வியாழன், செப்டம்பர் 08, 2011

உறவுகள் என்னோடு




எங்களின் விட்டில்
ஒரு பூனையின் குடும்பம்
ஒரு குட்டியும் போட்டுக் கொண்டு 
இங்கும் அங்குமாக 
உலவுவதும் 
மவ்வொலிப்பதும்
சில சமயம் 
மருகுவதும் அறிவேன் 


அதன் வண்ணம் 
குட்டியிடம் காட்டும் பாசம் 
எல்லாந் தெரியும்


நான் அதற்கு 
இதுவரை உணவளித்ததில்லை 
மடியமர்த்தியதில்லை
விரும்பியதுமில்லை
வெறுப்பதுவுமில்லை...


அது 
என்னை வில(க்)கிய 
என் உறவுகளைப்போல்........


அவை வேறு நான் வேறு


ஆயினும் அவை என்னோடு தான்.








எங்களின் விட்டில்
ஒரு பூனையின் குடும்பம்
ஒரு குட்டியும் போட்டுக் கொண்டு 
இங்கும் அங்குமாக 
உலவுவதும் 
மவ்வொலிப்பதும்
சில சமயம் 
மருகுவதும் அறிவேன் 


அதன் வண்ணம் 
குட்டியிடம் காட்டும் பாசம் 
எல்லாந் தெரியும்


நான் அதற்கு 
இதுவரை உணவளித்ததில்லை 
மடியமர்த்தியதில்லை
விரும்பியதுமில்லை
வெறுப்பதுவுமில்லை...


அது 
என்னை வில(க்)கிய 
என் உறவுகளைப்போல்........


அவை வேறு நான் வேறு


ஆயினும் அவை என்னோடு தான்.





3 கருத்துகள்:

  1. அன்பு என்ற சொல் இருக்கே அது மிகவும் சக்தி வாய்ந்தது அப்துல்லாஹ் சார்....

    எப்படின்னு கேளுங்களேன்....

    அன்பு எனும் இந்த மூன்றெழுத்து தான் மனிதனுடன் ஐந்தறிவு படைத்த மிருகங்களை இணைப்பது...

    நாய் நன்றியோடு ஏன் நம்முடனே இருக்கிறது?
    நம் மேல் ரொம்ப பாசமாக இருப்பதினால் தானே?
    பூனைக்குடும்பம் நம் வீட்டில் தனியாக தர்பார் நடத்திக்கொண்டு இருப்பதும் குட்டிகள் போட்டுக்கொண்டு அங்குமிங்கும் நடந்தாலும் அவை வேறு நீங்க வேறுன்னு சொல்றீங்களேன்னு படிச்சுக்கிட்டே வந்தப்ப

    இறுதி வரி நச் நு போட்டிருக்கீங்க...உண்மை தானே...

    மனிதன் அன்புடன் தன் குடும்பத்துடன் சந்தோஷத்தை பூனையின் குடும்பத்துடன் இணைத்திருந்தால் அதுவும் விலக்கியிருக்காது...

    உங்களைச்சுற்றியுள்ள உங்கள் உறவுகளின் உதாசீனத்தை அருமையான உவமையாக இந்த பூனையுடன் ஒப்பிட்டு வரிகள் படைத்தவிதம் அற்புதம் அப்துல்லாஹ் சார்....

    என்ன இது சின்னப்பிள்ளைத்தனமா அப்டின்னு தான் நினைச்சு படிச்சேன். கடைசி வரி படிக்கும்போது சட்டுனு நெஞ்சை அடைத்தது போல உணர்ந்தேன்..

    இப்ப இருக்கும் காலக்கட்டத்தில் உறவுகள் பணத்துக்காக மட்டுமே என்ற நிலையில் இருப்பதால் அன்பை கூட இப்படி பணம் கொடுத்து தான் பெறவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்துடன் வரைந்த இந்த கவிதை மிக சிறப்பு அப்துல்லாஹ் சார்...

    படிப்பினை தரும் அருமையான கருத்து கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துகள் அப்துல்லாஹ் சார்.

    பதிலளிநீக்கு
  2. அருமை கவிதை தோழர்..
    ரொம்ப பிடிச்சு இருக்கு..

    பதிலளிநீக்கு
  3. நெகிழ வைக்கும் கரு உங்கள் கவிதை அருமை தோழா வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...