பிறர்க்காக வடியாத கண்ணீரும்
தனக்காக இல்லாத தயாளமும்
அன்பிலா உறவும்
அடிக்காத துயரும்
தூய்மையிலா நீரும்
வாய்மையிலா சொல்லும்
நோய்மையிலா உடலும்
வியர்வையிலா உழைப்பும்
சீர்மையிலா ஊதியமும்
பார்வையற்ற பரம்பொருளும்
பக்திய்ற்ற படைப்பினமும்
பறக்காத பறவையினமும்
சுரக்காத நீர்ச்சுனையும்
இறைக்காத ஊற்றும்
இரங்காத மனிதமும்
மறக்காத துயரும்
துறக்காத ஆசையும்
பிறக்காத பிண்டமும்
கறக்காத பால்மடியும்
சிறக்காத பண்புகளும்
இறக்காத உயிர்களும் - எனக்காக
திறக்காத உன் இதயமும்...
முரண்பட்டவை
முற்றுப்புள்ளிகள்.....
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஒவ்வொரு வரிகளும் பிரமாதம்
பதிலளிநீக்குபிறர்க்காக வடியாத கண்ணீர்
அன்பில்லாத உறவும்
நோய்மையிலா உடலும்
நிச்சியமாக ஒரு நாளேனும்
நீ நோயுற்றிரி என்று சொல்லும்
வரிகளும் அனைத்தும் பிரமாதம் சார்
சல்யூட் சார் பாராட்டுக்கள்
நன்றி