ரௌத்திரம் பொங்க
நடுக்கத்தில்
நாசமாய் போனவனே என்றேன்
நாகாசாகி யையும் ஹிரோஷிமவை
நன்றாகப் புரிந்தவர் நீங்கள் என்றான்
கரியாப் போனவனனே
கரித்துக் கொட்டினேன் மறுபடியும்
விலை மதிப்பற்ற வைரமா நான்
விவரமாய்ச் சொன்னிர்கள் என்றான்
கேடு கெட்டவனே என்ற போது
வாழ்த்துக்கு நன்றி என்றான்
கேடு கெட்டால் நல்லதே விளையும்
கோபத்திலும் குணமாய் பேசுகிர்கள்...
மாணவனின் மதிநுட்பம்
மனதை மலரச்செய்ய
உண்மையை உணர்ந்தேன்
வார்த்தைகள் வாழ்க்கையாவதில்லை
வாழ்க்கையில் வழியில் காணும்
துரோகங்களுக்கும் சோகத்திற்கும்
சுகமாக வழிவிட்டு
சந்தோஷிக்கும் நொடிகள் அழகு
மனதில் கொண்டால் மனம் மகிழ்ந்தால்
உறவுகள் கள்ளம் இல்லை இனி
பிரிவுகளும் இல்லை - இங்கு எல்லாம்
தாமரை இலைத் தண்ணீர் போல்
என்னால் உன் மனதில் காயம் பட்டால்
என் குருதியே அதைக் குணப்படுத்துமெனில்
கொத்திக் கீறி கொண்டு போ மகிழ்ச்சியுடன்
கொஞ்சம் நானும் மகிழ்வேன் உனைப் பார்த்து
நீ வேண்டும் நண்பா உன்னால்
நிம்மதி என்றால் மட்டுமே
நீ வேண்டாம் உன்னால்
நிம்மதி கெடும் என்றால்
போதுமே ...
இறைவன் படைப்பில் எல்லாமே அழகு தான்...
பதிலளிநீக்குஎல்லோருமே அன்புடன் இருக்க தான் இறைவன் படைத்தது....
நாக்கு இருப்பது இனிமையான சொற்களை பேச தான்...
அப்படி இருக்கும்போது மனதை புண்படுத்தும் சொற்கள் பேசாமல் நல்லவையே அதுவும் அன்புடனே பேசும்போது...
நம் அன்பில் வசப்படாத உள்ளங்களும் உண்டோ?
அருமையான கவிதை வரிகளால் நல்லதொரு அறிவுரைக்கவிதை அப்துல்லாஹ் சார்...
அன்பு வாழ்த்துகள் அப்துல்லாஹ் சார்...