ஞாயிறு, அக்டோபர் 09, 2011

வரவு செலவு - அப்துல்லாஹ்



எனக்கும் காலங்களுக்கும்
இடையிலான கணக்குத் தீர்த்தலில்
கழிந்த இருபது ஆண்டுகளும்
கொஞ்சம் பரஸ்பரம் வேதனையும்


தலை துவட்டியும் 
காயாத ஈரம போல
திருப்தியடையாத 
இரைதேடல்கள்
கழுகைப் போல 
கடல் கடந்த பயண நீட்சி
பொருள் ஒன்றை 
மட்டுமே குறிவைத்து


செலவுகளும் வரவுகளும்
தத்தம் கணக்கை சரிசெய்யும் நேரம்


செலவுகளில் அதிகபட்சம் என்
திரும்பவராத வசந்த நாட்கள்
தின்னாமல் கெட்ட ஆரோக்கியம்
தடுத்தாலும் எனை ஆட்கொண்ட 
அடிமை நிலை வாழ்வு
விடிய விடிய சத்தமின்றி
விழி நனைத்த அந்த விரக நாழிகள்.


தோண்டித் தோண்டி 
என்னை நானே 
தூசு நிறைந்த 
பாலைச்சொரிமாணலில்
துளைத்துப் புதைத்த 
துரதிருஷ்டம்...


குருவிகள் காகம் கொக்கு
அருவிகள் ஆற்றுநன்நீர்
விரவிய வாசமண்ணை
துறவி யாய் மறந்து வாழ்ந்த 
பிறவியாய் இப்பிறப்பு 


போதும் .....


சிறகுகள் மடித்துக் கொஞ்சம் 
சிறுபொழுதுஒய்வு வேண்டும் 
பழுதான உடலைக் கொஞ்சம் 
பக்குவம் பார்க்க வேண்டும் 


சரிதானா என் கணக்கு 
சற்றே சொல்லிச் செல்வீர்
அரிதாய் நான் அயர்ந்துறங்கும்


அந்த ஓர் கடைசி நாளில்.... 


என் கணக்கில் வரவுகள் ஏதும் 
உண்டா....
உறவுகளிடமே கொடுங்கள் 
கடைசி செலவாய் நான் ....





எனக்கும் காலங்களுக்கும்
இடையிலான கணக்குத் தீர்த்தலில்
கழிந்த இருபது ஆண்டுகளும்
கொஞ்சம் பரஸ்பரம் வேதனையும்


தலை துவட்டியும் 
காயாத ஈரம போல
திருப்தியடையாத 
இரைதேடல்கள்
கழுகைப் போல 
கடல் கடந்த பயண நீட்சி
பொருள் ஒன்றை 
மட்டுமே குறிவைத்து


செலவுகளும் வரவுகளும்
தத்தம் கணக்கை சரிசெய்யும் நேரம்


செலவுகளில் அதிகபட்சம் என்
திரும்பவராத வசந்த நாட்கள்
தின்னாமல் கெட்ட ஆரோக்கியம்
தடுத்தாலும் எனை ஆட்கொண்ட 
அடிமை நிலை வாழ்வு
விடிய விடிய சத்தமின்றி
விழி நனைத்த அந்த விரக நாழிகள்.


தோண்டித் தோண்டி 
என்னை நானே 
தூசு நிறைந்த 
பாலைச்சொரிமாணலில்
துளைத்துப் புதைத்த 
துரதிருஷ்டம்...


குருவிகள் காகம் கொக்கு
அருவிகள் ஆற்றுநன்நீர்
விரவிய வாசமண்ணை
துறவி யாய் மறந்து வாழ்ந்த 
பிறவியாய் இப்பிறப்பு 


போதும் .....


சிறகுகள் மடித்துக் கொஞ்சம் 
சிறுபொழுதுஒய்வு வேண்டும் 
பழுதான உடலைக் கொஞ்சம் 
பக்குவம் பார்க்க வேண்டும் 


சரிதானா என் கணக்கு 
சற்றே சொல்லிச் செல்வீர்
அரிதாய் நான் அயர்ந்துறங்கும்


அந்த ஓர் கடைசி நாளில்.... 


என் கணக்கில் வரவுகள் ஏதும் 
உண்டா....
உறவுகளிடமே கொடுங்கள் 
கடைசி செலவாய் நான் ....



4 கருத்துகள்:

  1. சரிதானா என் கணக்கு
    சற்றே சொல்லிச் செல்வீர்
    அரிதாய் நான் அயர்ந்துறங்கும்


    //அந்த ஓர் கடைசி நாளில்....


    என் கணக்கில் வரவுகள் ஏதும்
    உண்டா....
    உறவுகளிடமே கொடுங்கள்
    கடைசி செலவாய் நான் ....//

    கவிஞரே சிறப்பான வரிகள்

    பதிலளிநீக்கு
  2. அன்பு செய்தாலி
    தங்களின் அழகிய பின்னுட்டம் மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது...
    என்றும் போல என் அன்பும் மகிழ்ச்சியும்....

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. அன்புச் சகோதரி கவிதாயினி
    ஆதிரா முல்லை அவர்களின் மதிப்பு மிக்க மறுமொழியும் ஒரு வழ்த்துக்கவியும்...
    கவிதை உலகத்தில் பெற்றது

    இல்லை அப்துல்லா. இன்னும் தாங்கள் நீடு வா..........ழ வெண்டும். உங்கள் கவிமழையில் அன்பு கனமழையில் நாங்கள் மூழ்கி இன்ப முத்தெடுக்க வேண்டும். அருமையான கவி

    அன்புச் சகோதரி கவிதாயினி ஆதிரா முல்லை அவர்களின் வாழ்த்துக் கவி...

    பனி தரும் நீரும் தோற்கும்
    நனி பசும் பாலும் தோற்கும்
    கனி தரும் சாறும் தோற்கும்
    இனி சுவை அமுதும் தோற்கும்
    மணி மணி யாக உந்தன்
    நுனி விரல் தீட்டும் கவியில்!

    பிணி யிலா நலமும் பீடும்
    இனி யன உந்தன் வாழ்வில்
    அணி அணி யாக சூழ
    இனி யும்நீ நீடு வாழ
    தனித் தமிழ் தாயை வேண்டும்
    பணி இவள் கடமை யன்றோ!

    இன்று போல என்றும் நலந்திகழ் வாழ்வு வாழ
    இறைவனை வேண்டுகிறேன்.
    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அப்துல்லாஹ்!

    என் இனிய மறுமொழி
    அன்பு உறவுகளே எல்லையில்லா இன்பம் எய்தி இன்புறுகிறதென் இதயம் ...எனது மரியாதைக்குரிய சகோதரி நான் பிரமிக்கும் கவிதாயினியின் ஒரு விலை மதிக்க முடியாத வாழ்த்துக் கவிதை பெற்றது என் வாழ்நாளின் நான் பெற்ற நற்பேறு... அவரின் ஒற்றை வார்த்தைக்கு கட்டுப் பட்டு ஓடிச்சென்று அவர் சொன்ன இடத்தில் தடம் பதித்து இப்பொழுது நடம புரிகிறேன் மகிழ்வுடன்...என் மீதும் என் தமிழ்பற்று மீதும் அக்கறையுடன் எக்கரைக்கு பயணிக்கச் சொன்னாலும் அவர்களின் அன்பான விரல் சுட்டுக்கு நான் என் தமிழை காணிக்கையாக்குகிறேன். (ஈகரையில் நான் இப்போது)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...