேரூட்டம் 

நய வஞ்சக மனித உள்ளம 
நரித்தனமாய் ஆடும ஆட்டம் 

மானுடங்களுடன் 
பதறி சிதறி நிலைகுலைவது
மரங்கள் நாங்களும் தான்..
வேண்டுமெனில்.... 
வேரோடு வருகிறேன்
விடை தருவாயா
இந்த ஐந்தறிவுக் களியாட்டத்திற்கு 

இப்போது அவன் 

வெட்டுப்பட்ட துண்டான
என் அங்கத்திலே 
கோடரியின் கூர் தீட்டுகிறான்
அவன் சொன்னான் 

வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...

5 கருத்துகள்:

  1. அசத்தலான கவிதை அருமை

    மரத்தில் தொடங்கும் வரிகள்
    சமூகத்தின் நிகழ் நிலையை
    வெளிச்சமிடுகிறது

    நல்லா நின்னு எரிகிறது
    உங்கள் வரிகளில் நவநிகழ்வுகள்

    பதிலளிநீக்கு
  2. அன்பு செய்தாலி
    உங்களின் முத்திரை என் பாக்கியம்...
    சிந்தனையில் நானும் உங்களின் பாட்டையில் தான் பயணிக்கிறேன்..
    இது பாரதம் எனும் கிழ மரத்தில் கூர் தீட்டும் வஞ்சகப் பதர்களுக்காக எழுதப்பட்டது...

    பதிலளிநீக்கு
  3. இதயத்துடிப்பை ஒரு நொடி நிற்கவைத்த வரிகள் அப்துல்லாஹ் சார்....

    மரமும் மனிதனின் சுயநலத்தால் எரிகிறது....மனிதனும் எரிகிறான் மத துவேஷத்தால்....

    மனிதனும் பயனற்று போகிறான் தன் வயோதிகம் வருகின்றபோது தன் பிள்ளைகளாலேயே வெளியே விரட்டப்படுகிறான்.. கொல்லும் வாய்ப்பு கொடுத்தால் அதையும் செவ்வென முடித்திருப்பார்கள் பெற்ற பிள்ளைகள்... மண்ணுக்கு பாரம் என்றா? இல்லை தனக்கு பாரம் என்று தான்......

    மரமும் பயனற்று போகிறது என்று வெட்டி வீழ்த்த சொல்கிறார்கள்.... இருந்தால் பூ காய் கனி எல்லாம் தரனும்... பட்டு போய்விட்டால் கிழமரம் என்ற பெயரோடு எரிக்க மட்டுமே உதவ வேரோடு வெட்டி சாய்க்கிறார்கள்...

    அழகிய கூரிய சிந்தனை வரிகள் அப்துல்லாஹ் சார்....
    உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் சொல்லும் கருத்து உண்மை.....

    அன்பு வாழ்த்துகள் பகிர்வுக்கு...

    பதிலளிநீக்கு
  4. உங்களின் கருத்துக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் உங்களின் ப்ளாக் வந்து பார்க்க வேண்டும். இடையில் உங்களின் பங்களிப்புகள் தொடர்ந்து இல்லாதிருந்தது. நிறைய எழுதுங்கள் தாயே ... உங்களின் மன ஓட்டங்களை எழுத்தாக்குங்கள்... உங்களின் கவிதைகளில் அது மகிழ்ச்சியான கருவைக் கொண்டதாக இருப்பினும் அடிநாதமாக அங்கும் மெல்லிய சோக இழை ஊடாடி ஒரு அழகியலைத் தரும்...
    தங்களின் மதிப்பு மிக்க பின்னுட்டங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி....

    பதிலளிநீக்கு
  5. தாக்கமுள்ள கவிதைகளை அசால்டா அனாயசமா எழுதி போட்டுடறீங்க அப்துல்லாஹ் சார். நான் வரிகளை படிக்கும்போது ஒரு நொடி செயலற்று பின் நிதானித்து நிகழ்நிலை வந்து பின்னூட்டம் இடுகிறேன் என்பதை அறிவீர்களா அப்துல்லாஹ் சார்.. தாக்கமுள்ள கவிதைவரிகளை படைப்பது அத்தனை எளிதில்லை.. உணர்வுகளை அதனுடன் பிணைத்து ஆழ்ந்து அந்த வலி வேதனையை தானும் உணர்ந்தால் மட்டுமே அப்படி ஒரு சிறப்பான படைப்பை தரமுடியும்.. உங்க படைப்புகள் அப்படி தான் அப்துல்லாஹ் சார்....

    அன்பு நன்றிகள்....

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...