ரகசியங்கள் திணித்து வைக்கப்படும்
ராத்திரிக்கு நெருங்கிய மாலை வானம்
ராந்தர் விளக்கொளி இறைத்த மணற்ப்பரப்பில்
விரல் பிணைப்பில் வினாஎழுப்பும் நானும்
விடை பகரும் விந்தையான தந்தையும்
எனக்காக தன்னை சுருக்கிய அவர் மெதுவாக
என்னுடன் ஒரு குழந்தைபோல் நடந்தார்
அவரால் வேகமாக நடக்க முடியும்
முடிந்தும்......
எனக்காக மெல்ல மெல்ல தடம் பதிய
தன்னையும் என்னுடன் இணைத்தவாறு...
அவர் காலடிகளை வேகமாக்க எண்ணியபோது
என்னை சுமந்து இடுக்கியபடி
நடக்க நான்
அவரின் சுமையினில் ஒன்றாக ...
நண்டுகள் தோண்டிய வளைகளும்
சில சிப்பிகளும் காண்பது எனக்கு மகிழ்ச்சி
வளைகளும் சிப்பிகளும்
எப்பொழுதும் காணக் கிடைக்கின்றன
நாற்பதாண்டுகளாய் என் பார்வையில்
அவை மாற்றமில்லை...
இன்று...
நான் மட்டும் வேகமாக நடந்து
கடந்து விரைந்து சேர்ந்த போது
அவர் என்னுடன் வரவில்லை..
என் நடை வேகமான போது
நான் தளர்ந்து நடக்கும் தந்தையின்
அருகில் அவரின் நடையை ஒத்து
என் நடையை சுருக்கவில்லை
அவருக்கும் தெரியும்
நான் அவரின் விரலைப்
பிடிக்கவேயில்லை ....
நாற்பதாண்டுகளில் நான்
மனதளவில் சுருங்கி
மாறிவிட்டேன்...
நிஜ வரிகள் அருமை பாராட்டுக்கள்
பதிலளிநீக்குதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
நன்றி யுஜின் தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம் மகிழ்கிறது...
பதிலளிநீக்கு