மனசு சம்பந்தப்பட்டவை
கேட்பவனுக்கும்
கொடுப்பவனுக்கும்
இடையில் மட்டுமே
நிகழும் வியாபாரம் இது...
கேட்பதைக் கண்டு
இறைவனும்
கொடுப்பதைக் கொண்டு
மனிதனும்
மகிழ்கின்றனர்...
கேட்டலும்
கொடுத்தலும்
படைப்பில் அந்தரங்கம்...
சூத்திரம் இதனை சுற்றியே
சுழல்கிறது இந்த
சுற்றும் மானுட அரங்கம் ...
வையகத்தில் தத்தமது
உன்னத நிலையை
வேண்டுதலிலும்
வழங்குதலிலும்
நிலைப்படுத்துகின்றனர்.......
கற்றறிந்த மேதைகளும்
பட்டறிந்த ஞானிகளும்
பரம்பொருளின் உள்ளமையை
பாருக்குச் சொன்னார்கள்
பயனுற வாழ்ந்தார்கள்
படைத்தவனைப் புகழ்ந்தார்கள்
பாதத்தில் முள் தைத்தாலும்
பரம்பொருளிடமே
பதறி உருகி உறைந்தார்கள்....
பிரார்த்தனைகள் எனும்
சுமைதாங்கி கற்களில் நம்
சோகங்களை
சுலபமாக இறக்கி வைப்பதால்
சுழலும் இப்பூமியில் நாம்
சுகம் பெற வாழ்கிறோம்....
காலம் முழுவதும்
கைப்படம் மலர்த்தி
கேட்டுப் பிரார்த்திக்க
கர்த்தாவின் முன்னில்
கைகட்டி நிற்கையிலே
ஐயகோ எந்தன்
கண்கள் ஒன்றை நோக்க
கருத்தும் அதன் வழியில்...
காதுகளில் உரசும்
கானங்களின் இசையும்
கல்பின் கதவைக்
கொஞ்சம் திறக்க...
கடிதொரு வாசனை நாசியில்
கொண்டு கடிவாளமில்லா
குதிரை போல உள்ளம்
காற்றின் திசைகளில்
காரணனை மறந்து....
நான் நின்றும், குனிந்தும்,
நெற்றியை குத்தி
நெடுஞ்ஜாண் கிடையாய்
நான் செய்யும் அவற்றின் பெயர்
பிரார்த்தனைகளா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக