ரத்தமும் சதையும் கொண்ட மானுடப் பிறவி இது
முத்தமும் முலைப்பாலும் சுவைத்திடும் நேரம் இது
சித்தமே கலங்கினாலும் உதறுவாரோ நடு வீதியில்.
குத்தம் தான் என்ன இந்த சிசு செய்தது...
பத்தரை மாத்துப் பொன்னே பசுங்கிளியே நீ
இத்தரை வந்துற்றுக் கண்டதோர் காட்சி இது
நச் சுதரம் பெற்று நீ கருவானாய் உருவானாய்
இச்சையை அடக்காத ஈனத்தாய்க்கு..
இல்லையே ஓர் மழலை என்றிங்கு எண்ணிப் பலர்
சொல்லொணாத் துயருற்று சோர்ந்திடுவார் சோகத்தில்
செல்லப் பெண்மகளே சேர்த்தணைக்க யாருமின்றி
கொல்லத் துணிந்தாரடி கொடுமையிதுவே..
அன்னையின்குரல் கேட்டு ஆனந்தம் அடையவில்லை
அத்தையின் மடி மீது ஆராரோ கேட்கவில்லை
அப்பாவின் அடிநெஞ்சில் ஈரமும் நனைக்கவில்லை
தப்பான காட்சியாக தரை மீது மீன் இன்று...
தொப்புள் கொடியறுத்து தோட்டத்தில் புதைக்காமல்
சப்பும் வித்தையை உன் செப்பு வாய்க்கும் சொல்லாமல்
உச்சி தொட்டுப் பாதம் வரை சலவாத்துடன் தடவாமல்
எச்சில் இலை போல என்ன கொடுமையிது...
அறுத்தது எறிந்த தொப்புள் கொடியை
பதிலளிநீக்குமட்டுமா ,தாய்மையை சேர்த்தும்,தானே !
மனதை ஈரப்படுத்தியது உங்கள் வரிகள்.
சில நேர இன்பத்துக்கு ,இளைப்பாறி
ஈன்றதை ,வெளியே
விசிய நிலையை சொல்லும் உங்கள்
கவிதை ,வாழ்க்கையின் உண்மை .