ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

மாற்றான் தோட்டத்தின் மங்காத்தா....

பாத்து ரொம்ப நாளாகி விட்ட படியால் மருமகன் என்னைத் தேடி வந்தார். சுகம் நலம் விசாரணைக்குப் பின் 
என்னப்பா ஆளையே காணோம்...
பாத்து நாளாச்சு வேலையெல்லாம் எப்புடி ...கள் எல்லாம் முடிந்த பின் அவனது உரையாடலிடைப்பட்ட பதில் ஒன்று 
பக்ரைன் போனோம் மாமா மங்காத்தா படம் பாத்தோம் ...  

சவுதியிலிருந்து நண்பர்கள் குழு ஒன்று பக்கத்து நாடான பக்ரைன் சென்று சினிமா பார்க்க விசா அட்டஸ்ட் செய்து டிடிஎஸ் அமைப்பிலும் அகண்ட திரையிலும் கண்டு கழித்து வருகிறார்கள்... சந்தோசம்... 

மனதில் பொறி தட்டியது இரண்டு மாதங்களாக ஒதுக்கி வைக்கப் பட்ட சினிமா ஆசையை தூசு தட்டி மங்காத்தா பாக்க நானும் தயாரானேன்.

படம் ஆரம்பித்தது வழக்கம் போல இல்லாத அஜித் தலைக் காட்ட ஆரம்பமே அமர்க்களம் ...கதை அந்த கிரிக்கெட் புக்கிகளிடம் புழங்கும் பணத்தை .....ஆவ்.... அனிச்சையாக வாய் திறந்து மூட ...

இருங்க ஒரு நிமிடம்
படத்தில் ஒரு சுக அனுபவம் 
விஜய் பாய்ந்து பந்தாடினார்.... அலி பாய் ட்ட ஒன் பாச்சா பலிக்காது...
நல்லா விறுவிறுன்னு போச்சு

சூர்யா வந்து ரணகளம் பண்ணினார் வைரத்திற்காக அவர் படும் பாட்டைப் பார்த்தால் பட்ட மரமும் பாலுறிவிடும்...

கடுமையான மோனத்தில் அசைவுகளின்றி தவம புரிவது போல நான் படத்தை கண்ணுறுவதைக் கண்ட என் ரூம் மேட் பதறிப் போய்

சார் ...

உஷாராயிட்டேன். ( தூங்குனத காட்டிக்கக் கூடாது௦...)

திரையில் அர்ஜுன் அஜித் ஒருவரை ஒருவர் அன்போடு மகிழ்ச்சியுடன் கொள்ளையடித்த பணம் பங்கு போடப்பட்டது காண்பிக்கப் படுவதோடு படம் முடிய...

நல்ல படம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் படம். சமீப காலத்தில் என்னை மறந்து இவ்வளவு ஆழமான நித்திரையை நான் அடைந்ததில்லை அந்த சுகத்தை எனக்கு தந்த ஒரு அற்புதப் படைப்பு....

விகடன் பாணியில் மங்காத்தா ஒரு ஆரோக்கியம் தரும் படைப்பு...

இப்படிக் கழிந்த மங்காத்தா அனுபவம்...

பகலில் நல்ல உறங்கியதால் ராத்திரிக்கு தூக்கம் வராது அதனால பேசாம ஏதாவது ஒரு படம் பாக்க நினைத்து மலையாளப் படம் கத்தாமா (gaddama) பாக்க முடிவு செய்து ராத்திரி பத்து மணிக்கு உக்கார்ந்தேன்...

படம் கமல் இயக்கியது 
காவியா மாதவன் அபிநயிச்சது (நடிச்சது) நெசம்மா நூத்துக்கு நூறு ... 

சீனிவாசன், சுராஜ், அப்புறம் கடுமையான வெப்பம் நிறைந்த பாலை மணல, அரபுகளின் அந்நிய நாட்டவருடனான உறவுறும் தொடர் நீட்டல் வாழ்க்கை படிமம் இவை எல்லாம் உண்டு ....கல்பின் கைசேதம்..

கொஞ்சம் சாதாரணமாக ஆரம்பிகிறது இந்தத் திரைப்படம் 

வீட்டு வேலைக்காக வாசல் தாண்டி வேற்று மண்ணுக்குப் புறப்படும் ஒரு பக்கா மலையாளிப் பெண் அசுவதி அவரோடு நாமும் கதாம்மா வேலையில் சேர்ந்து விடுகிறோம். அரபி ஒருவர் வீட்டில் அவர் காணும் யதார்த்தங்கள்  நிகழ்வுகளாக அவர் படும் துயரங்கள் கடைசியில் காலெடுத்து வெளியில் வைத்து தப்பிப்பதற்காய் அவர் சந்திக்கும் கஷ்டமும் அதைத் தொடர்ந்து அவரோடு அலையும் காமிராவும் அது புட்டு வைக்கும் துயரங்களும்......

நம் சங்கை அறுத்து விடுகிறது... 

கண்களில் ஈரம காய முடியாதபடி உலகத்தின் நடப்புகள்,
இங்கு பந்தி பரிமாறப்பட்ட ரத்தமும் சதையுமான மனித உறவுகளின் மரித்துப் போன மனிதாபி மானங்கள் ...

படம் துவங்கும் போது அமரர் அறையில் (மார்ச்சுவரியில்) இழுப்பறையில் வெளிக்காட்டப்பட்ட சிரித்த முகத்துடனான அன்னோன் இந்தியன் எனும்  அடையாளம் காட்டப் படாத ஒரு பிரேதம் படம் முடியும் போது நமக்கு பரிச்சயமான நம்மோடு வாழ்ந்த வேறு ஒரு மனிதாபிமானம் மிக்க சகோதரனின் சிரித்த முகத்துடனான அதே அன்னோன் இந்தியன் எனும் வாசகம் பொருந்திய பிரேதமாக ....

என் கடன் பணி செய்து கிடப்பதே இது சீனிவாசன் செய்யும் கடன் பட்டும் பிறர்க்குதவும் பணி...

அட போங்கப்பா இந்தப் படத்தால என் தூக்கம் போச்சு நாலு நாளா டிஸ்டர்ப் ஆயிட்டேன். 
என் அனுபவத்தில் சொல்லனும்னா 

கத்தாம்மா - ஒரு ஆரோக்கியக் கேடு தரும் படம்...

இந்தப் படம் பாக்க ஒரு அஞ்சு பேருக்கு விசாக் காசும் டிக்கட் காசும் நம்ம கையிலிருந்து நாம தாராளமாக குடுக்கலாம்...

5 கருத்துகள்:

  1. ஸ்ரீனிவாசனின் "அரபிக்கதை" படத்திற்கு பிறகு அதே சாயலில் வந்திருக்கும் மற்றொரு படம். படம் முடிந்த பிறகும் விதுரமீ யாத்ரா... பாடல் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. உண்மை தான் அலி...
    அரபிக் கதா அது வேறு ஒரு தளத்தில் பயணிக்கும் அரசியல் சார்ந்த ஒரு கதை ஆயினும் இந்தத் திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் முகத்திரையை கிழித்து உள்ளே எவ்வளவு நாற்றமடிக்கும் வாழ்க்கையை அந்த சேச்சிகளும் சகோதரிகளும் அனுபவித்து வருகிறார்கள் என்று வெளிப்படையாய் சொன்ன ஒரு கதை...
    நல்ல வீரியமான் ஒரு கதை சொல்லல அதே வீரியம் கெடாமல் படம் ஆக்கல் ...
    படைப்பாளிகளின் எண்ணம எண்பது விழுக்காடுகளுக்கு மேல் நிறைவேரறியுள்ளதாக அறிகிறேன்...

    பதிலளிநீக்கு
  3. இரண்டு படங்களின் விமர்சனம் மிக அருமை அப்துல்லாஹ் சார் :)

    மங்காத்தா படம் பார்க்கப்போய் நல்லா தூங்குனீங்களா??

    அது சரி.....

    கத்தாம்மா படம்???
    அழுகை வரவைத்த அருமையான படம்.... அதை பற்றி ரொம்ப அருமையா விமர்சித்திருக்கீங்க....

    அருமையான ஆரோக்கியமான விமர்சனம் அப்துல்லாஹ் சார்....

    அன்பு நன்றிகள் பகிர்வுக்கு..

    பதிலளிநீக்கு
  4. சகோதரி உங்களின் கருத்துப் பகிர்வுக்கு என்றும என் வலைப்பூ காத்துக்கொண்டு நின்றது போல ஆகி விட்டது. இந்தத் திரைப்படம் காணச் சொல்லி என்னை வழிப்படுத்தியதும் தாங்கள் தான். அந்த வகையில் என்னுடைய முழுமையான நன்றியும் தங்களுக்கு, ஒரு நல்ல சமூகப் பதிவை உள்ளடக்கிய சினிமாவைக் கண்டேன்...
    திரைப் படம் பார்க்க கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருக்கு... யாராவது சிலாகிச்சு சொன்னால் தான் உட்கார்ந்து பாக்கத் தோணுது... இல்லையின்னா மோசமான படத்த பாத்துட்டு நம்மை நமக்கே பிடிக்க மாட்டேன்கிறது...
    நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  5. ஏனோ தானோ என்று கருத்திட முடிவதில்லைப்பா என்னால்... அதனால் தான் அதிகம் கருத்திடமுடிவதில்லை... இனி முடிந்தவரை ஒழுங்கா வந்து கருத்திடுகிறேன். எனக்கு நிஜம்மா ஆச்சர்யம், அட கத்தம்மா படம் இவர் பார்த்தாரா? இவருக்கு எப்படி இந்த படம் பற்றி தெரியும். உங்களிடம் படம் பார்க்க சொல்லி பதிவிட்டதை மறந்துவிட்டேன் :)

    இனி காத்திருக்கும் நிலை வராமல் கருத்திட முயல்கிறேன் அப்துல்லாஹ் சார்...

    அன்பு நன்றிகள்... எப்டி எப்டி?? மோசமான படம் பார்க்க போனால் நம்மை நமக்கே பிடிக்காமல் போகிறதா :) இது என்ன புதுக்கதை :)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...