சனி, ஜனவரி 28, 2012

நனைதலும காய்தலும்


நீர்ச்சொட்டுக்கள் நில்லாமல்
நிலம் தொட்டபோது
நினைவுகளும் நெஞ்சினின்று
நில்லாமல் நெருட ஆரம்பித்தன

மழைநாள் நிகழ்வுகள் கொஞ்சம்
மனதோடு உண்டு
நனைத்த மழைத்துளிகள்
காய்தலின் போது காணமல் போனது போல்.....

காகிதக் கப்பல் செய்து
கலங்கிய நீரோடையில்
களித்த அந்தத் தருணங்கள்
கவலை இல்லா காலங்கள்.....

நனைந்த மண்ணில் குத்தி
நெளிந்திடும் மண்புழுக்களை
நிறையவே சேர்த்த அந்த
நேர்மையான குழந்தைக் காலம்...

வகுப்பறையில் கேட்ட விப்ஜியார் என்பதற்கு
விண்வில்லின் நிறங்கள் மொத்தம்
ஏழையும் எண்ணிப் பார்க்க
ஏங்கியே நனைந்த காலம்....

மாடிவீட்டு மடையின் தண்ணீர்
மழையுடன் போட்டிபோட்டு
மண்ணிலே துளைக்கும் காட்சி
மறந்திடாமல் மனசுக்குள் மணிமணியாய்...

நனைந்தும் குளிர்ந்தும்
நாம் பெற்ற காய்ச்சலுக்கு
நடுக்கும் ஊசிக்குப் பயந்து யார்க்கும்
சொல்லாமல் கழித்த காலம்.....

குளத்தின் நீர் பெருகிவிட
கொக்குகளும் நாரைகளும்
மறுகால் பாயும் வெள்ளம கூடவே
மூழ்கியோர் மரணங்கள் கேட்ட காலம்....

ஈர மண்பரப்பில் இறங்கி நடக்கையிலே
என் சின்னப் பாதம் அழுந்த
நீர் கிளம்பும் விரல்வழியே
நின்று நீர்பர்த்து நிதானமாய் நடந்த காலம் ....

வகுப்பறையில் அமர்ந்திருக்க
வந்தது ஓர் அடை மழை
வயலில் உம்மாவுடன்
வாசனையுடன் வந்த மழை
என்னை சன்னல்புறத்தாக்கி
இடியோடு இடித்தமழை
அண்ணனின் திருமணத்தில்
அழைக்காமலே அரும்பிய மழை
ஓடிய என் காலங்களில்
ஒழுகிய நீர்த்தாரைகளில்
ஓரிரு சொட்டுகள் கூட
உண்மையாய் என்னோடு இல்லை...
நனைந்தேன் மகிழ்ந்தேன்
காய்ந்தேன் மறந்தேன்
நனைவதும் காய்வதும்
வெளியில் மட்டுமே
உள்ளே நிறைய ஈரம்
காய முடியாமல் கண்ணீரோடு... 



நீர்ச்சொட்டுக்கள் நில்லாமல்
நிலம் தொட்டபோது
நினைவுகளும் நெஞ்சினின்று
நில்லாமல் நெருட ஆரம்பித்தன

மழைநாள் நிகழ்வுகள் கொஞ்சம்
மனதோடு உண்டு
நனைத்த மழைத்துளிகள்
காய்தலின் போது காணமல் போனது போல்.....

காகிதக் கப்பல் செய்து
கலங்கிய நீரோடையில்
களித்த அந்தத் தருணங்கள்
கவலை இல்லா காலங்கள்.....

நனைந்த மண்ணில் குத்தி
நெளிந்திடும் மண்புழுக்களை
நிறையவே சேர்த்த அந்த
நேர்மையான குழந்தைக் காலம்...

வகுப்பறையில் கேட்ட விப்ஜியார் என்பதற்கு
விண்வில்லின் நிறங்கள் மொத்தம்
ஏழையும் எண்ணிப் பார்க்க
ஏங்கியே நனைந்த காலம்....

மாடிவீட்டு மடையின் தண்ணீர்
மழையுடன் போட்டிபோட்டு
மண்ணிலே துளைக்கும் காட்சி
மறந்திடாமல் மனசுக்குள் மணிமணியாய்...

நனைந்தும் குளிர்ந்தும்
நாம் பெற்ற காய்ச்சலுக்கு
நடுக்கும் ஊசிக்குப் பயந்து யார்க்கும்
சொல்லாமல் கழித்த காலம்.....

குளத்தின் நீர் பெருகிவிட
கொக்குகளும் நாரைகளும்
மறுகால் பாயும் வெள்ளம கூடவே
மூழ்கியோர் மரணங்கள் கேட்ட காலம்....

ஈர மண்பரப்பில் இறங்கி நடக்கையிலே
என் சின்னப் பாதம் அழுந்த
நீர் கிளம்பும் விரல்வழியே
நின்று நீர்பர்த்து நிதானமாய் நடந்த காலம் ....

வகுப்பறையில் அமர்ந்திருக்க
வந்தது ஓர் அடை மழை
வயலில் உம்மாவுடன்
வாசனையுடன் வந்த மழை
என்னை சன்னல்புறத்தாக்கி
இடியோடு இடித்தமழை
அண்ணனின் திருமணத்தில்
அழைக்காமலே அரும்பிய மழை
ஓடிய என் காலங்களில்
ஒழுகிய நீர்த்தாரைகளில்
ஓரிரு சொட்டுகள் கூட
உண்மையாய் என்னோடு இல்லை...
நனைந்தேன் மகிழ்ந்தேன்
காய்ந்தேன் மறந்தேன்
நனைவதும் காய்வதும்
வெளியில் மட்டுமே
உள்ளே நிறைய ஈரம்
காய முடியாமல் கண்ணீரோடு... 


2 கருத்துகள்:

  1. வரிகளில்
    உதிர்ந்து விழும் மழைத்துளிகள்
    நனைத்து உயிரூட்டுகிறது
    மனதில் காய்ந்த பால்யத்தை

    உணர்வு மிக்க கவிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி செய்தாலி. உகளின் அன்புக்கும் பின்னூட்டத்திற்கும் மகிழ்ச்சி... நெடு நாட்களாச்சுப்பா உங்களின் விடுப்பு மகிழ்ச்சியாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்... தற்போது துபாய் வந்திருப்பீர்கள்.... அனைவருக்கும் என் அன்பான விசாரிப்புகள்....

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...