ஞாயிறு, அக்டோபர் 23, 2011

நான் மகான்- அப்துல்லாஹ்





எண்ணங்கள் இரைதேட
கிளம்பிய சிறகடித்தலில் 
இறுதியில் சிக்கிய 
ஒரு எச்சில்கவளம்
நான் மகான்..


இது எப்படி இருக்கு...


இறைவன் பெயரில் ஒரு 
சீட்டிங் கம்பெனி 
கயிறுகளில் முடிச்சிட்டு 
கருப்பு மைதடவி 
தாயத்துக் குப்பிகளில் 
தேடிவருபவரின் சிந்தனையை
மும்முறை துப்பி மடக்கி 
சிந்தித்து விடாமல் முடக்கி 
சிறிய தாயத்தின் வாயைப் 
பத்தவைச்சு அவன பதற வைக்கும் 
தனி மரியாதையுள்ள பதவி...


செய்வினைகளும் 
செய்யாமல் செலவிடப்பட்ட 
பாவங்களும் இங்கே
நடுநிசியில் கபரஸ்தானில் 
நின்று எரியும் நெருப்பில் 
மண்டை ஓட்டருகே 
மனத்துணிவுடேன் 
மண்டியிட்டமர்ந்து 
மடியச் செய்வது என் பணி ...
காசு கொஞ்சம் கூட ஆகும் 
பரவாயில்லையா? 


விவசாயம் தழைக்கணுமா
வேலி தாண்டி மேயணுமா
விசா உடன கிடைக்கணுமா
வேண்டிய பொண்ண அடையணுமா
வீட்டின் முனியை விரட்டணுமா
கடன் தொல்லை தீரணுமா
வாங்க எங்கிட்ட....


கல்யாணம் சிறப்பா நடக்கவும் 
கருக மணி பெலக்கவும் 
காசு பணம் பெருகவும் 


ஆண்டவனை நான் கண்டு 
அவனிடம் சேதி சொல்லி
அக்கறைக்கு கூட்டிப் போறேன்
அப்படி இப்படின்னு பொய் சொல்லி 
ஆனையின் வயிறு போல
அத்தனை சொத்தும் தேடி 
இந்தப் பொழப்ப நான் ஏத்தா...


என்ன இது ஹராம் பொழப்பு!!!
எம்மவன் எங்கட்டே சொல்றான்...


அட போடா சொத்தும் சோகமும்
வயலும் வரப்பும் நிலமும் நீச்சும் 
பொன்னும் பொருளும் 
நான் பொய் சொல்லி பறிச்சது 
பொன்னு மவனே ஒனக்குத்தாண்டா...


தவ்ஹீதாம் தாலியறுப்பாம்
ஒரு பத்து ரூபா காசு சம்பாதிக்க 
தெம்பில்லாதவன் இவன்!!!
ஏங்க 
இதெல்லாம் போன மாசம்...
இப்ப அவன் ...


அவன் தான் குழந்தை வரம் 
வாங்கிக் குடுக்க ஆண்டவனைக்
கேட்டு அதிர்ஷ்டப் பலன் தரும் 
அற்புதம் நிகழ்த்தும் ஸ்பெசலிஸ்ட்...





எண்ணங்கள் இரைதேட
கிளம்பிய சிறகடித்தலில் 
இறுதியில் சிக்கிய 
ஒரு எச்சில்கவளம்
நான் மகான்..


இது எப்படி இருக்கு...


இறைவன் பெயரில் ஒரு 
சீட்டிங் கம்பெனி 
கயிறுகளில் முடிச்சிட்டு 
கருப்பு மைதடவி 
தாயத்துக் குப்பிகளில் 
தேடிவருபவரின் சிந்தனையை
மும்முறை துப்பி மடக்கி 
சிந்தித்து விடாமல் முடக்கி 
சிறிய தாயத்தின் வாயைப் 
பத்தவைச்சு அவன பதற வைக்கும் 
தனி மரியாதையுள்ள பதவி...


செய்வினைகளும் 
செய்யாமல் செலவிடப்பட்ட 
பாவங்களும் இங்கே
நடுநிசியில் கபரஸ்தானில் 
நின்று எரியும் நெருப்பில் 
மண்டை ஓட்டருகே 
மனத்துணிவுடேன் 
மண்டியிட்டமர்ந்து 
மடியச் செய்வது என் பணி ...
காசு கொஞ்சம் கூட ஆகும் 
பரவாயில்லையா? 


விவசாயம் தழைக்கணுமா
வேலி தாண்டி மேயணுமா
விசா உடன கிடைக்கணுமா
வேண்டிய பொண்ண அடையணுமா
வீட்டின் முனியை விரட்டணுமா
கடன் தொல்லை தீரணுமா
வாங்க எங்கிட்ட....


கல்யாணம் சிறப்பா நடக்கவும் 
கருக மணி பெலக்கவும் 
காசு பணம் பெருகவும் 


ஆண்டவனை நான் கண்டு 
அவனிடம் சேதி சொல்லி
அக்கறைக்கு கூட்டிப் போறேன்
அப்படி இப்படின்னு பொய் சொல்லி 
ஆனையின் வயிறு போல
அத்தனை சொத்தும் தேடி 
இந்தப் பொழப்ப நான் ஏத்தா...


என்ன இது ஹராம் பொழப்பு!!!
எம்மவன் எங்கட்டே சொல்றான்...


அட போடா சொத்தும் சோகமும்
வயலும் வரப்பும் நிலமும் நீச்சும் 
பொன்னும் பொருளும் 
நான் பொய் சொல்லி பறிச்சது 
பொன்னு மவனே ஒனக்குத்தாண்டா...


தவ்ஹீதாம் தாலியறுப்பாம்
ஒரு பத்து ரூபா காசு சம்பாதிக்க 
தெம்பில்லாதவன் இவன்!!!
ஏங்க 
இதெல்லாம் போன மாசம்...
இப்ப அவன் ...


அவன் தான் குழந்தை வரம் 
வாங்கிக் குடுக்க ஆண்டவனைக்
கேட்டு அதிர்ஷ்டப் பலன் தரும் 
அற்புதம் நிகழ்த்தும் ஸ்பெசலிஸ்ட்...

1 கருத்து:

  1. உள்ளதை சொல்லும் தோழரின் வரிகள்.
    தோலுரித்து காட்டும்
    உண்மைகள்!
    வாழ்க்கை வாழ்வதற்கு
    செய்யும் தொழில்களில் ஒன்றாய் போனது இங்கு .எல்லாம் மறந்த நிலையில் .

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...