கையில் குழந்தை கைப்பையுடன்
கலைந்த கேசமும் களைப்புமாய்
காலத்தின் காற்றுச் சூறாவளியீல்
கைசேதப்பட்ட என் காதலி பேருந்துக்காய்
அவள் பார்த்த பார்வையில் அதே
ஆயிரம் காந்தம் ஆனாலும் இன்று
அயலான் மனைவியாய் அன்னியமாகாமல்
அன்று நான் கண்ட நிலவும் மயிலும் இவளோ?
சிறிய புன்னகை உதட்டில் அளவோடு
சிதறிப்போன அவளின் நினைவுகள் என்னோடு
மர நிழலுக்கு ஒதுங்கி நிற்க்கும் அவள்
மறந்தும் கூட என் கண்ணைப் பார்க்கவில்லை
அவளையும் என்னையும் ஒருங்கே கண்டு
அருகில் வந்த என் மனைவி
ஆறுதலாய் தோளில் கைவைத்து சொன்னாள்
விதி! வாங்கப்பா நாம போவோம்
கண்ணீருடன் நானும் அவளும்
மனைவியும் சேர்ந்தே மகிழ்ச்சியை இழந்தோம்
காய்ந்த இலை ஒன்று காற்றில் அலைந்து
கடைசியில் காலடியில் மஞ்சள் சருகாய்.
கலைந்த கேசமும் களைப்புமாய்
காலத்தின் காற்றுச் சூறாவளியீல்
கைசேதப்பட்ட என் காதலி பேருந்துக்காய்
அவள் பார்த்த பார்வையில் அதே
ஆயிரம் காந்தம் ஆனாலும் இன்று
அயலான் மனைவியாய் அன்னியமாகாமல்
அன்று நான் கண்ட நிலவும் மயிலும் இவளோ?
சிறிய புன்னகை உதட்டில் அளவோடு
சிதறிப்போன அவளின் நினைவுகள் என்னோடு
மர நிழலுக்கு ஒதுங்கி நிற்க்கும் அவள்
மறந்தும் கூட என் கண்ணைப் பார்க்கவில்லை
அவளையும் என்னையும் ஒருங்கே கண்டு
அருகில் வந்த என் மனைவி
ஆறுதலாய் தோளில் கைவைத்து சொன்னாள்
விதி! வாங்கப்பா நாம போவோம்
கண்ணீருடன் நானும் அவளும்
மனைவியும் சேர்ந்தே மகிழ்ச்சியை இழந்தோம்
காய்ந்த இலை ஒன்று காற்றில் அலைந்து
கடைசியில் காலடியில் மஞ்சள் சருகாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக