சனி, ஜூன் 25, 2011

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து by அப்துல்லாஹ்

கரைகளை மறந்தது நீலக்கடல் 
விதைதனை மறுத்திட்ட நெடிய மரம் 
சிறகுகளை இழந்த சின்னப்பறவை -பிள்ளைகளால் 
சிலுவையில் கைவிடப்பட்ட பெற்றோர் 

வைக்கோல் போருக்கும் விலை உண்டு 
வீழ்ந்த விறகுக்கும் விலையுண்டு
உழுது களைத்த காளை கூட 
உன்னுடன் வீட்டில் தானுண்டு

சூனியமான சூத்திரத்தை சூட்சமமாகக் கைப்பற்றி 
குருதிவழியே கருவேற்றி குறைகளின்றி உருவாக்கி
மருகி உருகி மண்டியிட்டு மகனே உன்னை நான் பெற்றேன்
மலைப்பொழுதாய் கருதியென்னை மறந்துவிட்டாய் என்கதிரே 

கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய் 

பிள்ளையாய் நீ வந்து பிறந்ததற்கு 
பெருபிழையன்றோ நான் செய்தேன் 
காளைகளைப்போல எனக்கும் அன்று 
காயடித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்....

வியாழன், ஜூன் 23, 2011

வெகேஷன் போறேன் by அப்துல்லாஹ்

கல்லூரியில் விடுமுறை போல
கம்பெனியில் வெகேஷன்!

பெட்டி கட்டப் போறேன் 
கணினி கண்ணாடி கேம்ஸ் 
பவுடர் சோப்பு ஷேம்போட
மணக்கும் அத்தர் மன்மத பில்ஸ்
சாக்லேட் பருப்பு பிஸ்கட் 
ஏலம் பட்டை கிராம்பும் 
உடுப்பு கேஸ் அடுப்பு 
டேங்கு சிடி பிளேயர்
மறக்காம செல்ஒண்ணு மச்சானுக்கு
பால் பவுடர் நல்லதாமே அதுல ஒண்ணு
போங்க சார் நிறைய சாமான்

மனசு முழுக்க மகிழ்ச்சியோட 
மனைவி மக்கள் சிந்தனையோட...

இதோ தரையிறங்கியாச்சு
தாய் மண்ணில் நான்...
உறவுகளை கட்டியணைத்து
ஊரு வந்து சேர்ந்தாச்சு

பிள்ளைகள் பள்ளிக்குப் பறக்க 
மனைவியோடு மகிழ்ச்சியாக மனம் விட்டுப் பேச 
வந்தது சேதி மாமாவுக்கு சுகவீனம்

ஆலாய் பறந்தாள் அவள் அங்கேயும் இங்கேயும்
டயப்படி மருந்து கொடுக்க 
டான் டாண்ணு அவுக வீட்டில்

வெகேஷன் போராடிச்சது 
பிரண்ட்ச பாக்கப் போக கிளம்ப
வேண்டாம் தடுத்தது வீடு 
அவங்க உங்க கிட்ட இதுவர புடுங்கியது போதும் 

பள்ளி விட்டு வந்தால் பிள்ளைகளிடம் பேசலாம்.
கடினமாக காலத்தை கடத்தினால்
வீடு திரும்பிய பிள்ளைகள் டியூஷனுக்கும் மதரசாக்கும்
சனி ஞாயிற்றிலும் பெசல் கிளாசு

பெரும்பாலும் சாப்பாடு மாமா வீட்டில் 
ஆக்கி மனைவியே சுமந்து தந்தாள்

என்னங்க! காலையில முழுக்க ஆளையே காணோம்
இதென்ன சொல்லாம போற போக்கு
கம்பெனியிலிருந்து போன் முதலாளி கூப்பிட்டார் 
மறுபடியும் கிளம்ப பெட்டியைத் தேடினேன்

நான் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை 
இப்போதும்..
.

திங்கள், ஜூன் 20, 2011

கற்பப்பாத்திரம் என் கண்ணிமை

அம்மாதான் எனக்கு எல்லாம் 
அவளுக்கு நான் தான் செல்லம்
அள்ளி எனை எடுப்பாள் 
ஆசை தீர முத்தம் தந்து

கண்ணின் இமைபோல 
காலமெல்லாம் காத்திடுவாள் 
கல்லையும் கரையச்செய்யும் 
கருணையின் உயிர்வடிவம் 

படைத்தவன் எனக்களித்த 
பரிசுத்தப் புதையல் அவள் 
பாசமும் பற்றும் கொண்ட 
பரிவுள்ள அன்னை அவள்

நோவினை நானுற்றாலோ
நொந்தவள் நோன்பு நோற்ப்பாள்
நெஞ்சோடு எனை அணைத்து
நெற்றியைத் தொட்டுப் பார்ப்பாள் 

பள்ளியில் வகுப்பறையில் 
பாடங்கள் கேட்கும் நேரம் 
ஒளிந்து நின்று ரசித்திடுவாள்
ஒத்தையாய் சன்னலோரம்

பக்குவமாய் எடுத்து என்னை
பத்திரமாய் தன் இடுப்பில்
பரிவுடன் தான் சுமந்தாள்
பத்தாம் வயது வரை

கை நிறைய அள்ளி உண்ணு
விரல் நீக்கிச் சாப்பிடாதே
கனிவுடன் கண்டித்திடுவாள்
அவள் கை மணம் நினைவில் இன்னும்

அம்மாவுக்கென்று ஒரு 
அற்புத வாசமுண்டு அவளின்
சாயம் போன வாயில்ச்சேலை
சாட்சியுண்டு என்னிடத்தில்

அம்மாதான் எனக்கு எல்லாம் 
அவளுக்கு நான் தான் செல்லம்
அள்ளி எனை எடுப்பாள் 
ஆசை தீர முத்தம் தந்து

கண்ணின் இமைபோல 
காலமெல்லாம் காத்திடுவாள் 
கல்லையும் கரையச்செய்யும் 
கருணையின் உயிர்வடிவம் 

படைத்தவன் எனக்களித்த 
பரிசுத்தப் புதையல் அவள் 
பாசமும் பற்றும் கொண்ட 
பரிவுள்ள அன்னை அவள்

நோவினை நானுற்றாலோ
நொந்தவள் நோன்பு நோற்ப்பாள்
நெஞ்சோடு எனை அணைத்து
நெற்றியைத் தொட்டுப் பார்ப்பாள் 

பள்ளியில் வகுப்பறையில் 
பாடங்கள் கேட்கும் நேரம் 
ஒளிந்து நின்று ரசித்திடுவாள்
ஒத்தையாய் சன்னலோரம்

