எட்டயபுரம் தந்த ஏழைக் கவிஞன் இவன்
சாட்டையை உருமாற்றி எழுத்தாணியாக்கியதால்
கோட்டை கொத்தளங்கள் கொதித்தடங்கியது
சாட்டையை உருமாற்றி எழுத்தாணியாக்கியதால்
கோட்டை கொத்தளங்கள் கொதித்தடங்கியது
ராட்டையை சுழற்றிய காந்திமகான் கை ஓங்கியது
சூட்டுக்கோல் போல இவன்வரிகள் சுட்டதனால்
சுதந்திரக் கனல் சூழ்ந்து சூறையாடி வென்றது...
சுதந்திரக் கனல் சூழ்ந்து சூறையாடி வென்றது...
மண்ணில் மானுடம் மாண்புகளை வென்றிடவே
பண்ணில் விதையேற்றி தூவினான் பாரதத்தில்
மங்கையாய் ஜனித்திடவே மாதவமே காரணம்
இங்கவர் அடுப்பூதும் இழிநிலையும் இனியில்லை
சங்கை முழங்கச்செய்தான் சண்டாளர் ஒடுங்கிடவே
சிங்கம் எங்கள் பாரதித்தின் புரட்ச்சிக்கவி வாழி....
நாட்டுடைமை யாக்கப்பட்ட பாடுடைதலைவனிவன்
பாட்டால் பரங்கியர் பட்டார் பெரும்பாடு
வேட்டை தொடங்கியது வெண்பா வழியாக – பகையன்
நாட்டை விட்டான் நமக்கும் வெற்றி கிட்டியதே.....
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்தம் கொண்டாடுது பாரதம் இன்று
அன்புடை பாரதி நம்மில் பிறந்தான் என்று
ஆருயிர் பாரதத்தில் நாம் பிறந்தோம் என்று
ஆடுவோமே...பாரதியை நினைத்து
வேட்டை தொடங்கியது வெண்பா வழியாக – பகையன்
நாட்டை விட்டான் நமக்கும் வெற்றி கிட்டியதே.....
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்தம் கொண்டாடுது பாரதம் இன்று
அன்புடை பாரதி நம்மில் பிறந்தான் என்று
ஆருயிர் பாரதத்தில் நாம் பிறந்தோம் என்று
ஆடுவோமே...பாரதியை நினைத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக