தலைப்பு

சிரிக்கலாம் வாங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

பேசன் சோ

யக்கா இங்க எங்க போறிய ????

பேசன் சோவோ ரேசன் கடையோ
வேஷம் போட்ட வெட்டிக் கூட்டம்  
வேடிக்க பாக்க வீணர்  படையும்
காசப்போட்டு கரியாக்கி 
காலநேரம் பழுதாக்கி 
போதை மீறிப் போனதனால்
பாதை தெரியா பயணத்தில் 
மாதை மங்கையை மாட்டைப்போல் 
மேடையேற்றி காட்டுகிறார் எதை?
மண்ணின் மானம் மங்கையன்றோ
மாசறு தாய்மையும் மங்கையன்றோ
கண்ணியம் காருண்யம் கருணை இவை
காட்டும் வடிவமும் பெண்களன்றோ 
சூட்டுக் கோலை எடுத்துவந்து
நங்கையர் மானம் காக்கவேண்டி 
நடு முதுகில் இவர்க்கெல்லாம் 
நாலு சுடு போடப் போறேன்...  
வர்ட்டா...  . 

யக்கா இங்க எங்க போறிய ????

பேசன் சோவோ ரேசன் கடையோ
வேஷம் போட்ட வெட்டிக் கூட்டம்  
வேடிக்க பாக்க வீணர்  படையும்
காசப்போட்டு கரியாக்கி 
காலநேரம் பழுதாக்கி 
போதை மீறிப் போனதனால்
பாதை தெரியா பயணத்தில் 
மாதை மங்கையை மாட்டைப்போல் 
மேடையேற்றி காட்டுகிறார் எதை?
மண்ணின் மானம் மங்கையன்றோ
மாசறு தாய்மையும் மங்கையன்றோ
கண்ணியம் காருண்யம் கருணை இவை
காட்டும் வடிவமும் பெண்களன்றோ 
சூட்டுக் கோலை எடுத்துவந்து
நங்கையர் மானம் காக்கவேண்டி 
நடு முதுகில் இவர்க்கெல்லாம் 
நாலு சுடு போடப் போறேன்...  
வர்ட்டா...  . 

புதன், ஜூலை 27, 2011

எதை வேண்டுமானாலும் சரி செய்யலாம். இப்படி...

அட... கரண்டி தானுங்க...
சீட் பெல்டு அந்து போச்சாம்...
கார் ஸ்டிரியோவ சுட்டுட்டாங்க...
புக் செல்ஃப் வளசல நிமித்திட்டோம்லா 
அசல் ஜி பி யெஸ் அசத்தலா இல்ல..
ஏ டி எம் ஸ்கிரீன் இப்ப தெளிவா தெரியுமில்ல...
ஷிடியரிங்க் சைடு ஒரு பிரச்னையா...
செம மழ பெஞ்சாலும் சிக்னலு சூப்பர்...
எலக்ட்ரிக் ஸ்டவ்வு புட்டுக்கிச்சு! காபி....
எக்ஷ்ஸாஸ்ட் பைப்பு ரோட்ல இழுக்காம இருக்கத்தான் 
புட்டிப் பாலூட்டவும் சோம்பலா இருந்தா 
கேபிள் கீழே நழுவாமல் தடுக்க...
டையபரையும் நாசம் பண்றானா? 

சனி, ஜூன் 11, 2011

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது by அப்துல்லாஹ் on Wed May 11, 2011 6:03 pm

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் 
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .

- தீவிரமாக யோசிப்போர் சங்கம் ( எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம் . 
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் . 
ஆனா, 
கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்

என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு , கரைன்னு எல்லாம் இருந்தாலும் , 
ரயிலேறனும்னா , 
ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் . இதுதான் வாழ்க்கை .

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .
ஆனா,
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ? 
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும் ,
ஹீரோ ஹோன்டா , ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!
அதேமாதிரி ,
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும் ,
லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!! 

டிசம்பர் 31 க்கும்,
ஜனவரி 1 க்கும் 
ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால்,
ஜனவரி 1 க்கும் ,
டிசம்பர் 31 க்கும் ,
ஒரு வருசம் வித்தியாசம் . 

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் . 
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . 
ஆனா... 
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??
யோசிக்கனும் ...!! 

தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தத்துவம் 2:
ஆட்டோக்கு ' ஆட்டோ' ன்னு பேர் இருந்தாலும் ,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .

தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !
( என்ன கொடுமை சார் இது !?!) 

தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும் ,
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது !
( ஹலோ ! ஹலோ !!!!)

தத்துவம் 5:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா ?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா ?
( டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!) 

தத்துவம் 6:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் ,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?
( ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க !!!) 

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,
கழித்தல் கணக்கு போடும்போது , 
கடன் வாங்கித்தான் ஆகனும்.

கொலுசு போட்டா சத்தம் வரும் .
ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா ? Error! Filename not specified.

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும் ,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .

T Nagar போனா டீ வாங்கலாம் .
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா ?

என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும் ,
வெயில் அடிச்சா ,
திருப்பி அடிக்க முடியாது . 

ஓடுற எலி வாலை புடிச்சா 
நீ ' கிங் 'கு 
ஆனா ...
தூங்குற புலி வாலை மிதிச்சா 
உனக்கு சங்கு .
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் 
ஆனா 
ஒடுற பஸ்ஸுக்கு முன்னா

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க by அப்துல்லாஹ்

அது ஒரு வெளங்காத ஊரு அந்த ஊருல ஒரு வீணப்போன பள்ளிக்கூடம். அங்கே தான் நம்ம வெட்டி வாத்தியாரு தினம் பாடம் சொல்லிக்குடுக்கென்னு போறதும் வாரதும். 
இவரு படிச்சதென்னவோ புள்ளைகளுக்கு சொல்லிக்குடுக்கத்தான். ஆனா பாக்குறது எல்லாம் கருமம் புடிச்ச சோலி. படிக்க வர்ற பசங்க புள்ளிய வூட்டுல இருக்க அம்மக்காரிய பத்தி விசாரிக்கது,அவங்கள தெருவில வெளியில கண்டா புள்ளிய படிப்ப பத்தி பேசுற சாக்கில ஜொள்ளு விடுறது.இத்தனைக்கும் இந்த ஆளு காரியக்காரன் இல்ல வெறும் தம்மா தன்னையப்பத்தி பெருசா நெனச்சிக்கிட்டு கனவுலயே ஐஸ்வர்யா ராய்க்கு நூலு விடுற கேசு. 

இப்படித்தான் ஒருநா மாரீ புள்ளைட்ட ஏ புள்ள என்ன இன்னைக்கு ரொம்ப சீக்கிரமே பள்ளிக்கூடம் வந்திட்ட ன்னு கேக்குற மாதிரி கேட்டு வழக்கம் போல அவங்க அம்மா சௌரியமா இருக்காளா ன்னு கடெசியில கேட்டாரு. இவளும் பதில சொல்லிப்புட்டு வீட்டுலயும் போயி, யாத்தி! அந்த வாத்தி இண்ணைக்கும் உன்னைய வெசாரிச்சாருன்னு லைன குடுத்து பத்தவச்சிட்டா. 
இவ அம்மாவப்பத்தி நீங்க கட்டாயம் தெறிஞ்சிக்கிடனும். அவள்ட்ட எப்பவும் ஒரு 1000 வாட்டு கரண்டு ஓடிக்கிட்டே இருக்கும் பாக்க கொஞ்சம் லெச்சனமா இருந்தாலும் எப்பவும் யாரிட்டயும் ஒரே சண்ட எதுலயும் அவ தோத்ததே இல்ல.

புள்ளக்கிட்ட சொன்னா ஏடி நாளக்கி வாத்திய இருட்டும்போ வுட்டுக்கு வரச்சொல்லுடின்னா.
அவளும் போயி வாத்தி கிட்ட சார் எங்கம்மா உங்க கிட்ட என்னவோ பேசணும்னு சொல்லிச்சு நாளைக்கு இருட்டும்போது எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு போணுமாம் சார்.
வாத்தி குதூகலாமாயிட்டார.
நாளையும் விடிஞ்சு பொழுதும் போனப்புறம் வாத்தி மெள்ள மாரி வீட்டுக்கு போனாரு அவங்கம்மா பரட்டைய பாக்க.
வாத்தியக் கண்டதும் பரட்ட வாங்க வாத்தி இருங்க, இதோ வந்திருதேன்னு சொல்லிட்டு ஒரு அரமணி நேரம் கழிச்சு வந்து, மறந்தே போய்ட்டன் வாத்தி ன்னு டயத்த கடத்தி ஊரு ஒடுங்கட்டும்னா.
அவரும் சரிதான்னு ஒரு காப்பித்தண்ணி கூட இல்லாம நடுப்பாலைவனத்துல ஒட்டக மாதிரி அங்கிட்டும் இங்கிட்டுமா அல பாய்ஞ்சிக்கிட்டுருந்தார்.
அப்ப திடீருன்னு பாத்து கதவ டாம் டாமின்னு போட்டு தட்டுற சத்தம் கேட்டதும் 
வாத்தி அலறியடிச்சு எப்பே என்ன சோதனை இது ஊருக்காரப்பயலுவளுக்கு தெரிஞ்சா உப்புக்கண்டமில்ல போட்டுருவான்னு அபயம் கேட்டு பரட்டைய தேடினாரு. 
பரட்டையும் ஒரு பழய சேலைய எடுத்துக் குடுத்து இத சுத்திக்கிட்டு அந்த திரி உரல்ல கொஞ்சம் குறுவய திரிக்க மாதிரி திரிங்க ( ஆட்டு உரல் போன்ற கையால் சுழற்றி உளுந்து குருவ அரிசி போன்றவற்றை உடைக்க பயன்படும் ஒரு பழங்கால கருவி ) ன்னு சொல்லி அவருக்கு முட்டாக்கு போட்டு மூலையில ஒரு மூடை குறுவையும் குடுத்து நான் சொல்லுற வரைக்கும் திரிக்கத நிறுத்த வேணாம்னு சொல்லி ஆரம்பிச்சு வச்சா. யாராவது கேட்டா வேலக்காரி ன்னு சொல்லி சமாளிச்சுக்கிறுதேன்.
வாத்தியும் திரிக்க ஆரம்பிச்சாரு குருவையும் கொரையீர மாதிரி தெரியல. ஒரு வழியா கால் மூட்ட குருவ திரிச்சிட்டாரு. 
அதிகாலையில முழிச்சு எந்திரிச்ச பரட்ட வாத்தி ஞாபகம் வந்து அப்புறமா அவர அவசரமா வெளிய கெளப்பி வுட்டா.
வாத்திக்கு வலியின்னா வலி கையில அப்பிடி ஒரு வலி. 
ஊட்டுக்கு வந்து லீவு போட்டுட்டு அடிச்சுக்கிடந்து தூங்கிட்டு மருநா பள்ளிக்கூடம் போனாரு.
சாரே சாரே யாரோ கூப்பிடுற சத்தம் கேட்டு நம்மாளு திரும்பி பாத்தா நம்ம குருவக்காரி மவ மாரி.
என்னடி ? வாத்தி இன்னைக்கு கொஞ்சம் எரிச்சலோடு கேட்டார். 
அம்மா நீங்க நல்லருக்கியலான்னு கேக்க சொன்னா ? 
ஏன் மிச்ச குருவையும் திரிக்கதுக்கா கேட்டுவூட்டுருக்கா . போடி போயி வாத்தி செத்தான்னு சொல்லு

கணவர்கள் விற்பனைக்கு....

கணவர்கள் விற்பனைக்கு....

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா
1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும். 

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."மச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது" .. 

* முதல் தளத்துல அறிக்கை பலகைல "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா

* இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

* மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு.

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

* நாலாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?
கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

* ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

* ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் . எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் "

எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க by அப்துல்லாஹ்

கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...

ஒரு பொண்ணு போட்டோவுல 
தேவதைமாதிரி இருந்தாலும் 
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா

அப்பா அடிச்சா வலிக்கும் 
அம்மா அடிச்சா வலிக்கும் 
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது

உன்னை யாரவது 
லூசுன்னு சொன்னா 
கவலை படாதே!
வருத்த படாதே! 
ஃபீல் பண்ணாதே! 
உங்களுக்கு எப்படி 
தெரியும்ன்னு கேள்! 

காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம். 
நனைந்த பின்பு ஜலதோஷம்.

மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?

ஐந்து கேள்விப்பா

நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?

முதல் மூணும் கடைசி இரண்டும்

வெரிகுட் கீபிடப்

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????

என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.

நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். 
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.

டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா'' எந்த அளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!

வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..

சார், 
டீ மாஸ்டர்டீ போடறாரு, 
பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...

''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''

ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய். 
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ? 
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.

இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா? 
இல்லை அவங்களே சொன்னங்க...

Related Posts Plugin for WordPress, Blogger...