அம்மாவின் விரல்கள் போல
அந்த விரல்கள்
கொஞ்சம் கருத்தும்
காய்ந்தும் வரிவரிகளாக
வெடித்தும்
காய்ச்சலின் போது
களிம்பு தடவ அம்மாவின் அந்த
கருத்த காய்த்த வரியுள்ள...
விரல்கள்
எத்தனை முறை
என் நெற்றியை நெஞ்சை
முதுகின் தண்டை
களிம்பு தொட்டுத்
தடவுகையில்
விரலில் அந்தச் சூடும்
அவளின் மன ஏக்கமும்
என் நோய்மை பற்றிய கவலையும்
என் மீதான அளவு கடந்த
வாஞ்சையுமாய்
விரல் காய்ப்பின் வழி ஊடுறுவும்...
உடலைத் தொட்டுத் தடவும்
உடலைத் தொட்டுத் தடவும்
அது படரும் பாதையில்
சில சமயம் அவளின்
விழிநீரின் முத்துக்களும்
சேர்த்தே நீவப்படும்...
மெல்லிசாய் முணுமுணுத்துத்
துவங்கும் அவளது
தாலாட்டுப் பாடல்
அதன் இறுதில் விசித்து
கசிந்து கண்ணீர் சிந்தி
வழக்கம் போலவே முடியும்...
அம்மாவின் மனசில்
அடிக்கடி சோகம் காண
அப்பாவும் காரணம்...
அவரின் வீரம்
வெறியோடு வெளிப்பட
வீட்டில்
நெளிந்திருக்கும் சொம்பு
தட்டைகள் கிண்ணங்கள்
தோட்டத்தில் ...
பாத்தியில் பொருத்தப்பட்ட
மண்பானையின் உடைந்த
ஓட்டுத் துண்டுகள்...
அவளின்
அழகான நெற்றியில்
காணும் கூட்டல் தழும்பு
இன்னமும் இருள்
தழுவிய அவளின்
புனித அதரங்களில்
எத்தனை எத்தனையோ
எத்தனை எத்தனையோ
அம்மா எனும் அப்பிராணி
அவருக்கு ரௌத்திரம் காட்ட
அவசியம்;;; அது போல
அம்மாவுக்கும் அவருக்கு
அடிமையாய் வாழ
என் அம்மா பாடிய தாலாட்டை
நான் பாடச் சொல்லி
அதை அடிக்கடிக் கேட்க
என் மகனுக்கும்ஆசை
என் மகனுக்கும்ஆசை
மெல்லிசாய் முணுமுணுத்துத்
துவங்கும் என் தாய் வழித்
தாலாட்டுப் பாடல்
அதன் இறுதில் விசித்து
கசிந்து கண்ணீர் சிந்தி
வழக்கம் போலவே முடிகிறது
அவளது நினைவுகளில்...
வாழ்கையின் பகுதிகளை கவிதையாய் சொல்லுவது எனபது கடினமான ஒன்று .உங்கள் ஒவ்வொரு படைப்பும் ,பாசத்தின் உணர்வுகளை சொல்லும் பாங்கு அற்புதம் .
பதிலளிநீக்குவிழிகளை ஈரமாக்கும் ,மனதில் கடந்தவைகளை ,கணக்கு போட்டு பார்த்து கடன்வாங்க அழைக்கும் .இத கவிதையும் அப்படியே .
உண்மையை சொல்லும்,மனதை ஈரமாகும் .
அம்மாவின் மனசில்
அடிக்கடி சோகம் காண
அப்பாவும் காரணம்...
அவரின் வீரம்
வெறியோடு வெளிப்பட
வீட்டில்
நெளிந்திருக்கும் சொம்பு
தட்டைகள் கிண்ணங்கள்
தோட்டத்தில் ...
பாத்தியில் பொருத்தப்பட்ட
மண்பானையின் உடைந்த
ஓட்டுத் துண்டுகள்...
இதைவிட ஒரு கவிஞ்சன் எப்படி சொல்லமுடியும் .
பாராட்டுகிறேன் .எனக்குள் இருக்கும் நிகழ்வுகள் , வெளிவராத உணர்வுகள்
உங்கள் வரிகளில் இருப்பது உண்மையே !
மிக அருமையான சொல்லாடல்கள்.
பதிலளிநீக்குஉணர்வுகள் கோக்கப்பட்டு மாலையாக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள்..
அன்பு சகோதரர் கலை நிலா
பதிலளிநீக்குஉங்களின் மறுமொழிக்கு மனம் மகிழ்கிறேன்... எனது அயராத பணிகளுக்கிடையில் என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டும் உங்களின் ஊக்குவிக்கும் நட்பு எனக்கு இப்பிறவியில் வாய்த்ததை...இறைவனின் அளப்பரிய நன்மையாகவே காண்கிறேன்... உங்களின் அரவணைப்புக்கு நன்றி...
சகோதரி மலிக்கா
பதிலளிநீக்குஉங்களின் வருகைக்கும் நுகர்ந்து பகர்ந்த மறுமொழிக்கும் என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்...