சனி, ஜனவரி 28, 2012

மறந்து பறந்த சிட்டு.....



உண்ட களைப்புப் போக்க
உட்கார்ந்தேன் தாழ்வாரத்தில்
சட்டெனப் பறந்துவந்த
சிட்டொன்று என்னருகில்
படபடக்கும் சிறகை வெட்டி
பட்டென எழும்புவதும்
பறந்திட எண்ணமின்றி
பழையபடி அமர்ந்திடவும்
பட்டுச்சிறகோடு எனை
பார்வையில் கொஞ்சுவதுமாய்....

சிட்டதன் சிறகுக்குள்ளே
சேர்ந்த அந்த சோகம் என்ன.....

தணலாய் தகிக்கும் வெம்மை
தாகத்தைத் தீர்ப்பதற்க்கா
அலைந்தெதுவும் கிட்டிடாமல்
அன்னம் தேடி அலைகிறதோ...

அரிசி கொஞ்சம் நுள்ளி இந்த
அழகுப் பறவைக்கிடலாம்
அருந்த கொஞ்சம் நீர் மொண்டு
அருகில் கொண்டு தரலாம்....

பறவையைக் கலைத்திடாது
பயப்படுத்தி துறத்திடாது.
நழுவி நகர்ந்தேன் கொஞ்சம்
அன்னமும் தண்ணியும் பெற....

கைகளில் கொஞ்சம் அன்னம்
கிண்ணத்தில் சிறிது நீரும்
சன்னமாய் அடிமேல் அடிவைத்து
தாழ்வாரம் வந்து சேர்ந்தால்....

சிறகடித்துச் சிதறி
சுற்றியோர் வட்டமிட்டு
என்னிடம் சொல்லாமல்
எதையுமே கொள்ளாமல்
பறந்து பறந்து என்
பார்வை விட்டகன்று....

நீர்த்தளும்பிய என்விழிக்கோளம்
ஏமாற்றம்... எதையும் அறியாத
துணைவியோ என் தோளைத் தொட்டு
இன்னும் அவளையே நெனச்சிக்கிட்டு...
இந்தப் பிறவியில் நம்மைவிட
அவந்தான் பெருசுன்னு போயிட்டா...
காலம் கூடி வரும் 
கழுத வராமலா போய்டுவா...

நான் நேசிக்கும் யாவும்
என்னிடம் சொல்லாமல்
எதையுமே கொள்ளாமல்
பறந்து பறந்து என்
பார்வை விட்டகன்று....
நீர்த்தளும்பிய விழிக்கோளம்
காய்ந்த கோடுகளாய் 
கன்னத்துடன் ...


உண்ட களைப்புப் போக்க
உட்கார்ந்தேன் தாழ்வாரத்தில்
சட்டெனப் பறந்துவந்த
சிட்டொன்று என்னருகில்
படபடக்கும் சிறகை வெட்டி
பட்டென எழும்புவதும்
பறந்திட எண்ணமின்றி
பழையபடி அமர்ந்திடவும்
பட்டுச்சிறகோடு எனை
பார்வையில் கொஞ்சுவதுமாய்....

சிட்டதன் சிறகுக்குள்ளே
சேர்ந்த அந்த சோகம் என்ன.....

தணலாய் தகிக்கும் வெம்மை
தாகத்தைத் தீர்ப்பதற்க்கா
அலைந்தெதுவும் கிட்டிடாமல்
அன்னம் தேடி அலைகிறதோ...

அரிசி கொஞ்சம் நுள்ளி இந்த
அழகுப் பறவைக்கிடலாம்
அருந்த கொஞ்சம் நீர் மொண்டு
அருகில் கொண்டு தரலாம்....

பறவையைக் கலைத்திடாது
பயப்படுத்தி துறத்திடாது.
நழுவி நகர்ந்தேன் கொஞ்சம்
அன்னமும் தண்ணியும் பெற....

கைகளில் கொஞ்சம் அன்னம்
கிண்ணத்தில் சிறிது நீரும்
சன்னமாய் அடிமேல் அடிவைத்து
தாழ்வாரம் வந்து சேர்ந்தால்....

சிறகடித்துச் சிதறி
சுற்றியோர் வட்டமிட்டு
என்னிடம் சொல்லாமல்
எதையுமே கொள்ளாமல்
பறந்து பறந்து என்
பார்வை விட்டகன்று....

நீர்த்தளும்பிய என்விழிக்கோளம்
ஏமாற்றம்... எதையும் அறியாத
துணைவியோ என் தோளைத் தொட்டு
இன்னும் அவளையே நெனச்சிக்கிட்டு...
இந்தப் பிறவியில் நம்மைவிட
அவந்தான் பெருசுன்னு போயிட்டா...
காலம் கூடி வரும் 
கழுத வராமலா போய்டுவா...

நான் நேசிக்கும் யாவும்
என்னிடம் சொல்லாமல்
எதையுமே கொள்ளாமல்
பறந்து பறந்து என்
பார்வை விட்டகன்று....
நீர்த்தளும்பிய விழிக்கோளம்
காய்ந்த கோடுகளாய் 
கன்னத்துடன் ...

2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...