சனி, அக்டோபர் 01, 2011

பொருந்திய பொழுதுகள்...அப்துல்லாஹ்




அதிகாலையும் 
அந்தி மாலையும்
மதிய வேளையும் 
மங்கின பகலும் 
மழை வெறிவும் 
இவற்றுடன் 
சில மணக்கும் பொழுதுகளும் 
மயக்கும் இரவுகளும் 
வெறுக்கும் கணங்களுடன் ....


மனதுக்கும் பொழுதுக்கும் 
இணைப்பு உண்டா 


பாசி படர்ந்த கிணற்றின் படியில் 
பாதத்தை பொத்தி அழுத்தி 
லாவகமாக மேல தாவ 
எனக்கு உதவுவது 
என் பாதமா அல்லது 
பத்திரமான உந்துதலா...


தேடித் தேடி இந்த இணைப்புகள் 
என்னோடு இணைந்திட இங்கே 
வழிகாட்டும் இடம் எதுவோ ...


இல்லாவிட்டால் 
நான் அழுத நேரத்தில் என்முகம் 
பார்த்து தன் முகத்தில் எனது அத்தனை 
வேதனையையும் உள்வாங்கிய 
என் சின்ன மகன் 
சிலிர்த்து அழுதானே..
எங்கே இருந்தான் அவன் 
பதினான்கு ஆண்டுக்கு முன்....


மழை வெறித்த அந்த 
மாலையும் பிற்பகலும் 
சேர்ந்த மங்கிய வெளிச்சத்தில் 


இறந்து கிடந்த என் தாயின் சடலத்தை
தோளில்சுமந்து கொண்டு நான் 
வீட்டிலிருந்து வெளிவரும்போது


என்மனசும் அந்தப் பொழுதும் 
ஒரே நிறம் ஒரே வாசம் 
மழை வெறித்த 
மாலையும் பிற்பகலும் 
சேர்ந்த மங்கிய நேரம் வந்தால் 
உம்மாவை நினைத்து 
ஒடுங்கி உருகி அழத் தோணுதே ஏன்


ஆழம நிறைந்த கிணற்றில் 
பாசி படர்ந்த கல் படியில் 
தடுமாறி நிற்கும்
உணர்வுகளும் 
தடுமாற்றங்களும் 
லாவகமாக தாவி மேல ஏற 
ஒரு கை தூக்கி விட 


கொஞ்சம் உதவி வேணும்...




அதிகாலையும் 
அந்தி மாலையும்
மதிய வேளையும் 
மங்கின பகலும் 
மழை வெறிவும் 
இவற்றுடன் 
சில மணக்கும் பொழுதுகளும் 
மயக்கும் இரவுகளும் 
வெறுக்கும் கணங்களுடன் ....


மனதுக்கும் பொழுதுக்கும் 
இணைப்பு உண்டா 


பாசி படர்ந்த கிணற்றின் படியில் 
பாதத்தை பொத்தி அழுத்தி 
லாவகமாக மேல தாவ 
எனக்கு உதவுவது 
என் பாதமா அல்லது 
பத்திரமான உந்துதலா...


தேடித் தேடி இந்த இணைப்புகள் 
என்னோடு இணைந்திட இங்கே 
வழிகாட்டும் இடம் எதுவோ ...


இல்லாவிட்டால் 
நான் அழுத நேரத்தில் என்முகம் 
பார்த்து தன் முகத்தில் எனது அத்தனை 
வேதனையையும் உள்வாங்கிய 
என் சின்ன மகன் 
சிலிர்த்து அழுதானே..
எங்கே இருந்தான் அவன் 
பதினான்கு ஆண்டுக்கு முன்....


மழை வெறித்த அந்த 
மாலையும் பிற்பகலும் 
சேர்ந்த மங்கிய வெளிச்சத்தில் 


இறந்து கிடந்த என் தாயின் சடலத்தை
தோளில்சுமந்து கொண்டு நான் 
வீட்டிலிருந்து வெளிவரும்போது


என்மனசும் அந்தப் பொழுதும் 
ஒரே நிறம் ஒரே வாசம் 
மழை வெறித்த 
மாலையும் பிற்பகலும் 
சேர்ந்த மங்கிய நேரம் வந்தால் 
உம்மாவை நினைத்து 
ஒடுங்கி உருகி அழத் தோணுதே ஏன்


ஆழம நிறைந்த கிணற்றில் 
பாசி படர்ந்த கல் படியில் 
தடுமாறி நிற்கும்
உணர்வுகளும் 
தடுமாற்றங்களும் 
லாவகமாக தாவி மேல ஏற 
ஒரு கை தூக்கி விட 


கொஞ்சம் உதவி வேணும்...

2 கருத்துகள்:

  1. வரிகளில் மனதை வதைக்கிறீர்கள்
    என்ன சொல்ல கவியே
    வார்த்தைகள் அற்று நிற்கிறேன்
    மௌனமாய்

    பதிலளிநீக்கு
  2. தங்களின் மதிப்புள்ள மறுமொழிக்கு நன்றி செய்தாலி .....

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...