சனி, நவம்பர் 26, 2011

எனக்கென இங்கு எல்லாம் சூனியம்


எனக்கென்று ஒரு கூடு 
அது தினமும் நான் இளைப்பாற

எனக்கென்று தனியறை
என்னை ஒதுக்கிக் கொள்ள...


எனக்கென்று உடை
எனது உடலம் மூடவும்
அலங்கரிக்கவுமெனில்...

எனக்கென சில வஸ்துகள் 
அவற்றில் சில 
என்னுடனே உயிரோடும் 
சில உயிரற்றும் எனில்...
இன்றும் இவை எனக்கென 
பொய்யாய் போலியாய்.... 

என் கவலைகள் உள்ளிட்ட 
களிப்புகளும் 
கல்பின் காயங்களும் 
அதன் களிம்புகளும் 
என் உடைமைகளாய்
ஒரு துருவேறிய 
ரெங்குப் பெட்டியாய் வாய் திறந்து 
ஒரு மூலையில்முடங்கிய 
என் மனசுக்குள் 
துடைக்கமுடியா 
துன்பியல் அனுபவங்களை 
அள்ளித் திணித்து 


எனக்கென ஒரு ஆகாயமின்றி
பெய்யாத மழையாய் 
என் அழுகை நித்தமும் 


உயிர்க்கூட்டில் மாத்திரம் 
ஒருவருக்கும் தெரியாமல்
நான் அழ ..

எனக்கென்று எதுவும் என்னை 
நிரந்தரமாய் மகிழ்விக்க 
இங்கில்லாத போது 


என்கூடும் என் உடமைகளும்
என் தேடிப் பெற்ற செல்வமனைத்தும் 
சூனியம் தான் 
அதான் கணிதமும் கைசேதம் தான் ....
அதன்வழி 
என் காயமும் கவலைகளும்
நோயுற்ற உடலமும் 
நோன்புற்று நான் கண்ட மகிழ்ச்சியும் 
மட்டுமே வாழ்வின் சூத்திரம் ... 

எனக்கே 
எனக்கென விதிக்கப்பட்ட 
அந்த விடைபெறும் நாளின் 
சடலம் மூடிய வெள்ளாடையும் 
கணப்பு சூட்டுடன் கருவறை போல 
வெட்டி முடிக்கப்பட்ட வெறும்
மண் புதைகுழி 
எனக்கென....இவை மட்டுமே...

எனக்கென்று ஒரு கூடு 
அது தினமும் நான் இளைப்பாற

எனக்கென்று தனியறை
என்னை ஒதுக்கிக் கொள்ள...


எனக்கென்று உடை
எனது உடலம் மூடவும்
அலங்கரிக்கவுமெனில்...

எனக்கென சில வஸ்துகள் 
அவற்றில் சில 
என்னுடனே உயிரோடும் 
சில உயிரற்றும் எனில்...
இன்றும் இவை எனக்கென 
பொய்யாய் போலியாய்.... 

என் கவலைகள் உள்ளிட்ட 
களிப்புகளும் 
கல்பின் காயங்களும் 
அதன் களிம்புகளும் 
என் உடைமைகளாய்
ஒரு துருவேறிய 
ரெங்குப் பெட்டியாய் வாய் திறந்து 
ஒரு மூலையில்முடங்கிய 
என் மனசுக்குள் 
துடைக்கமுடியா 
துன்பியல் அனுபவங்களை 
அள்ளித் திணித்து 


எனக்கென ஒரு ஆகாயமின்றி
பெய்யாத மழையாய் 
என் அழுகை நித்தமும் 


உயிர்க்கூட்டில் மாத்திரம் 
ஒருவருக்கும் தெரியாமல்
நான் அழ ..

எனக்கென்று எதுவும் என்னை 
நிரந்தரமாய் மகிழ்விக்க 
இங்கில்லாத போது 


என்கூடும் என் உடமைகளும்
என் தேடிப் பெற்ற செல்வமனைத்தும் 
சூனியம் தான் 
அதான் கணிதமும் கைசேதம் தான் ....
அதன்வழி 
என் காயமும் கவலைகளும்
நோயுற்ற உடலமும் 
நோன்புற்று நான் கண்ட மகிழ்ச்சியும் 
மட்டுமே வாழ்வின் சூத்திரம் ... 

எனக்கே 
எனக்கென விதிக்கப்பட்ட 
அந்த விடைபெறும் நாளின் 
சடலம் மூடிய வெள்ளாடையும் 
கணப்பு சூட்டுடன் கருவறை போல 
வெட்டி முடிக்கப்பட்ட வெறும்
மண் புதைகுழி 
எனக்கென....இவை மட்டுமே...

வெள்ளி, நவம்பர் 25, 2011

ஏன் என்னை நான் நேசிக்கவில்லை ...



நான் என்னுள்ளே 
என்னைக் கேட்கும் ஒரு கேள்வி 
என்னை எனக்குப் பிடிக்குமா


மற்றவருக்குப் பிடிப்பதும்
பிடிக்காது போதலும்
என்னைப் பொருத்தமட்டில் 
ஒரு பொருட்டே அல்ல 


என் பிள்ளைப் பருவம் தொட்டு
நான் பயணித்த பாதை நெடுக 
என்னை நான் தான் முதலில் 
உற்று நோக்கினேன்


எனது வளர்ச்சியும் வீழ்ச்சியும் 
நான் பற்றியதும் பறிபோனதும்
என் மகிழ்ச்சியும் மன ஒடுக்கமும்
என் கவர்ச்சியும் சகியாத் தன்மையும் 


சீட்டுக்கட்டு கொண்டு சேர்த்த 
கோபுரமாய் நான்


சிறகுகள், வால், அலகு, 
கீறிக் கிழிக்க கோரைப் பல்லுடன் 
நழுவி ஓட என் உடலம் மூடிய 
வளுவளுக்கும் செதில்களுமாய் 
வீரியத்துடன் விரைந்து 
வெற்றிடமாய் உறைந்து போன 
மனித உருவில் நான் 


என் கோரைப்பற்களின் 
பயன்பாட்டில் என்னை நான் 
வெறுத்ததும்


வால் கொஞ்சம் ஆடியபோது 
வாழ்வும் சற்று திசை மாறியதும்...


சூறாவளியாய் சூழ்ந்து பகை 
சுழற்றிடத் துணிந்த கணத்தில் 
வளுவளுக்கும் செதில்களுடன்
வசதியாய் தப்பித்தொலைந்ததும்


கொஞ்சம் உணர ஆரம்பித்தபோது 
கையில் மண்வெட்டியுடன் 
புதைகுழி தோண்டுகிறேன் நான்...


வெட்டப்பட்ட மண்ணின் 
அளவு கொண்டோ 
விரிந்து நிற்கும் குழியின்
நீள ஆழம கண்டோ 
நான் புதையப் போவதில்லை 
என்னைப் புதைக்க 
நானே என்னை அமிழ்த்துவேன்...


நான் நானாக.... என்றுமே
என்னைக் காட்டவில்லை
நான் என்னுடையவனாக 
இருக்க முடியாத போது 
என்னை நான் 
எப்போது நேசிப்பேன்....  





நான் என்னுள்ளே 
என்னைக் கேட்கும் ஒரு கேள்வி 
என்னை எனக்குப் பிடிக்குமா


மற்றவருக்குப் பிடிப்பதும்
பிடிக்காது போதலும்
என்னைப் பொருத்தமட்டில் 
ஒரு பொருட்டே அல்ல 


என் பிள்ளைப் பருவம் தொட்டு
நான் பயணித்த பாதை நெடுக 
என்னை நான் தான் முதலில் 
உற்று நோக்கினேன்


எனது வளர்ச்சியும் வீழ்ச்சியும் 
நான் பற்றியதும் பறிபோனதும்
என் மகிழ்ச்சியும் மன ஒடுக்கமும்
என் கவர்ச்சியும் சகியாத் தன்மையும் 


சீட்டுக்கட்டு கொண்டு சேர்த்த 
கோபுரமாய் நான்


சிறகுகள், வால், அலகு, 
கீறிக் கிழிக்க கோரைப் பல்லுடன் 
நழுவி ஓட என் உடலம் மூடிய 
வளுவளுக்கும் செதில்களுமாய் 
வீரியத்துடன் விரைந்து 
வெற்றிடமாய் உறைந்து போன 
மனித உருவில் நான் 


என் கோரைப்பற்களின் 
பயன்பாட்டில் என்னை நான் 
வெறுத்ததும்


வால் கொஞ்சம் ஆடியபோது 
வாழ்வும் சற்று திசை மாறியதும்...


சூறாவளியாய் சூழ்ந்து பகை 
சுழற்றிடத் துணிந்த கணத்தில் 
வளுவளுக்கும் செதில்களுடன்
வசதியாய் தப்பித்தொலைந்ததும்


கொஞ்சம் உணர ஆரம்பித்தபோது 
கையில் மண்வெட்டியுடன் 
புதைகுழி தோண்டுகிறேன் நான்...


வெட்டப்பட்ட மண்ணின் 
அளவு கொண்டோ 
விரிந்து நிற்கும் குழியின்
நீள ஆழம கண்டோ 
நான் புதையப் போவதில்லை 
என்னைப் புதைக்க 
நானே என்னை அமிழ்த்துவேன்...


நான் நானாக.... என்றுமே
என்னைக் காட்டவில்லை
நான் என்னுடையவனாக 
இருக்க முடியாத போது 
என்னை நான் 
எப்போது நேசிப்பேன்....  



ஞாயிறு, நவம்பர் 20, 2011

அன்னை பூமியில் - அப்துல்லாஹ்


அன்னையின் மடியில் சாய்வதும் இன்பம் 
அன்னை பூமியில் வாழ்வதும் இன்பம்

ஆலைகளும் சோலைகளும் சாலைகளும் 
அழகிய மலைத்தொடர் ஆற்று நன்னீர் 
உழவுகள் பயிர்பச்சை ஓடு வேய்ந்த வீடு 
ஒட்டுத்திண்ணை ஒட்டிய உறவுகளுடன்
நல்ல பகலிலும் நடுச்சாமத்திலும் 
கூப்பிட்ட குரலுக்கு குவிந்திடும் பந்தங்கள் சூழ ...

நாட்டிலோர் வாழ்க்கை நயமுடன் வாழ
தேட்டமும் தேவையும் மனதோடு மட்டும்
திட்டமும் தீட்டி காத்திருக்கையில்
நோட்டமிடுவதும் பின்னர் வாட்டம் கொள்வதும்
வழமையாய் போன வாழ்க்கையின் கூறு 

தேனாறும் பாலாரும் தெள்ளு தமிழ் நாடெங்கும் ஓடி 
கள்ளர் பயம் கடும் விலை இத்துயர் கனவில் கூட இன்றி 
நல்லதொரு மக்களாட்சி மலர்ந்து விடும் என்றும்
நாமொரு நாள் அங்கு சென்று நலம் பெறவே நினைத்தோம்...


மாற்றம் வேண்டும் என்று மக்களெல்லாம் வாக்களித்து 
மண்ணள்ளிப் போட்டாரோ மாண்பு மிக்க தம் வாழ்வில் 
ஏற்றம் பெறவேண்டும் என எண்ணித் துணிந்ததனால் 
ஏமாற்றம் தனைக்கண்டு இழிநிலைக் காளானார்

இலவசமாய் அரிசி தந்தார் இருக்கு அது மூலையிலே 
விலை விஷம்போல் ஏறியதால் வேகவைக்க வழியின்றி
பாலும் பேருந்தும் சிட்டாய்ப் பறக்குது சிகரம் நோக்கி 
பாழாப் போன மின் இருட்டுக்கும் ஏறிப்போச்சு துட்டு 

காட்டுக் கூச்சலினி கட்டாயம் எடுபடாது 
கண்ணீரும் கவலைகளும் கைசேதம் துடைக்காது
நாட்டுக்குப் போவோம் எனும் நல்லெண்ணம் இனிவேண்டாம் 
நல்லதோ கெட்டதோ இங்கேயே இனிச் சாவோம்..


அன்னையின் மடியில் சாய்வதும் இன்பம் 
அன்னை பூமியில் வாழ்வதும் இன்பம்

ஆலைகளும் சோலைகளும் சாலைகளும் 
அழகிய மலைத்தொடர் ஆற்று நன்னீர் 
உழவுகள் பயிர்பச்சை ஓடு வேய்ந்த வீடு 
ஒட்டுத்திண்ணை ஒட்டிய உறவுகளுடன்
நல்ல பகலிலும் நடுச்சாமத்திலும் 
கூப்பிட்ட குரலுக்கு குவிந்திடும் பந்தங்கள் சூழ ...

நாட்டிலோர் வாழ்க்கை நயமுடன் வாழ
தேட்டமும் தேவையும் மனதோடு மட்டும்
திட்டமும் தீட்டி காத்திருக்கையில்
நோட்டமிடுவதும் பின்னர் வாட்டம் கொள்வதும்
வழமையாய் போன வாழ்க்கையின் கூறு 

தேனாறும் பாலாரும் தெள்ளு தமிழ் நாடெங்கும் ஓடி 
கள்ளர் பயம் கடும் விலை இத்துயர் கனவில் கூட இன்றி 
நல்லதொரு மக்களாட்சி மலர்ந்து விடும் என்றும்
நாமொரு நாள் அங்கு சென்று நலம் பெறவே நினைத்தோம்...


மாற்றம் வேண்டும் என்று மக்களெல்லாம் வாக்களித்து 
மண்ணள்ளிப் போட்டாரோ மாண்பு மிக்க தம் வாழ்வில் 
ஏற்றம் பெறவேண்டும் என எண்ணித் துணிந்ததனால் 
ஏமாற்றம் தனைக்கண்டு இழிநிலைக் காளானார்

இலவசமாய் அரிசி தந்தார் இருக்கு அது மூலையிலே 
விலை விஷம்போல் ஏறியதால் வேகவைக்க வழியின்றி
பாலும் பேருந்தும் சிட்டாய்ப் பறக்குது சிகரம் நோக்கி 
பாழாப் போன மின் இருட்டுக்கும் ஏறிப்போச்சு துட்டு 

காட்டுக் கூச்சலினி கட்டாயம் எடுபடாது 
கண்ணீரும் கவலைகளும் கைசேதம் துடைக்காது
நாட்டுக்குப் போவோம் எனும் நல்லெண்ணம் இனிவேண்டாம் 
நல்லதோ கெட்டதோ இங்கேயே இனிச் சாவோம்..

வினாக்குறி வாழ்க்கை - அப்துல்லாஹ்



பிறப்பின் ரகசியம் அது
பெற்றவள் பேணுவது
உண்மை தானே

நதி மூலம் ரிஷிமூலம் போல்
அவன் வழிமூலம் காண
ஆணிவேர்ப் பாதையும்
அதன் வழிப் பிறவியும்..

உதிக்கும் பரிதியின் செக்கரு வானைப் போல
உதைத்துப் புரண்ட செந்நிற உதரமும்
உரிய நேரத்தில் உடைந்த பெருக்கில்
உள்ளிருந்து வெளியே உருவுடன் வந்த
அவன்

ஆசையாய் கேட்டான்
அன்னையிடத்தில்
.
அட போடா
அது ஒரு இருளில் ஆகாரம் வாங்க
அவசரமாக அவிழ்த்தில் முகிழ்த்ததோ

அன்றி
நான் தான் வேண்டுமென சுட்டிய விரலின்
விரித்த படுக்கையில் விளைந்த வித்தோ

வேறு

கால்டாக்சியின் உள்ளோ
காதலர் பூங்காவிலோ
காய்கறிக் காரன்
கைவண்டிக்காரன் என
காசு வீசிக் கருவிதைக்கும்
காமாந்தகன்
யாரோ....
நிச்சயம் அவன் ஒருவன் காரணன்...

அவனை எனக்கும் தெரியவில்லை

ஆனால் ஒன்று மட்டும் உறுதி 
சாந்தி முகூர்த்தக் கட்டிலில் 
சந்தர்பம் பார்த்து புகுந்ததல்ல 
கர்ப்பபாத்திரத்துள்...
உன் உள்ளமை 



பிறப்பின் ரகசியம் அது
பெற்றவள் பேணுவது
உண்மை தானே

நதி மூலம் ரிஷிமூலம் போல்
அவன் வழிமூலம் காண
ஆணிவேர்ப் பாதையும்
அதன் வழிப் பிறவியும்..

உதிக்கும் பரிதியின் செக்கரு வானைப் போல
உதைத்துப் புரண்ட செந்நிற உதரமும்
உரிய நேரத்தில் உடைந்த பெருக்கில்
உள்ளிருந்து வெளியே உருவுடன் வந்த
அவன்

ஆசையாய் கேட்டான்
அன்னையிடத்தில்
.
அட போடா
அது ஒரு இருளில் ஆகாரம் வாங்க
அவசரமாக அவிழ்த்தில் முகிழ்த்ததோ

அன்றி
நான் தான் வேண்டுமென சுட்டிய விரலின்
விரித்த படுக்கையில் விளைந்த வித்தோ

வேறு

கால்டாக்சியின் உள்ளோ
காதலர் பூங்காவிலோ
காய்கறிக் காரன்
கைவண்டிக்காரன் என
காசு வீசிக் கருவிதைக்கும்
காமாந்தகன்
யாரோ....
நிச்சயம் அவன் ஒருவன் காரணன்...

அவனை எனக்கும் தெரியவில்லை

ஆனால் ஒன்று மட்டும் உறுதி 
சாந்தி முகூர்த்தக் கட்டிலில் 
சந்தர்பம் பார்த்து புகுந்ததல்ல 
கர்ப்பபாத்திரத்துள்...
உன் உள்ளமை 

செவ்வாய், நவம்பர் 15, 2011

பூங்கதவின் தாழ் - அப்துல்லாஹ்


திங்கள், நவம்பர் 14, 2011

பொற்ச்சித்திரம் - அப்துல்லாஹ்




கண்களால் காண்பீர் களிப்பீர் - மடல் இரண்டு 
காதுகள் உமக்கு மொழியுணர உணர்த்த எனில் 
நாசித்துளை வழியே நறுமணத்தை ருசி சுவாசி
பற்களும் கால்களும் இதழ்களும் புருவமும் 
கழுத்தும் நன்நெஞ்சும் தடந்தோள் கைகளும் 
அவற்றிடை விரல்களும் அதனதன் தொழில் செய்ய


குறைவிலா அங்கங்கள் அத்தனையும் அவர் பெற்று 
மறைவில் செய்வதெல்லாம் மானங்கெட்ட தொழிலம்மா 
பாழும் வையமதில் பண்பற்ற தொழில் செய்வோர் 
பசிக்குத் தன்குஞ்சை புசித்திடும் கோலம கொண்டு 


விசத்திர மனிதர் கூட்டம் விளையாடும் இப்புவியில் 
குற்றமிலா மாதே நின் பொற்பாதம் வடிப்பது 
குறைவிலாச்சித்திரமெனில் நீ இந்த மண்ணின் 
மங்கை வடிவெடுத்த பொற்ச்சித்திரமே....



கண்களால் காண்பீர் களிப்பீர் - மடல் இரண்டு 
காதுகள் உமக்கு மொழியுணர உணர்த்த எனில் 
நாசித்துளை வழியே நறுமணத்தை ருசி சுவாசி
பற்களும் கால்களும் இதழ்களும் புருவமும் 
கழுத்தும் நன்நெஞ்சும் தடந்தோள் கைகளும் 
அவற்றிடை விரல்களும் அதனதன் தொழில் செய்ய


குறைவிலா அங்கங்கள் அத்தனையும் அவர் பெற்று 
மறைவில் செய்வதெல்லாம் மானங்கெட்ட தொழிலம்மா 
பாழும் வையமதில் பண்பற்ற தொழில் செய்வோர் 
பசிக்குத் தன்குஞ்சை புசித்திடும் கோலம கொண்டு 


விசத்திர மனிதர் கூட்டம் விளையாடும் இப்புவியில் 
குற்றமிலா மாதே நின் பொற்பாதம் வடிப்பது 
குறைவிலாச்சித்திரமெனில் நீ இந்த மண்ணின் 
மங்கை வடிவெடுத்த பொற்ச்சித்திரமே....

ஞாயிறு, நவம்பர் 13, 2011

வெற்றுக் கோடுகளாய் - அப்துல்லாஹ்



இறுதியாய் உதிர்த்த வார்த்தைகள் 
அவளுக்குச் சாதாரணம் 
ஆனால் எனக்கு சாகா ரணம் ...


காதல் இன்பம் துன்பம் 
இரண்டும் தரலாம் - ஆனால்
உயிருடன் வைத்துக்கொண்டே
மரணிக்கச் செய்யுமா? 


என் நினைவுகளை நான் நேசிக்கிறேன் 
எங்கே சுற்றினாலும் இறுதியில் 
அவளில் நிலை கொள்ளுவதால் 


உறக்கம் மறந்து அவளையே நினைப்பது
உவகை தருவதனால் - வேண்டுமென்றே 
உறக்கம் தொலைக்கிறேன் 
மகிழ்வதற்காக...


நானென்பது 
செத்துப்போன நானும் 
என்னை வீழ்த்திய
அவளையும் சேர்த்துத் தான் 


நெருப்பின்சூடு 
பனியின் குளிர்
மலரின் மென்மை
பொருந்திய அவளில் 
நான் என்னவாக?


அவள் இமைப் பறவையின் சிறகடிப்பில் 
எழுத நினைத்தவை காயப்படுகின்றன..
அந்தக்கன்னக்குழியில் என்னை நான்
வீழ்த்தி அழுந்தப் புதைந்ததால் 
மைஎழுதிய வேல் விழிமுனையால் 
மையிழந்த என் தூரிகை வரைவது 
வெறும் வண்ணமிலாக்கோடுகளே...
அவை அவளில்லாத
என் வாழ் கையைப் போல...







இறுதியாய் உதிர்த்த வார்த்தைகள் 
அவளுக்குச் சாதாரணம் 
ஆனால் எனக்கு சாகா ரணம் ...


காதல் இன்பம் துன்பம் 
இரண்டும் தரலாம் - ஆனால்
உயிருடன் வைத்துக்கொண்டே
மரணிக்கச் செய்யுமா? 


என் நினைவுகளை நான் நேசிக்கிறேன் 
எங்கே சுற்றினாலும் இறுதியில் 
அவளில் நிலை கொள்ளுவதால் 


உறக்கம் மறந்து அவளையே நினைப்பது
உவகை தருவதனால் - வேண்டுமென்றே 
உறக்கம் தொலைக்கிறேன் 
மகிழ்வதற்காக...


நானென்பது 
செத்துப்போன நானும் 
என்னை வீழ்த்திய
அவளையும் சேர்த்துத் தான் 


நெருப்பின்சூடு 
பனியின் குளிர்
மலரின் மென்மை
பொருந்திய அவளில் 
நான் என்னவாக?


அவள் இமைப் பறவையின் சிறகடிப்பில் 
எழுத நினைத்தவை காயப்படுகின்றன..
அந்தக்கன்னக்குழியில் என்னை நான்
வீழ்த்தி அழுந்தப் புதைந்ததால் 
மைஎழுதிய வேல் விழிமுனையால் 
மையிழந்த என் தூரிகை வரைவது 
வெறும் வண்ணமிலாக்கோடுகளே...
அவை அவளில்லாத
என் வாழ் கையைப் போல...





சனி, நவம்பர் 05, 2011

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்...


புதன், நவம்பர் 02, 2011

உயிர் வாழும் அஃறிணைகள்...அப்துல்லாஹ்





உள்ளே நுழைந்தவுடன் வரவேற்ற
அரையடியகல மிதியுடன்
மரத்தாலான ஏணி
அதில் மிதித்த
பாத தடங்களின்
வளுவளுப்போடு


கைப்பிடியுடைய தேக்கு
நாற்காலி இருப்புப் பலகை
பளபளப்புடன்


இரண்டு மெல்லிய வெந்தேக்குப்
பலகைகள் வேய்ந்த
கீறிய இடைவெளிகளுடன்
சட்டம் கட்டிய
மரவணை க் கட்டில்
அப்பாவின் சாந்தி முகூர்த்தம்
உள்ளடக்கம் அனைத்து
உறவுகளையும் சுமந்த
ராசியான கட்டில்...


வெத்திலைச் செல்லம்
அது என்ன உலோகம்
தாத்தாவின் விரல் மற்றும்
மடி தழுவி வாழ்ந்த
அதே மினுக்கத்துடன்


பாய்கள் தலையணைகள்
ஜமக்காளம் தட்டை மற்றும்
உருளி உள்ளிட்ட பாத்திரங்கள்


ஆட்டுரல் கல் தொட்டி கடந்து
உரலருகே நின்ற போது
நெஞ்சை அடைத்த
துக்கம் தொண்டைக்கு வர
அதன் வளவளப்பான
வடிவு வரைந்த விளிம்பில்
கூர்ந்து நோக்கினேன் தேடினேன்
காய்ந்த ரத்தக்கரையை


மடமைக் காலத்தில்
அப்பா வெறியுடன் தள்ளியதால்
தட்டுத் தடுமாறி அம்மா
தன் நெற்றியால் மோதிய
ரத்த அடையாளம்
தென்படவேயில்லை


ஆதுரத்துடன் தடவினேன்
அந்த உரலை அதே சூடு
அதே மின்னுட்டம்
என் தாயின் மடிக்கணகணப்பு


நீதிமன்ற கண்காணிப்பில்
பாகப் பிரிவினையில்
பங்கிடமுடியாத
யாருக்கும் பயனற்ற
எங்களின் அந்தப்
பழைய வீட்டில் நான்


ம்ஹூம்
அத்தனையும் இந்தப்
பிரபஞ்சத்தில் ...
அஃறிணைகளின்
நிலைப்புகளாகவும்
அன்புறவுகளின்
நினைவுகளாகவும் மட்டுமே...




உள்ளே நுழைந்தவுடன் வரவேற்ற
அரையடியகல மிதியுடன்
மரத்தாலான ஏணி
அதில் மிதித்த
பாத தடங்களின்
வளுவளுப்போடு


கைப்பிடியுடைய தேக்கு
நாற்காலி இருப்புப் பலகை
பளபளப்புடன்


இரண்டு மெல்லிய வெந்தேக்குப்
பலகைகள் வேய்ந்த
கீறிய இடைவெளிகளுடன்
சட்டம் கட்டிய
மரவணை க் கட்டில்
அப்பாவின் சாந்தி முகூர்த்தம்
உள்ளடக்கம் அனைத்து
உறவுகளையும் சுமந்த
ராசியான கட்டில்...


வெத்திலைச் செல்லம்
அது என்ன உலோகம்
தாத்தாவின் விரல் மற்றும்
மடி தழுவி வாழ்ந்த
அதே மினுக்கத்துடன்


பாய்கள் தலையணைகள்
ஜமக்காளம் தட்டை மற்றும்
உருளி உள்ளிட்ட பாத்திரங்கள்


ஆட்டுரல் கல் தொட்டி கடந்து
உரலருகே நின்ற போது
நெஞ்சை அடைத்த
துக்கம் தொண்டைக்கு வர
அதன் வளவளப்பான
வடிவு வரைந்த விளிம்பில்
கூர்ந்து நோக்கினேன் தேடினேன்
காய்ந்த ரத்தக்கரையை


மடமைக் காலத்தில்
அப்பா வெறியுடன் தள்ளியதால்
தட்டுத் தடுமாறி அம்மா
தன் நெற்றியால் மோதிய
ரத்த அடையாளம்
தென்படவேயில்லை


ஆதுரத்துடன் தடவினேன்
அந்த உரலை அதே சூடு
அதே மின்னுட்டம்
என் தாயின் மடிக்கணகணப்பு


நீதிமன்ற கண்காணிப்பில்
பாகப் பிரிவினையில்
பங்கிடமுடியாத
யாருக்கும் பயனற்ற
எங்களின் அந்தப்
பழைய வீட்டில் நான்


ம்ஹூம்
அத்தனையும் இந்தப்
பிரபஞ்சத்தில் ...
அஃறிணைகளின்
நிலைப்புகளாகவும்
அன்புறவுகளின்
நினைவுகளாகவும் மட்டுமே...
Related Posts Plugin for WordPress, Blogger...