பக்குவமாய் எடுத்து என்னை
பத்திரமாய் தன் இடுப்பில்
பரிவுடன் தான் சுமந்தாள்
பத்தாம் வயது வரை

கை நிறைய அள்ளி உண்ணு
விரல் நீக்கிச் சாப்பிடாதே
கனிவுடன் கண்டித்திடுவாள்
அவள் கை மணம் நினைவில் இன்னும்

அம்மாவுக்கென்று ஒரு 
அற்புத வாசமுண்டு அவளின்
சாயம் போன வாயில்ச்சேலை
சாட்சியுண்டு என்னிடத்தில்

ஞாயிறு, ஜூன் 19, 2011

விந்தைகளை உருவாக்கும் தந்தை : இன்று சர்வதேச தந்தையர் தினம் by அப்துல்லாஹ்

சவுதி ஒருவர் காரில் கடத்திய ரஷ்யப் பெண் - புகைப்படம்

மின்னஞ்சலில் பெற்றது

தினமலர் உண்மையின் உரைகல் by அப்துல்லாஹ்

தினமலர்!

"உண்மையின் உரைகல்" - இது இப்பத்திரிக்கை தனக்குத் தானே சூட்டிக்கொண்டுள்ள பட்டம்! இதன் யதார்த்த அர்த்தம் தெரிந்துதான் இப்படியொரு பட்டத்தைத் தனக்குத்தானே இப்பத்திரிக்கை சூட்டிக்கொண்டுள்ளதா என்று தெரியவில்லை.

தினமலரின் "உண்மை செய்திகள்" கிசுகிசுக்களில் மட்டுமா நிறைந்துள்ளது? இன்று அது வெளியிட்டுள்ள சர்வதேச செய்திகளில் ஒன்றைப் புகைப்படத்தில் காணுங்கள்.

"கிங் ஃபகத் மருத்துவமனை", சவூதியில் உள்ளது. ஆனால், நம் "உண்மையின் உரைகல்(!)லுக்கு" அது துபையில் உள்ளதாம்! சரி, ஒரு பேச்சுக்கு, இது சவூதி சென்றவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று வைத்துக்கொள்வோம்!

சவூதி எங்குள்ளது? துபையிலா? அல்லது துபை எங்குள்ளது? சவூதியிலா?

சவூதியும் துபையும் வளைகுடா நாடுகளிலுள்ள இரு நாடுகள் என்ற, ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு இருக்கும் சாதாராண புவியியல் அறிவுகூட "உண்மையின் உரைகல்(!)"லான தினமலரின் ஆசிரியர் குழுவுக்கு இல்லை என்பது கேவலத்திலும் கேவலம்! எந்த உலகத்தில்தான் தினமலர் உள்ளது? அது வழங்கும் சர்வதேச செய்திகளின் தரமும் அதிலுள்ள உண்மைத்தன்மையும் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

ஜனநாயகத்தின் ஒரு தூணான ஊடகத்துக்கு என ஒரு பொறுப்புணர்வு உள்ளது. அதனைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, கிசுகிசுக்களையும இது போன்ற பொறுப்பற்ற செய்திகளையும் கவர்ச்சிப்படங்களையும் வைத்து வியாபாரம் செய்யும் ஒரு பத்திரிக்கையிடம் "உண்மையாவது மண்ணாங்கட்டியாவது"!

வடிவேலுவின் காமடியை மிஞ்சிவிட்ட தினமலரின் இந்தக் கண்டுபிடிப்பை எந்த "உண்மையின் உரைக்கல்லுடன்" உரசிப் பார்ப்பது என்பதை இனி வாசகர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும்!

பிரபஞ்சம் - விஞ்ஞானக் கழிப்பிடம்...Abdullah

நிரந்தரம் என்றில்லாத நீல வான மாயை 

சூரியனையும் சந்திரனையும் தவழ விட்ட வடுக்களின்றி

தகவல் சூல் கொண்ட ஒளிஒலிவரிகள் மேகங்கள் விரவலில்
உண்மைகளும் ஒருகோடிபொய்களும் ஊடகங்களுக்காய்
பரிமாறும் செய்திகள் பரவலாய் நீர்மேகங்களுக்கருகில்
பாயும் ஓடங்கள் பகுத்தறியும் மனிதப் பறவைகள் 
காயும் வெப்பம் கணக்கின்றி உயர
கைதட்டும் ஏவுகணை வெற்றிக் கூட்டம் 
மழை வற்றிப்போன விவசாயியின் வெறுமை 
ஆழ்குழாய் நீருக்கு அடுத்த கண்டமும் துளைக்க
வேசியின் கணக்காய் மாறிப்போன மாசுக்காற்று 
எஞ்சிய குடி நீர் இங்கு எட்டு ரூபாய் ஆன பின்னும்
அஞ்சி ஒடுங்கிப்போய் அரண்டு நிற்கும் அவலம் 
மண்புழுவுக்காய் தோண்டிய மண்ணில் இரத்தம் 
கடல் தாண்டினானாம் கரையோரமாய் சடல எண்ணிக்கை
இலவச எச்சில் மீனுக்காய் ஏங்கும் காக்கை போல்
ஆசைகள் அரித்து அழுகிய இலவச மனிதக்கூட்டம் 
ஆயிரம் மதிப்பெண்ணுடன் அடக்கம் செய்யப்பட்ட ஏழைக்கல்வி 
பயிர் வளர்த்திட நச்சுக் கலக்கும் நவீன விவசாயம் 
மகளின் தாலி அறுக்க பெரிய தொகைக கைமாற்றும் பெற்றோர்
பிரபஞ்சத்தில் கதிரொளி காற்று நீருடன் கஞ்சியும்
கலப்படமாகிட கற்பும் நட்பும் சுற்றமும் பாசமும்
செத்துச்சுண்ணாம்பாய் செல்கிறது சமாதி நோக்கி 
இனி மரங்களும் விலங்குகளும் மலர் வளையம் வைக்கட்டும்
மாண்டு மடிந்து மட்கிப்போன மானிடகுறியிடுகளுக்கு

புதன், ஜூன் 15, 2011

கலந்த வண்ணங்கள் Abdullah

பச்சைப்பசேல் என
பாய்கின்ற நீர் கொண்டு பயிர் வளரும்
பாய் விரித்து பள்ளிகொள்ளும் அத்தருணம்

செக்கச்செவேல் என
செந்தணலும் சோதியுடன் சுடர்விரிக்கும்
செம்மாதுளை அதரங்கள் நிறம் பரப்பும்

வெள்ளைவெளேர் என
விடைபெற்றுப் பனிமலையும் வெடித்துதிரும்
வெண்முத்துப் பற்க்கடித்து வெட்கமுறும்

கன்னங்கரேல் என
கார்முகிலும் கண்விழித்து நடைபயிலும்
கருங்கூந்தல் குழலவிழ்ந்து களிப்படையும்

அருவி நீர் அருந்தியும் அடங்காது தாகம்
அடக்கினாலும் அடங்காது அடங்கிடாது போகும்...   

செவ்வாய், ஜூன் 14, 2011

மீளுமா திராவிட முன்னேற்றக் கழகம் by அப்துல்லாஹ்

கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்!

ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?
'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!

கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருத்து. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. 'ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்’ என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது!

)

ஒரு சின்ன ஆதங்கம்
தாய் தமிழ் நாட்டின் ஒரு நல்ல பண்பட்ட அரசியல் கட்சியின் தற்போதைய இந்த நிலை மாறி

தி மு க என்னும் ஒரு ஒரு கலப்படமில்லாத வீரியமிக்க மொழிப்பற்றுள்ள சமதர்ம நோக்குள்ள கட்சியாக அது களம் காணுமா? ஏக்கம் தலை தூக்குகின்றது...

அதே நேரத்தில் போயஸ் கார்டனும் சளைத்தது அல்ல...
அதைப் படம் போட்டு விளக்கவேண்டிய அவசியம் இல்லை உள்ளங்கை நெல்லிக்கனியல்லவா?

ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சொல்வதில் உள்ள தர்மசங்கடம்

கேள்வி:    நீங்கள் என்ன சாப்பிவிரும்புகிறிர்கள்? பழஜூஸ்,சொக்கலேடே , சோடா ,டி
                                                            
பதில்             டீ மட்டும்

கேள்வி         இலங்கை டி ,மூலிகை டி,ஏலம கலந்த டி,புஷ் டீ ,கிரீன் டி ?

பதில் :         சிலோன் டி

கேள்வி :    அதிலும் வெள்ளை டி ,கருப்பு டி ?

பதில் ;       வெள்ளை

கேள்வி :  பால் அதிகம் விட்டோ இல்லை குறைத்தோ?

பதில் ;      பால் சேர்த்து

கேள்வி :  ஆட்டு பால் ,பசுப்பால் ,ஓட்டக பால் எது தேவை ?

பதில் :      பசும பாலே போதும் டீ கொண்டு வாங்க.

கேள்வி  :இனிப்புக்கு என்ன ?சீனி  இல்லாவிடின் கரும்பு சாறு

பதில் :சீனி

கேள்வி :கட்டி சீனி யா ?இல்லை தூள் சீனியா ?

பதில் :தூள் சீனி

கேள்வி :வெள்ளை சீனி ,பிரவுன் சீனி ,மஞ்சள் சீனி எது வேண்டும் ?

பதில் :தம்பி டியே வேணாம் கொஞ்சம் தண்ணீ கொண்டு வா ?

கேள்வி :மினரல் வாட்டர் வேணுமா ? இல்ல நார்மல் தண்ணிர் போதுமா?

பதில் :மினரல் வாட்டர்

கேள்வி :சுவை சேர்த்த நீரோ இல்லாமல வெறும் நீரோ ?

பதில் :::::::::::::::::::::::;;ஆணியே புடுங்க வேணாம் நான் போறன் 

பாபா ராம்தேவ் ஒரு பப்பரக்க ரிப்போர்ட்

பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் காமெடி கண்ணீர் கிளைமேக்ஸ்..!
நுனி நாக்கை உள்நோக்கி வளைத்து சிறுநாக்கையும் அதைச் சுற்றி மேலண்ணத்தில் இருக்கும் நெகிழ்வான பகுதிகளையும் அழுத்துமாறு வைத்துக் கொண்டு மூச்சை சீராக இழுத்து விடுவதற்கு ஹட யோகத்தில் கேச்சரி முத்திரை என்று பெயர். இப்படிச் செய்வதால், ப்ராணன் இடது மற்றும் பிங்கள நாடியிலிருந்து அகன்று சுஷூம்னா நாடியில் நிலை கொள்ளுமாம். இதனால் ஒரு மனிதனுக்கு பசியே உண்டாகாமல் தடுத்து விட முடியுமாம். பதறாதீர்கள் நண்பர்களே. இதையெல்லாம் நாங்கள் சொல்லவில்லை – யோக சாஸ்திரம் தான் சொல்கிறது.
கோடிக்கணக்கான மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடும் ஒரு நாட்டில் இது போன்ற  ஆன்மீக சரடுகளையெல்லாம் பெரும்பாலானோர் நம்பப் போவதில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால்,

உண்ணாவிரதத்தை முடித்து வைத்த ஸ்ரீஸ்ரீ
இதையெல்லாம் நம்மை நம்பச் சொன்னதோடு அதையே மூலதனமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான கோடிகளைக் குவித்துள்ள ஒருவருவருக்கு மேற்படி யோக டெக்னிக் ஒர்க்அவுட் ஆகாமல் காலைவாரி விட்ட சோகக் கதையை இனி பார்ப்போம்.
ஜூன் நான்காம் தேதி பாபா ராம்தேவ் கருப்புப் பணத்தையும் ஊழலையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்த போது எப்படியும் இந்தாளுக்கு இருக்கும் யோக பலத்தின் அடிப்படையில் ஒரு பத்து மாதத்திற்காவது இந்த டிராமாவை ஓட்டுவார் என்று தான் நினைத்தோம். ஆனால், எண்ணி பத்தே நாளில் ஆள் சுருண்டு விழுந்து விட்டார். இந்த இடத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் ஐரோம் ஷர்மிளா தவிர்க்கவியலாமல் நினைவுக்கு வருகிறார் அல்லவா?
பல ஆண்டுகளாக ராம்தேவ் செய்து வந்த யோகாப்பியாசங்கள் வழங்கிய உடல் உறுதியைக் காட்டிலும் அந்தச் சாதாரணப் பெண்ணின் மனவுறுதி வலிமையானது என்பது இப்போது நிரூபணமாகி இருக்கிறது. ஆக, போராட்ட உறுதியையும் கொள்கைப் பிடிப்பையும் உறுதி செய்வது வெறும் உடல் வன்மையல்ல – அது ஒருவன் ஏற்றுக் கொண்ட நேர்மையான அரசியலும் அதற்கு விசுவாசமாக  நிற்கும் மனத்தின்மையும் தான் என்பது இன்னுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த யோகப் போராளி தினமும் பாலும், தேனும் அடித்து விட்டுத்தான் உண்ணாவிரதம் இருந்துள்ளார். இருந்தும் ஒரு வாரத்திற்கு மேல் அண்ணாத்தேவின் உதார் விரதம் தாக்குப்பிடிக்கவில்லை.
போகட்டும். அண்ணா ஹசாரேவுக்கு மதிப்புக் கொடுத்த காங்கிரசும் அவரை ஒரு நாயகன் போல ஏற்றிப் போற்றிய முதலாளித்துவ ஊடகங்களும் பாபா ராம்தேவைக் கைவிட்டதன் தவிர்க்கவியலாத விளைவு தான் இப்போது அவரை மண்ணைக் கவ்வ வைத்துள்ளது.
அண்ணா ஹசாரே ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்த போது அவருக்கு நாடெங்கும் குறைந்த பட்சமாகத் திரண்ட நடுத்தரவர்க்க மக்கள் திரளின் பின்னே இருந்தது, வலுவானதொரு என்.ஜி.ஓ வலைப்பின்னல் மற்றும் ஊடகங்கள். என்.ஜி.ஓவின் ஆன்மாவே அதன் அரசியலற்ற தன்மையும் மக்களை அரசியல் ஓட்டாண்டிகளாக்கிக் காயடிக்கும் துரோகத்தனமான செயல்திட்டமும் தான். இதனால் கீழ்மட்ட அளவில் ஊடுறுவ முடிந்த காவி கும்பலால் மேல்மட்ட அளவில் ஊடுறுவி ஓரளவுக்கு மேல் ஆதாயம் அடைய முடியவில்லை. மோடியை ஆதரித்த அண்ணா ஹசாரே கூட ஒரு கட்டத்தில் அதைப் பற்றிய விமர்சனம் வந்த போது சுதாரித்துக் கொண்டார்.
புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் புதிதாய் உருவெடுத்திருக்கும் மேல் நடுத்தர வர்க்கத்தின் ஒரு லும்பன் பிரிவையே தனது பிரதானமான நுகர்வோராய்க் கொண்டிருக்கும் ஆங்கில ஊடகங்களுக்கும் அண்ணாவை மெனக்கெட்டு ஆதரிப்பதில் ஆதாயம் இருந்தது. வெளியாகும் ஊழல் முறைகேடுகளின் விளைவாய் அவர்களிடையே எழுந்திருந்த இயல்பான ஆத்திரத்திற்கும் ஆவேசத்திற்கும் ஒரு வடிகாலாய் அண்ணாவை முன்னிறுத்தி டி.ஆர்.பியை உயர்த்தி நன்றாகக் கல்லா கட்டிக் கொண்டார்கள்.
ஆனால், பாபா ராம்தேவின் கதையே வேறு. இவரைப் பின்னின்று இயக்கியது புகழ் போதையும் காவி கும்பலும் தான். இவரை ஆதரித்தால் தமது சந்தையான அரசியலற்ற மொக்கைக் கூட்டத்தில் பிளவு உண்டாகிவிடும் என்பதை முதலாளித்துவ ஊடகங்கள் அறிந்து இருந்ததாலேயே தெளிவாகக் கைகழுவி விட்டனர். ராம்தேவ் தில்லியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதற்கு அடுத்த நாள் டைம்ஸ் நௌவின் ‘நியூஸ் ஹவர்’ நிகழ்ச்சியைத் துவக்கிய அம்பி அர்னாப் கோஸ்வாமி, அந்நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டார் – “அண்ணா ஹசாரேவை நாம் ஆதரித்தோம். ஏனெனில் அவர் அரசியல் சார்பற்றவராயிருந்தார். அவருக்கு அரசியல் நோக்கம் ஏதுமில்லை. ஆனால், பாபா ராம்தேவுக்கு அரசியல் நோக்கங்கள் இருக்கிறது”
அண்ணா ஹசாரே அரசியலற்ற மொக்கை என்பதால் தான் அவரால் ஊழலைப் பற்றி பேச முடிந்த அளவுக்கு அதன் அடிப்படையாய் இருக்கும் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி பேசமுடியவில்லை. அவரது அரசியல் ஓட்டாண்டித்தனம் தான் ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டே ஊழல் கறை படிந்து ‘பெய்டு நியூஸ்’ விவகாரத்தில் ஊரே காறித் துப்பிய டைம்ஸ் குழுமத்தோடும் ‘ஸ்பெக்ட்ரம் புகழ்’ பர்காதத்தின் என்.டி.டிவியோடும்  ஒட்டி உறவாட வைத்தது. இதோடு சேர்த்து, ஹரித்வாரில் இருந்து ராம்தேவை நேரடி ஒளிபரப்பு செய்வதெல்லாம் செலவு பிடிக்கும் காரியம். போட்ட துட்டுக்கும் வரும் டி.ஆர்.பி ரேட்டிங்குக்கும் எப்படி கட்டுபடியாகும்? எனவே அண்ணாவை ஏற்றிப் போற்றிய ஊடகங்கள் ராம்தேவை லூசில் விட்டுவிட்டார்கள்.
இந்தச் சூழலை நன்றாகப் புரிந்து கொண்ட காங்கிரசு, முடிந்தவரை அதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. ராம்தேவை தில்லியிலிருந்து விரட்டியடித்த உடனேயே தனது ரத கஜ துரகாதிபதிகளை களமிறக்கிய காங்கிரசு, தொடர்ச்சியாக ராம்தேவை ஊடகங்களில் தாக்கி வந்தது. இதற்கிடையே ராம்தேவின் கும்பலை வேடிக்கை பார்க்கச் சென்ற பி.ஜே.பியின் சுஷ்மா ஸ்வராஜ் போட்ட தேசபக்தி குத்தாட்டத்தையும் காங்கிரசு சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது.
இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கத்தில் மெழுகுவர்த்திப் போராளிகள் ராம் லீலா மைதானத்தில் காங்கிரசு காட்டிய பூச்சாண்டிகளுக்குப் பயந்து மொத்தமாக பதுங்கிக் கொண்டனர். பாபா ராம்தேவ் வேறு சூழ்நிலை புரியாமல் போலீசை எதிர்த்து சண்டை போட 11,000 பேர் கொண்ட ஒரு ஆயுதப் படையை அமைக்கப் போவதாகவும் அதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 20 பேர் பயிற்சி பெற முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். சும்மா ‘பே’ என்றாலே காலோடு மூத்திரம் போகும் தைரியசாலிகளான மெழுவர்த்தி வீரர்கள் முதல் வேலையாக வாங்கிய மெழுகுவர்த்தியை ஆழமாகக் குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள். பின்னே, போராட்டம் என்றால் பேஷன் பெரேடு  என்று நினைத்தவர்களிடம் போய் சண்டை, ஆயுதம் என்று பேசினால் வேறென்ன நடக்கும்?
ஒருவழியாக ராம்தேவைச் சுற்றி எல்லா கதவுகளும் அடைபட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் தான் அவருக்குக் கைகொடுக்க டபுள் ஸ்ரீ முன்வந்தார். நேற்று ராம்தேவைச் சந்தித்த டபுள் ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவைக் கேட்டுக் கொண்டதை அடுத்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட ராம்தேவ், தனது சத்தியாகிரகம் தொடரும் என்று அறிவித்துள்ளார். இத்தனைக்கும் கடந்த பத்துநாட்களாக அவர் நடத்திய டிராமாவை காங்கிரசு மதித்து எந்த உத்திரவாதத்தையும் அளிக்காத நிலையிலும் இனிமேலும் மேற்படி நாடகத்தைத் தொடர்ந்தால் தான் இத்தனை ஆண்டுகளாக மக்களின் தலையில் மிளகாய் அரைத்து சம்பாதித்த ஆயிரக்கணக்கான கோடிகளை ஆண்டு அனுபவிக்காமல் போய்ச் சேர்ந்து விடுவோம் என்று அஞ்சியே அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கக் கூடும்.
ராம்தேவ் தில்லி வந்தபோது அவரை வரவேற்க நான்கு அமைச்சர்களையும் பின்னர் விரட்டியடிக்க நானூறு போலீசையும் ஏவிவிட்ட காங்கிரசு கும்பல் அவரை இப்போது  எதிர்ப்பதற்கும் ஜனநாயக சக்திகள் ராம்தேவை எதிர்ப்பதற்கும் இடையே உள்ள பாரிய வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இவர்கள் ஊழலின் ஊற்று மூலத்தை ஆதரித்துக் கொண்டே ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் துரோகத்தனத்தையும், இந்த கும்பலின் பின்னேயுள்ள ஜனநாயகமற்ற தன்மையையும், அதன் நீட்சியாய் ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலின் புகலிடமாக இந்தப் போராட்டங்கள் மாறுவதையும் அடிப்படையாய்க் கொண்டே இந்தப் ‘போராட்டங்களை’ விமரிசிக்கிறோம்.
இனி, ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிற அக்கறை உள்ள  மக்களுக்கு, ஊழலின் அடிப்படையாய் இருக்கும் அரசியலை எதிர்த்துப் போராடி முறியடிப்பதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்பதற்கு இப்போது நடந்து வரும் கூத்துகளே துலக்கமான நிரூபணமாய் இருக்கிறது. இனிமேலும் இத்தகைய கைப்புள்ளகைகளின் பின்னே திரளும் காரியவாத அப்பாவிகள் திருந்தினால் அதுவே ஊழல் எதிர்ப்புப் போராட்டத்திற்குச் செய்யப்படும் பேருதவியாக இருக்கும்!

திங்கள், ஜூன் 13, 2011

கண்ணீர்க் கறை by அப்துல்லாஹ்

மறைந்தும் மறையாத மஞ்சள் சூரியனாய் நீ 
உன் முகம் உள்வாங்கிய ஓயாத அலைகடலாய் நான் 
வெளித்தள்ளும் சிப்பிகளாய் வேகாத உன் நினைவுகள் 
மாலையும் இரவும் மயங்கிடும் கணத்தில் உன்னுடன் 
சிணுங்கி கிறங்கி பின் இணங்கிக் களைப்புடன் காதலானேன் 
மாலைகளின் மங்கியஒளியில் கறைபடிந்த காதலாய் நான்மட்டும் 
கூதர்க் காற்றின் குளிராய் நடுக்குகிறது உன் வெறுமை 
நடுக்கடலின் அரவமில்லாத நடுநிசியாய் என் உள்ளம் 
கடலாடி முத்துக்குளித்து கரை சேர்க்கும் பொருள் போல்
உடலாடி உட்புகுந்து உறவாடியவனே 
உப்புக்கரிக்குமென் கண்ணீரைக் கரை சேர்ப்பாயா
கனவுப் புகைக் கூண்டில் கையறுநிலையில் நான்
திசைஏதும் அறியாமல் உள்ளுக்குள் முடங்குகிறேன் 
அடங்கி ஒடுங்கி உன் வரவுக்காய் வாசல் நோக்கி
அழுதழுது ஓய்வதன்றி வேறேதும் அறிகிலேனே 

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்

ஈராண்டுகள் பிரிந்து எமக்கிட்ட பணி முடித்து 
போராடி நான் பெற்ற விடுப்பைக் கொண்டாட 
ஊர் வந்து சேர்ந்தேன் உள்ளமெலாம் மகிழ்ந்தேன் 
உற்றாரும் பெற்றாரும் ஊராரும் என்னருகில் 

எனக்கென்று தனியாக யாருக்கும் தெரியாமல் 
மனக்குறைகள் இறக்கிவைக்கும் சுமைதாங்கிக் கல் போல 
கிழட்டு மரம் ஒன்றுண்டு கிணத்தங்கரை யருகே
வாட்டத்தோடு நீற்க்கும் எனை வாவென்று அழைத்தது அது .

வாஞ்சையோடு நிற்க்கும் இந்த வாகை மரத்தடியில் 
வாழ்க்கையில் நான் பட்ட வலிமிக்க காயங்களை 
வஞ்சனை துரோகங்களை வறுமையின் தழும்புகளை 
வாய் உரக்கச் சொல்லி கண்ணீர் விட்டேன் ஓர் காலம் 

நண்பர்கள் சேர்ந்து ஒன்றாய் கூடிக்களித்ததுண்டு 
நட்பு மட்டும் மிஞ்சி விட நண்பர்கள் போனதெங்கே
சொல்லாத காதல் சுவற்றில் காய்ந்த மழைத்துளி போல் 
பொல்லாத வறுமையால் பிழைக்கச் சென்றேன் அக்கறைக்கு 

காசுக்கு ஆசைப்பட்டு கடனெல்லாம் அடைக்க வேண்டி 
கடலுக்கு அப்பாலும் கை கட்டி சேவை செய்தேன் 
காலங்கள் உருண்டோட கைப்பட்ட காசு எல்லாம் 
காரியங்கள் பல செய்ய கை கொடுத்து நின்றதுவே 

ஐந்து ருபாய் காசு வாப்பாவின் சட்டைப் பையில் 
மாயமாய் போனதற்க்கு அடிபட்டு மிதிபட்டேன் 
தந்தையின் கண்ணில் கண்ட கண்ணீரின் வடுக்கள்
பிந்தி ஓர் நாளில் என்னை நிரபராதி என்றே சொன்னார்

சின்னஞ்ச்சிறு வயதில் நானும் கண்ணுற்ற எந்தன் தந்தை 
இன்னமும் எங்கள் வீட்டில் வசிக்கின்றார் எங்களோடு 
கதி இனி பிள்ளை என்றே கண்களை இடுக்கிப் பார்ப்பார்
அதிகாரம் விட்டுவிட்டார் அலட்டலும் மாறிப் போச்சு

எனக்கொரு மகனும் உண்டு எல்லாமும் அவனுக்குண்டு
தனக்கொரு தேவையென்றால் தாயிடம் பேசுகின்றான்
தந்தையின் பணியைச் செய்ய நானில்லை அவனருகில்
கதி இனி அவன்தான் என்றே எதிர்பார்த்து வாழுகின்றேன்

வாகை மரத்தூரில் நின்று வாசத்தை முகர்ந்து பார்த்தேன்
வாஞ்சையாய் கைகள் கொண்டு வருடி முகம் தன்னில் தேய்த்தேன் 
இன்னும் சில நாட்களிலே உனை விட்டுப் பிரிந்து போவேன்
என்னை நீ மறந்திடாமல் என் வரவுக்காய் காத்திரு ............ 

ஞாயிறு, ஜூன் 12, 2011

ஹேப்பி பெர்ர்ர்ர்ர்த் டேஏஏஏஏ டூஊஊஊ யூ, by அப்துல்லாஹ்

எந்த ஒரு பள்ளியிலும் யூனிஃபார்ம் அணிந்த பிள்ளைகளுக்கு மத்தியில் யாராவது ஒரு பிள்ளை வண்ண உடை அணிந்து காணப்பட்டால் அது பிறந்தநாள்குழந்தை என்று எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். வாய் நிறைய சிரிப்பும், கையில் சாக்லெட் டப்பாவுமாக அன்றைக்கு முழுக்க அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும். ரொம்பவும் வயதில் சிறியதாக இருந்தால் சாக்லெட் டப்பாவில் பாதியை அதுவே காலி பண்ணிவிடும்.

‘பாப்பா, இன்னைக்கு ஸ்கூல்ல எல்லாருக்கும் சாக்லெட் குடுத்தியா? டப்பா காலியா இருக்கு?’

‘கௌஷிக் மூணு சாக்லெட்ட புடுங்கிட்டான்ம்மா.’

‘அதுசரி. நீ எல்லாருக்கும் குடுத்தியா?’

‘சி.வசுமதி வாங்கி தின்னுட்டு நீ குடுக்கவே இல்லெடின்னா.’

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆளாளுக்கு, ஊர் ஊருக்கு மாறுபடுகின்றன. திருநெல்வேலிப் பகுதியில் முதல் பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகளை (அவை எங்கே கொண்டாடுகின்றன?) அவர்களின் நினைவுக்குப் புரியாமலேயே பாடாய்ப்படுத்தி பம்பரமாக ஆக்குவார்கள். முதல்நாள் இரவே வெளியூரிலிருந்து உறவினர்கள் வந்து இறங்கிவிடுவார்கள். வீட்டிற்குள்ளே நுழைந்ததும் செருப்பைக் கிழற்றிப் போட்டுவிட்டு முதல்வேலையாக தொட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை ஈவிரக்கில்லாமல் தூக்கிக் கொஞ்சுவார்கள். அதிலும் சில முரட்டு ஜென்மங்கள் அரைத்தூக்கத்திலிருக்கும் குழந்தையை தூக்கி தட்டாமாலை சுற்றுவார்கள்.

‘ஏல, யாரு வந்திருக்கா பாத்தியா? கொங்கராயக்குறிச்சி அத்த. சொல்லு… கொங்..கரா…யக்..கு..றி..ச்சி அத்த்த்த.’

கொங்கராயக்குறிச்சி என்னும் ஊரின் பெயரை அந்த ஊரின் ஊராட்சிமன்றத் தலைவருக்கேச் சரியாகச் சொல்லவராது. குழந்தை அலறி அழுவதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், ‘அத்த லேட்டா வந்திருக்கேன்னுல்லா கோவப்படுதான்’ என்பார்கள்.

மறுநாள் காலையிலேயே இரண்டு வேன்களில் ஆட்கள் சாமான்களை ஏற்றத் தொடங்குவார்கள். பித்தளை தாம்பாளம், போணிச்சட்டி, தூக்குச்சட்டிகள், எவர்சில்வர் தம்ளர்கள், தட்டுகள், தேங்காய், பழங்கள், மல்லிகை, பிச்சி, கதம்பப் பூமாலைகள், ஒயர்க்கூடைகள், புளியோதரை, எலுமிச்சை, தயிர்சாதத் தயாரிப்புகள், காய்ச்சி ஆறவைத்த தண்ணீர் அடைத்த பாட்டில்கள், சின்ன ஃபிளாஸ்குகள் இவற்றுக்கு மத்தியில் இன்னும் தூக்கக் கலக்கத்தில் உள்ள பிறந்தநாள் குழந்தையும் சிணுங்கிக்கொண்டு யார் மடியிலோ உட்கார்ந்திருக்கும்.

‘எனக்கு, என் தங்கச்சிக்கு, கடைக்குட்டித்தம்பிக்கு அப்புறம் என் பயல்களுக்கு எல்லாருக்கும் திருச்செந்தூர்லதான் மொட்ட போட்டு காது குத்துனது. எங்க அம்மைக்கும் அங்கெதானாம்.’

லட்சத்து சொச்ச தடவையாக ஒரு தாத்தா சொல்லுவார். அநேகமாக அதை எல்லோரும் ஆமோதிப்பார்கள்.

‘ஏ, போற வளில சந்திப்பிள்ளையாருக்கு ஒண்ணு, அப்பொறம் பாளயங்கோட்ட தாண்டும் போது செரட்ட பிள்ளையாருக்கு ஒண்ணு. வெடலய மறந்துராதீங்கடே.’

‘அதெல்லாம் கணேசன் கையிலயே ரெடியா வச்சிருக்கான்.’

கையில் இரண்டு தேங்காய்கள் உள்ள பையுடன் பின்சீட்டில் வாயெல்லாம் பல்லாக கணேசன் உட்கார்ந்திருப்பான். அநேகமாக அவன் திருச்செந்தூர் செல்வது அதுதான் முதல் முறையாக இருக்கும்.

பாளையங்கோட்டை தாண்டியவுடனேயே ஒருவர் சொல்லுவார்.

‘ஏ, அந்த டேப்பத்தான் தட்டி விடுங்களேன். பாட்ட கீட்ட கேட்டுட்டு கொஞ்சம் சந்தோசமாத்தான் போவோமெ. செத்த சவம் மாதிரில்லா உக்காந்துருக்கொம்.’

‘நல்ல காரியத்துக்கு போகும்போது ஒங்க அத்தான் வாயில வார வார்த்தய பாத்தியா? தீயத்தான் வைக்கணும் அவர் வாயில.’

ரகசியமாக அருகிலிருக்கும் பெண்ணிடம் சொல்வாள் அவர் மனைவி.

விரல்சூப்பித் தூங்க ஆரம்பித்திருக்கும் குழ்ந்தையின் தலைக்கு மேலே உள்ள ஸ்பீக்கர் ‘என் உச்சி மண்டைல கிர்ர்ர்ர்ர்ர்ருங்குது’ என்று அலற ஆரம்பிக்க, குழந்தை திடுக்கிட்டு எழுந்து ஸ்பீக்கருக்குப் போட்டியாகக் கதறும். அதன் பெரியம்மையோ, சித்தியோ கோபம் கொள்வாள். என்ன இருந்தாலும் ஒரு தாயில்லையா?

‘எப்பா, அந்த பாட்ட மாத்துங்க. பிள்ளைக்கு புடிக்கல. அளுதான் பாருங்க.’

’புலி உறுமுது புலி உறுமுது’ பாடலுடன் போட்டி போடமுடியாமல் குழந்தை விக்கித்து விசும்ப, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியப்பா முறுக்கு பொட்டலத்தைப் பிரித்து ஆளுக்கொன்றாய் விநியோகித்துவிட்டு மிச்சத்தை மடியில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாய் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடியே தின்ன ஆரம்பிப்பார்.

ஒருமணிநேரப் பயணத்தில் பாட்டையும் ஒலிக்கவிட்டு பெரியவர்களும் இரைச்சலாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். சொல்லமுடியாத துயரத்தில் குழந்தை அழும்போதெல்லாம் இருக்கவே இருக்கிறது, புட்டிப்பால். வலுக்கட்டாயமாக வாயில் திணிப்பார்கள்.

திருச்செந்தூரில் போய் இறங்கும்போதே மற்ற வேன் வந்துவிட்டதா என்ற கவலையில் சுற்றுமுற்றும் பார்ப்பார்கள்.

‘பகவதி அந்த வண்டிலதானே வாரான்? அந்த மூதிக்கு ஒரு ஃபோன போடுங்க. எங்கன வந்துக்கிட்டிருக்கானுவொ. இதுக்குத்தான் நான் அந்த வண்டில வந்திருக்கணும்ங்கென்.’

அந்த வேன் வந்து நிற்பதற்குள்ளாக அதிலிருந்து வீடியோ மற்றும் ஃபோட்டோகிராஃபர் குதித்து ஓடிவருவார்கள்.

‘ஏ, நீங்க இந்த வண்டில வந்திருக்கலாம்லா? எவ்வளவு நேரம் நிக்கோம்?அங் அங்… எடுங்க.’

பின்மண்டையிலிருக்கிற ஒன்றிரண்டு முடியை இழுத்து வழுக்கைத் தலையை மறைக்கும் வண்ணம் சீவியவாறே கேமராவை முறைத்துப் பார்ப்பார் ஒரு மாமா.

’எல, அய்யா. எந்தி. திருச்செந்தூர் வந்தாச்சுல்லா. அன்னா… அங்கெ பாரு கடலு. என்ன பெத்த அய்யால்லா. எந்தி எந்தி.’

அப்போதுதான் தூங்க ஆரம்பித்திருக்கும் குழந்தையின் கன்னத்தைத் தட்டி எழுப்புவார்கள்.

1வெளிப்பிரகாரத்தில் நடந்துவரும்போது கடல்காற்று முகத்தில் அடிக்க, பெரியவர்களுக்கே தூக்கம் வரும். குழந்தைக்குக் கேட்பானேன்? முடியெடுக்கும் இடத்துக்கு வந்து சேர்வதற்குள் அதை மாற்றி மாற்றி வாங்கி ஆளாளுக்குக் கொஞ்சி அதன் கொஞ்சநஞ்சத் தூக்கத்தையும் தொலைப்பார்கள். அழுகையின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் குழந்தை, மொட்டையடிக்கப்போகிறவரைப் பார்த்தவுடன் நிச்சயம் வெடித்து அழத்துவங்கும். ஜடாமுடியும், பெரிய மீசையுமாக இருக்கும் அவர் சிரித்தபடியே , ‘அளக்கூடாது. ஒங்க பேரென்ன ராசா? என் தங்கம்’ என்று வரவேற்பார். குழந்தையின் தாய்மாமனின் மடியில் வைத்து சரட் சரட்டென்று பிஞ்சுத்தலையை மழிக்கத் துவங்கும்போது குழந்தையுடன் சேர்ந்து அருகில் நின்று கொண்டிருக்கும் அதன் தாயும் கண்ணீர் சிந்துவாள். மற்ற உறவினர்கள் காற்று புக இடமில்லாமல் நெருக்கமாக எட்டிப்பார்த்தபடி சூழ்ந்து நிற்பார்கள். ஒருசிலர் கையில் கிலுகிலுப்பை, பலூன், விசில் போன்றவற்றை வாங்கி வந்து அழுது கொண்டிருக்கும் குழந்தையின் முன்னால் வந்து அதன் தாய்மாமனின் காதில் ஊதுவார்கள். தாங்கமாட்டாமல் அவனும் அழ ஆரம்பிப்பான்.

ஒருமாதிரியாக மொட்டை போட்டு முடித்தபின் அழ அழ பிள்ளையைக் குளிப்பாட்டி, மொட்டைத்தலையில் சந்தனத்தை அப்புவார்கள். தாங்கமுடியா எரிச்சலில் குழந்தை கதறத்தொடங்க, அடுத்து காதுகுத்து என்னும் ஆபத்து காத்திருக்கும். இப்போதும் தாய்மாமன் மடிதான் பிள்ளையின் இருக்கை. நாக்கைக் கீழ் உதட்டின் மீது நீட்டியவாறே நாசூக்காக காது குத்த முனைவார் ஆசாரி. எத்தனையோ பிள்ளைகளுக்குக் காது குத்திய அனுபவம் காரணமாக நிதானமாக அதேசமயம் கண்ணிமைக்கும் நேரத்தில் வேலையை முடித்துவிடுவார். இப்போது பயலை சமாதானப்படுத்த பிளாஸ்டிக் நாதஸ்வரம் ஒன்றை வாங்கிவந்து தாய்மாமனின் காதில் வசமாக ஊதுவார் ஒருவர்.

அடுத்து சந்நிதானம் நோக்கிச் செல்வார்கள். கூட்ட நெரிசலில் வேர்த்து விறுவிறுத்து அழுகையும், நடுக்கமும், தூக்கமுமாக இருக்கும் குழந்தையை செந்திலாண்டவன் சன்னதியின் முன் நின்றுகொண்டு ‘எல, அங்கெ பாரு முருகரு. எங்கெ சொல்லு.

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்

சொல்லுலெ. சொல்லுதானா பாரென்.’

ஒருவயதுக் குழந்தையின் கையைப் பிடித்துக் கும்பிட வைத்து நச்சரிப்பாள் அத்தை. அவனுக்கு மட்டும் நன்றாகப் பேசத் தெரிந்திருந்தால் நிச்சயம் அவனது அப்போதைய மனநிலைக்கு பாடாய்ப்படுத்தும் அந்த அத்தையின் தாயாரை வசை பாடியிருப்பான்.

அர்ச்சனை முடிந்து சாமிகும்பிட்டுவிட்டு விடுதிக்கு வந்து பந்தி விரித்து, கொண்டு வந்த எலுமிச்சை, புளியோதரை, தயிர்சாத வகையறாக்களைப் பரிமாறி சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

‘ஏட்டி, ஊறுகாய மறந்துட்டேளா? ஒங்களையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சா என்னன்னு கேக்கென்?’

ஒரு ஓரத்தில் அமர்ந்து பால்குடிக்க மறுக்கும் பிறந்தநாள் குழந்தைக்கு புகட்ட முயன்றுகொண்டிருப்பாள் அதன் தாய்.

சாப்பிட்டு முடிந்து ஆளாளுக்கு ஊர்வம்பு பேசிக் கொண்டே கிளம்ப ஆயத்தமாகும் போது ஒருசிலர் கடல்நீராட சென்றிருப்பார்கள்.

‘எல, ஒங்க அத்தான எங்கெ காணோம்?’

‘திருச்செந்தூர்வரைக்கும் வந்துட்டு கடலாடாம போலாமாய்யா? அதான் அவாள் துண்டக் கட்டிட்டு போயிருக்கா.’

‘ஏ, அவாள் பொத்தாமரைக் கொளத்துல முங்கு போடும்போதே கூட தொணைக்கு நாலுபேரு நிக்கணும். கடல் இளுத்துட்டு போயி எலங்கைல கொண்டு தள்ளீரும். சிங்களன் பயந்துரப் போறான். போயி பாருங்கடே.’

திருச்செந்தூரில் சாயங்காலம் உளுந்தவடை, வாழைக்காய் பஜ்ஜி சகிதம் காப்பி குடித்து விட்டு இரண்டு வேன்களும் கிளம்பும் போது பொழுதுசாயத் தொடங்கியிருக்கும். எல்லோர் தலைகளும் தூக்கத்தில் நடனமாடியபடி பயணிக்க பிறந்தநாள்க்காரன் காய்ந்த சந்தன மொட்டைத்தலையுடன் தன் தாயின் மடியில் கைசூப்பியபடி கொட்டக் கொட்ட முழித்திருப்பான்.

இப்போது ஆங்கிலமுறைப்படி கேக் வெட்டும் கலாச்சாரம் வந்துவிட்டது. ஒருவயது குழந்தையின் பிறந்தநாளுக்கு பேனரெல்லாம் வைக்கிறார்கள். ஒருபுறம் அல்டிமேட் ஸ்டார் ஃபுல்சூட்டில் அட்டகாசமாகச் சிரிக்க, இன்னொருபுறம் இளையதளபதி வேகமாக ஓடி நம்மீது பாய வருகிறார். நடுவில் பிறந்தநாள் குழந்தை மலங்க மலங்க முழித்துக் கொண்டிருக்கிறது.

பிறந்தநாள் குழந்தையே நம்மை வரவேற்பதுபோல அழைப்பிதழ்கள் ஆங்கிலத்தில் அச்சடிக்கப் பட்டு விநியோகிக்கப் படுகின்றன. வசதியுள்ளவர்கள் ஒரு ஹோட்டலின் ஹாலை வாடகைக்கு எடுத்து கொண்டாடுகின்றனர். பெரிய ஸ்பீக்கர்களில் சத்தமாக சின்மயி, தேவன், ராகுல் நம்பியார் போன்றவர்கள் நம்மை வரவேற்கிறார்கள். பெரிய கேக்கின் முன் குழந்தையைத் தூக்கி வந்து, மெழுகுவர்த்தி ஏற்றி, மறுநிமிடமே அணைக்கச் செய்து, பெரியவர்களே பயப்படும்வண்ணம் படார் என்ற சத்தத்துடன் ஒரு வஸ்து வெடித்து ஜிகினாக்கள் வானிலிருந்து நம் தலையை நனைக்கின்றன.

ஹேப்பி பெர்ர்ர்ர்ர்த் டேஏஏஏஏ டூஊஊஊ யூ,
ஹேப்பி பெர்ர்ர்ர்ர்ர்த் டேஏஏஏ டூஊஊஊ யூ
ஹேப்பி பெர்ர்ர்ர்ர்ர்த் டேஏஏஏ டூஊஊஊஊஊஊஊ

(ஏட்டி கொளந்த பேரு என்ன?)

கேக்கை வெட்டி ஆளாளுக்கு குழந்தையின் நாக்கில் பேருக்கு தொட்டுத் தடவி விட்டு, பெரிய பாளத்தை கையில் எடுத்துக்கொண்டு ஒதுங்கி விடுகிறார்கள். அதன் பிறகு குழந்தையின் ஒரு வயது பிறந்தநாளை முன்னிட்டு மதுபான மற்றும் அறுசுவை விருந்து.

எல்லோரும் சாப்பிடும்போது, அழுதுகொண்டிருக்கும் குழந்தையை வேலைக்காரச் சிறுமியிடம் கொடுத்து பார்த்துக்கொள்ளச் சொல்லுவாள் அதன் தாய்.

‘செல்வி, கொஞ்சம் காத்தாட வெளியெ வச்சிரியென். புளுக்கம் தாங்காம அளுதா பாரு.’

மூலக்கரைப்பட்டியிலிருந்து வீட்டு வேலைக்காக வந்திருக்கும் செல்வி குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து சாலையில் செல்லும் கார்களைக் காண்பிப்பாள். பிறப்பதற்கு முன்பே தகப்பனையும், பிறந்தவுடன் தாயையும் முழுங்கிய செல்விக்கு அவளது பிறந்த நாள் நிச்சயம் தெரிந்திருக்காது.

நன்றி: சுகா
வேணுவனம்

Related Posts Plugin for WordPress, Blogger...