புதன், ஜனவரி 11, 2012

மயக்கத்தில் அது.....


மதியினை நழுவவிட்டு மனசில் சூழ்ந்த
விரகத்தின் கனல் நிரம்பிய
மயக்கம் பீடித்த அந்த மர்ம நாழிகையின்
மணிக்கட்டைப் பிடித்து
மறுபடி மறுபடிக் கேட்டான்
மனசும் மங்கையும் ஒன்றா...
மனசோடு விதைத்த வினா
மறுகி மீண்டும் அவனுள் சென்று
மறுபடி மறுபடி முடங்க...

பேதையின் போதையில்
புலன்களை மறந்து
புருவ வில்லினின்று புரவியாய் பாயும்
பார்வைக்கணையில் தப்பிய
பாவையவள் விழியம்புக்காயங்களுடன்
மேனி நடுங்க மேலும் மேலும்
மேவினான் காதலும் காமமும் ஒன்றா....
மனசோடு விதைத்த வினா
மறுகி மீண்டும் அவனுள் சென்று
மறுபடி மறுபடி முடங்க...

உடல மடல்களில் வழியும்
வியர்வையை கசகசப்பை
விரகம் நீராய்ச்சூழ்ந்தவனை  
விரவிப்பரவி வியாபிக்க
சுவாசம்தன்னில் சுருட்டிய அவனும்
சுருண்டு படுத்து சுகத்தை உடுத்தி
சுற்றம் தொலைத்து வழியிலும் வெளியிலும்
அலையும் தன்னை
உடலம் இழந்த வேற்றாய் காற்றாய்
காணவியலாக் கருப்பாய் களித்தவன்  
கண்மலர் சுருக்கிக் காதருகே
கிசுகிசுப்பாய் கேட்டான்
மதுவும் மாதும் ஒன்றா...
மனசோடு விதைத்த வினா
மறுகி மீண்டும் அவனுள் சென்று
மறுபடி மறுபடி முடங்க...

பதில் பிறந்தது
மழை நனைத்த நிலமும்
மரத்தை நனைத்த நிலவும்
மதியை விரட்டும் இன்பமும்
மனசை வென்ற அவளும்....
நிலவும் நிலமும் தருவும்
அவளும் இன்பமும் மறுபடி மறுபடி 
நனைவதும் நனைப்பதும்
அது அதுவாய் அதனால் தான்...



மதியினை நழுவவிட்டு மனசில் சூழ்ந்த
விரகத்தின் கனல் நிரம்பிய
மயக்கம் பீடித்த அந்த மர்ம நாழிகையின்
மணிக்கட்டைப் பிடித்து
மறுபடி மறுபடிக் கேட்டான்
மனசும் மங்கையும் ஒன்றா...
மனசோடு விதைத்த வினா
மறுகி மீண்டும் அவனுள் சென்று
மறுபடி மறுபடி முடங்க...

பேதையின் போதையில்
புலன்களை மறந்து
புருவ வில்லினின்று புரவியாய் பாயும்
பார்வைக்கணையில் தப்பிய
பாவையவள் விழியம்புக்காயங்களுடன்
மேனி நடுங்க மேலும் மேலும்
மேவினான் காதலும் காமமும் ஒன்றா....
மனசோடு விதைத்த வினா
மறுகி மீண்டும் அவனுள் சென்று
மறுபடி மறுபடி முடங்க...

உடல மடல்களில் வழியும்
வியர்வையை கசகசப்பை
விரகம் நீராய்ச்சூழ்ந்தவனை  
விரவிப்பரவி வியாபிக்க
சுவாசம்தன்னில் சுருட்டிய அவனும்
சுருண்டு படுத்து சுகத்தை உடுத்தி
சுற்றம் தொலைத்து வழியிலும் வெளியிலும்
அலையும் தன்னை
உடலம் இழந்த வேற்றாய் காற்றாய்
காணவியலாக் கருப்பாய் களித்தவன்  
கண்மலர் சுருக்கிக் காதருகே
கிசுகிசுப்பாய் கேட்டான்
மதுவும் மாதும் ஒன்றா...
மனசோடு விதைத்த வினா
மறுகி மீண்டும் அவனுள் சென்று
மறுபடி மறுபடி முடங்க...

பதில் பிறந்தது
மழை நனைத்த நிலமும்
மரத்தை நனைத்த நிலவும்
மதியை விரட்டும் இன்பமும்
மனசை வென்ற அவளும்....
நிலவும் நிலமும் தருவும்
அவளும் இன்பமும் மறுபடி மறுபடி 
நனைவதும் நனைப்பதும்
அது அதுவாய் அதனால் தான்...


1 கருத்து:

  1. கேள்விக்குள் பதிலாய்
    அவளுக்குள் அவனாய்
    அணிவித்து
    அலங்கரித்து
    எழுத்துக்களை கொண்டு
    எங்களை ஈர்க்கும் தோழருக்கு
    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...