என் விழியைத்துளைத்து
விரகத்தில் நுழைத்து
வீதியில் என்மடியில் உன் சில
நினைவுகளை மட்டுமே
விட்டுவிட்டு விரைந்தவனே
உனக்குத்தெரியுமா?
எங்கோ ஒரு நதியில்
சருகைப்போல் உதிர்ந்து
நதியின் ஓட்டத்தோடு
பயணிக்கும் உன்னை
சுமக்கும் அந்த நீர்மடியும்
என்னுடையது தான் என்பது
அப்துல்லாஹ்
படமும் ,வரிகளும் போட்டி போடுகிறது
பதிலளிநீக்குநீர்மடிக்கு...
அழகுக்கு அழகு சேர்த்தது போல வரிகள்
மனதை விட்டு அகல மறுக்குது