மலையடிவாரங்கள்
மனசுக்கு சுகம்தானே
மாலை நேரங்களும்
மஞ்சள் கதிரொளியும்
தண்ணீர் கரைகளும்
தனித்தமரும் பொழுதுகளும்
விட்டில் பூச்சிகளாய்
கட்டில் நினைவுகளுடன்
அங்கே
நானும் அவனும்
காற்றும் கதிரும்
என் இளமையும் அவனும்
கொஞ்சம் காதலும் காமமும்
தவிர ஏதுமில்லாமல்
சுடர்விழியால் எனைத் திறக்க
சுட்ட அவன் விழியின்
துளைத்திடும் கதிர்கள் என்னுள்
புரவியாய் ஒரு பேய்ப் பாய்ச்சல்
குருவியாய் ஒடுங்கினேன் நான்
கருவியாய் எனைக் கொண்டான்
காமத்தின் அருவியானேன் நான்...
தண்ணீரில் நானிருந்தும்
தாகமாய்த் தகித்திட்டேன்
உலர்ந்த உள்நாக்கில்
அவன் ருசியை சுவைத்திட்டேன்
ஒளிப் பூக்கள் உடனிருந்தும்
இருள் தழுவிட சுகித்திட்டேன்
விட்டிலாய் விளக்கொளியில்
விரும்பி அவனுள் புதைந்திட்டேன்
மட்டிலா மகிழ்வு கொண்டேன்
கட்டிலாய் நீர்மேல் இன்பத்
தொட்டிலை நான் இனி
மறந்திடிலேன்...
மலையடிவாரங்கள்
மன்னவன் இருக்க சுகம்தானே
மாலை நேரங்களில்
மல்லிகையின் குளிர்
மணம் வீசும் தானே !!!
மஞ்சள் கதிரொளி
மட்டற்ற மகிழ்ச்சி அது
கட்டற்ற காளைக்கு....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக